உங்க மேனி முழுவதும் நல்ல மினுமினுப்புடன், கண்ணை கவரும் அழகுடன் மிளிர வேண்டுமானால் முல்தானி மெட்டியை இப்படி தான் பயன்படுத்த வேண்டும். உச்சி முதல் பாதம் வரை அழகாக முல்தானி மெட்டி.

kasthuri manjal face beauty Tips
- Advertisement -

முல்தானி மெட்டி என்பது ஒரு வகை களிமண். முல்தானி மெட்டியை பயன்படுத்தி அழகு படுத்திக் கொள்வது என்பது இன்று நேற்று தொடங்கிய பழக்கம் கிடையாது. அந்த காலம் முதலே பயன்படுத்திய இயற்கையான ஒரு அழகு சாதன பொருள் தான். இப்போது இந்த அழகு குறிப்பு பதிவில் முல்தானி மெட்டியை பயன்படுத்தி சில குறிப்புகளை தெரிந்து கொள்ளலாம்.

முல்தானி மெட்டி பயன்படுத்தி முகத்தை மட்டும் அல்லாமல் உச்சி முதல் பாதம் வரை நம்மை அழகுப்படுத்திக் கொள்ளவும், அதே நேரத்தில் இதை உடலுக்கு ஒரு இயற்கையான மசாஜ் போலவும் பயன்படுத்திக் கொள்ளலாம். அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

முல்தானி மெட்டி அழகு குறிப்புகள்
முதலில் முல்தானியை மெட்டி முகத்திற்கு எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ளலாம். முல்தானி மெட்டியில் சிறிதளவு காய்ச்சாத பாலை சேர்த்து நன்றாக குழைத்து முகத்தில் தேய்த்து வந்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள், அழுக்கு அனைத்தும் நீங்கி முகம் நல்ல பொலிவை பெறும். அதே போல் முல்தானியில் மெட்டியில் ரோஸ் வாட்டரையும் கலந்து தேய்க்கலாம். இதுவும் முகத்திற்கு ஒரு நல்ல பொலிவை தரும். இதே போல் முல்தானி மெட்டியுடன் தயிரை சேர்த்து முகத்தில் தேய்க்கும் போது முகத்தில் இருக்கும் தேவையற்ற இறந்த செல்கள், அனைத்தும் வெளியேறி முகம் பளபளப்பாக இருக்கும்.

தலைக்கு முல்தானி மெட்டியை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம். முல்தானி மெட்டி 1 ஸ்பூன், தயிர் 1 ஸ்பூன், வெட்டி வேர் ஊற வைத்து தண்ணீர் 1 ஸ்பூன், இவை மூன்றையும் ஒன்றாக கலந்து பேஸ்ட் பதத்திற்கு வந்தவுடன் இதை உங்கள் தலையில் வேர்க்கால்களில் தடவி பத்து நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு தலைக்கு குளிக்கும் பொழுது முடி மிருதுவாகவும் நீளமாகவும் வளரும். அது மட்டுமின்றி தலையில் உள்ள அழுக்கு முழுவதும் நீங்குவதுடன் முடி வறட்சி இல்லாமலும் இருக்கும்.

- Advertisement -

தலையில் பேன் பொடுகு தொல்லை இருப்பவர்கள் இந்த பேக்குடன் சிறிதளவு எலுமிச்சை சாறையும் கலந்து தேய்த்தால் இந்த தொல்லைகள் கூட அறவே நீங்கி விடும்.

அடுத்ததாக முல்தானி மெட்டி 2 டேபிள் ஸ்பூன், கடலை மாவு 2 டேபிள் ஸ்பூன், தயிர் 2 டேபிள் ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் 1/4 டீஸ்பூன் இவை அனைத்தையும் குழைத்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் குளிப்பதற்கு முன்பாக முதலில் உங்கள் முழு உடலையும் எண்ணெய் கொண்டு தேய்த்து விடுங்கள். இதற்கு நீங்கள் எந்த எண்ணை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த எண்ணை உடலில் 10 நிமிடம் ஊறிய பிறகு, நீங்கள் குழைத்து வைத்த இந்த பேஸ்ட்டை உடல் முழுவதும் தேய்த்து லேசாக வட்ட வடிவில் மசாஜ் செய்து கொடுங்கள். அதன் பிறகு சோப்பு எதையும் பயன்படுத்தாமல் குளித்து விடுங்கள். வாரத்திற்கு ஒரு முறை இந்தக் குளியலை மேற்கொண்டால் உங்கள் முழு உடலும் நல்ல மினுமினுப்புடன் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: முகம் தங்கம் போல ஜொலிக்க உருளைக்கிழங்கு ஃபேஸ் பேக்

முல்தானி மெட்டியை வைத்து முழு உடலையுமே அழகுபடுத்திக் கொள்ள முடியும். இது விலையும் அதிகம் கிடையாது. இயற்கை நமக்குத் தந்த இது போன்ற அற்புதமான பொருட்களைக் கொண்டு நம்முடைய அழகை தக்க வைத்துக் கொள்ளும் போது உடலுக்கும் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது. இந்தப் பதிவில் உள்ள குறிப்புகள் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -