உருளைக்கிழங்யோடு இந்தப் பொருளை சேர்த்து பேக் போட்டு பாருங்க மூனே நாள்ல சும்மா தகதகன்னு ஜொலிக்க ஆரம்பிச்சிடுவீங்க. அப்புறம் பாருங்க நீங்களே உங்களுடைய ஜொலிப்ப பாத்து பிரம்மிச்சி போய்டுவீங்க..

potato beauty face
- Advertisement -

ஒரு சிலர் பார்க்க நல்ல நிறத்துடன் தான் இருப்பார்கள் ஆனால் கழுத்து, கண், வாய்ப்பகுதி போன்றவற்றில் கருமை படிந்து இருக்கும். ஒரு சிலர் நல்ல நிறமாக இருந்து திடீரென நிறம் குறைந்து கருமையாக மாறி இருப்பார்கள். இப்படியானவர்கள் தங்களின் பழைய நிறத்தை திருப்பிக் கொண்டு வர ஒரு எளிமையான முறை தான் இந்த உருளைக்கிழங்கு பேக். இதை முகம் மட்டும் இல்லை உடல் முழுவதுமே கூட தேய்த்து குளிக்கலாம். நிறத்தை அதிகரிக்க கூடிய அற்புதமான இந்த பேக்கை எப்படி செய்வது என்று இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

உடல் முழுவதும் தங்கம் போல ஜொலிக்க உருளைக்கிழங்கு ஃபேஸ் பேக்:
இந்த பேக் தயாரிக்க முதலில் ஒரு உருளைக்கிழங்கை தோல் சீவி எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு காய் சீவும் சீவலில் துருவி உருளைக்கிழங்கின் சாறை மட்டும் ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது உருளைக்கிழங்கு சாறு 2 ஸ்பூன், கடலை மாவு 1/4 டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் 1 டீஸ்பூன், கெட்டியான அதிகம் புளிக்காத தயிர் 1 ஸ்பூன் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நல்ல பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ளுங்கள்.

உருளைக்கிழங்கு முகத்தில் இருக்கும் கருமைகள் எல்லாம் நீக்கி முகத்தை பளிச்சென்று ஆக்கும் தன்மை உடையது. இத்துடன் சேர்க்கும் கடலை மாவு, தயிர், கஸ்தூரி மஞ்சள் அனைத்துமே முகத்தில் உள்ள இறந்த செல்கள், கருத்திட்டுகள் அனைத்தையும் நீக்கி முகத்தின் நிறத்தை அதிகரிக்க கூடியவை

- Advertisement -

இதை குளிப்பதற்கு முன்பு போடுவதாக இருந்தால் குளிக்க அரை மணி நேரத்திற்கு முன்பாக உடல் முழுவதும் பூசி அதன் பிறகு சோப்பு எதுவும் பயன்படுத்தாமல் குளித்து விடுங்கள். இதையே பேஸ் பேக்காக மட்டும் பயன்படுத்துவதாக இருந்தால், இரவு உறங்க செல்வதற்கு முன்பாக முகத்தை சுத்தமான தண்ணீரால் கழுவிய பிறகு இந்த பேக்கை போட்டு அரைமணி நேரம் கழித்து மறுபடியும் சுத்தம் செய்த பின் உறங்க செல்லுங்கள் போதும்.

இதையும் படிக்கலாமே: முழங்கால், முழங்கை கருமை நீங்க, சருமம் நல்ல நிறம் கூட வீட்டில் 10 நிமிடம் இதை செய்தால் போதுமே!

இதை மூன்று நாட்களுக்கு தொடர்ந்து போட வேண்டும். தினமும் இதை செய்ய சிரமமாக இருந்தால் உருளைக்கிழங்கு சாறை மட்டும் எடுத்து ஐஸ் கியூப் ட்ரெயில் ஊற்றி வைத்து விடுங்கள். தினமும் இரண்டு கியூப் எடுத்து கரைந்த பின் அதன் பிறகு சேர்க்க வேண்டியவற்றை சேர்த்து போட்டுக் கொள்ளுங்கள். இந்த எளிமையான அழகு குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -