முள்ளங்கியில் செய்த பொரியலா இது? யாருமே நம்ப மாட்டாங்க. முள்ளங்கி பொரியலை புது விதமாக இப்படி செஞ்சு பாருங்களேன். செம சூப்பரா இருக்கும்.

- Advertisement -

புது விதமாக ஒரு மசாலாவை அரைத்துக் போட்டு முள்ளங்கி பொரியலை இப்படி மட்டும் செய்து பாருங்கள். இது முள்ளங்கியில் செய்த பொரியலா என்று எல்லோரும் ஆச்சரியப்படும் அளவிற்கு இதன் சுவை அவ்வளவு அற்புதமாக இருக்கும். நீர்ச்சத்து நிறைந்த முள்ளங்கியை அடிக்கடி உணவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். நிறைய பேருக்கு முள்ளங்கியில் இருந்து வீசும் ஒரு வாடை பிடிக்காது. அந்த வாடை இந்த முள்ளங்கி பொரியல் சுத்தமாக தெரியாது. ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்களேன்.

poriyal1

முதலில் 1/2 கிலோ அளவு முள்ளங்கியை எடுத்து தோல் சீவி சதுரமாக வெட்டிக் கொள்ள வேண்டும். அதாவது கியூப் வடிவில் முழங்கைகளை வெட்டி வைத்துக்கொள்ளுங்கள். அதன் பின்பு அடுப்பில் ஒரு கடாயை வைத்து, அதில் வெட்டிய முள்ளங்கியை போட்டு, முள்ளங்கி மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள், 1/2 ஸ்பூன் உப்பு, போட்டு நன்றாக கலந்து விட்டு ஒரு மூடி போட்டு முள்ளங்கியை பக்குவமாக வேக வைக்க வேண்டும். முள்ளங்கி வெந்து வரும் பொழுது அதில் தண்ணீர் சுத்தமாக இருக்கக்கூடாது. அந்த அளவிற்கு தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். வெந்த முள்ளங்கி தனியாக அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக முள்ளங்கி பொரியலுக்கு தேவையான மசாலாவை அரைக்கவேண்டும். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் சீரகம் – 1/2 ஸ்பூன், பச்சை மிளகாய் – 4, தோல் உரித்த பூண்டு பல் – 4, கருவேப்பிலை – 1 கொத்து, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், தேங்காய்த் துருவல் – 4 ஸ்பூன், உப்பு – 1/4 ஸ்பூன் சேர்த்து இந்தக் கலவையை தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உப்பு பார்த்து சேர்த்துக்கொள்ளுங்கள். முள்ளங்கியிலும் உப்பு போட்டு வேக வைத்து இருக்கின்றோம் அல்லவா. அரைத்த இந்த மசாலாவும் அப்படியே இருக்கட்டும்.

முள்ளங்கி

அடுத்தபடியாக முள்ளங்கியை தாளித்து பொரியல் செய்ய வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து, அதில் எண்ணெய் 1 – டேபிள்ஸ்பூன் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1/2 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – 1 கொத்து, சேர்த்து இந்த பொருட்களை தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்தபடியாக 1/4 – கப் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு, கண்ணாடி பதம் வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை கடாயில் இருக்கும் எண்ணெயில் போட்டு, 2 நிமிடங்கள் பச்சை வாடை நீங்கும் வரை வதக்கி விடுங்கள். அடுத்தபடியாக வேக வைத்திருக்கும் முள்ளங்கியை கடாயில் சேர்த்து, 2 நிமிடங்கள் நன்றாக மசாலாவோடு கலந்துவிட வேண்டும்.

poriyal3

இறுதியாக கொத்தமல்லி தழைகளைத் தூவி இந்த பொரியலை சுட சுட பரிமாறுங்கள். நிச்சயமாக வீட்டில் இருப்பவர்கள் இதை முள்ளங்கியில் செய்த பொரியல் என்று நம்பவே மாட்டாங்க. அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -