முள்ளங்கி சப்பாத்தி செய்முறை

mullangi chapathi
- Advertisement -

இட்லி தோசை சப்பாத்தி என்று சாப்பிடுபவர்கள் அதன் அடிப்படையிலேயே வித்தியாசமான சுவையில் புதிதாக ரெசிபிகளை செய்து சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அந்த வகையில் ஆரோக்கியமான காய்கறிகளை சேர்த்து இட்லியோ, தோசையோ, சப்பாத்தியோ செய்யும் பொழுது டிபனுக்கு டிபனும் ஆகிவிடும். ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமும் ஆகிவிடும். அந்த வகையில் முள்ளங்கியை வைத்து சப்பாத்தி செய்யும் முறையை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

முள்ளங்கியில் உடலுக்கு தேவையான அளவு புரதங்களும், நார்ச்சத்துகளும் நிறைந்து இருக்கிறது. மேலும் பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற தாதுக்களும் விட்டமின் சி யும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. முள்ளங்கியை உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் காய்ச்சல் குறையும். நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கிறது. மஞ்சள் காமாலை நோய்க்கு சிறந்த மருந்தாக திகழ்கிறது. சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • முள்ளங்கி – 2
  • கொத்தமல்லி பொடியாக நறுக்கியது – ஒரு கைப்பிடி அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • காய்ந்த மிளகாய் – 5
  • மல்லி – 3 டீஸ்பூன்
  • பூண்டு – 5 பல்
  • இஞ்சி- 1 இன்ச்
  • சீரகம் – 1/2 டீஸ்பூன்
  • கோதுமை மாவு – 2 கப்

செய்முறை

முதலில் முள்ளங்கியின் தோலை நீக்கிவிட்டு அதை கேரட் உரசுவது போல் உரசிக்கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தலையையும் தூவி தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக கலந்து ஒரு தட்டை போட்டு மூடி வைத்துவிட வேண்டும்.

20 நிமிடம் கழித்து அதை திறந்து பார்க்கும் பொழுது அதில் தண்ணீர் அதிகமாக சேர்ந்திருக்கும். அதை அப்படியே வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் காய்ந்த மிளகாய், மல்லி, சீரகம், இஞ்சி, பூண்டு போன்றவற்றை சேர்த்து சிறிதளவு மட்டும் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த விழுதை முள்ளங்கியுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இதில் கோதுமை மாவை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிணைந்து கொள்ள வேண்டும். முள்ளங்கியில் தண்ணீர் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மேல் சொன்ன அளவை விட சற்று அதிகமாக சேர்க்க வேண்டிய சூழ்நிலை உண்டாக்கும். சப்பாத்தி மாவு பதத்திற்கு பிணைந்து விட்டு மேலே சிறிதளவு எண்ணெயை தடவி பத்து நிமிடம் அப்படியே மூட வைத்து விடுங்கள்.

10 நிமிடம் கழித்து எப்போதும் போல் சப்பாத்தி தேய்ப்பது போல் தேய்த்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு தூரம் மெல்லியதாக தேக்க முடியுமோ அவ்வளவு தூரம் மெல்லியதாக தேய்த்து சப்பாத்தி சுட வேண்டும். அப்பொழுதுதான் சப்பாத்தியில் இருக்கக்கூடிய முள்ளங்கி வேகும். இந்த சப்பாத்திக்கு தேங்காய் சட்னி அல்லது தயிர் பச்சடி போன்றவற்றை வைத்தும் தொட்டுக் கொள்ளலாம். எதுவும் இல்லாமலும் சாப்பிடலாம்.

இதையும் படிக்கலாமே: பீட்ரூட் பர்பி செய்முறை

பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட முள்ளங்கியை சாப்பிட பிடிக்காதவர்களுக்கு இந்த முறையில் சப்பாத்தி செய்து தருவதன் மூலம் விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -