முருகனுடைய ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு? எந்தப் பெயரை சொன்னால்! என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

murugan-om
- Advertisement -

இந்து மத கடவுள்களுக்கு ஒவ்வொரு கடவுள்களுக்கும் தனித்துவமான சக்திகள் உண்டு. அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு அவதாரத்திலும் ஒவ்வொரு பெயர்களும் இருக்கும். ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு விதமான பலன்களை கொடுக்கக் கூடிய யோகம் உண்டு. நாம் எப்படி அவர்களை அழைக்கிறோம்? என்பதிலும் சூட்சமம் உள்ளது. அந்த வகையில் தந்தைக்கே உபதேசம் செய்த முருகப் பெருமானுக்கு நூற்றுக்கணக்கான பெயர்கள் உண்டு. அதில் குறிப்பிட்ட சில பெயர்களைச் சொல்லி அழைக்கும் பொழுது கிடைக்கும் பலன்களும் அற்புதமானவையாக இருக்கும். அதைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

om-mantra

முருகனுடைய பல்வேறு பெயர்களில் மிகவும் பிரசித்தி பெற்றவையாக இருப்பவை கந்தன், கதிர்வேலன், கார்த்திகேயன், சண்முகம், வேலன், வடிவேலன், குகன் போன்றவையாகும். இந்த பிரபஞ்சத்தில் சூரியனுடைய வளிமண்டலத்தில் ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரம் கேட்பதாக விஞ்ஞானிகள் சமீபத்தில் கூறினர். ‘ஓம்’ என்னும் மந்திரத்தை அமைதியாக தியானத்தில் உட்கார்ந்து உச்சரிக்கும் பொழுது ‘ஓ’ வில் ஆரம்பித்து ‘ம்’ இல் முடியும் பொழுது அடிவயிறு முதல் கபாலம் வரை அனைத்திலும் அதிர்வலைகள் உண்டாகும். இந்த அதிர்வலைகள் மனிதனை நல்லொழுக்கத்திற்கு கொண்டு செல்வதாக ஆன்மீக வரலாற்று குறிப்புகள் எடுத்து கூறுகிறது.

- Advertisement -

‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்திற்கு உரியவர் முருகப் பெருமான் ஆவார். ஓங்கார வடிவமாக திகழும் முருகன் என்கிற பெயரை உச்சரித்தாலே முக்தி கிடைக்கும் என்று ஆன்மீக சான்றோர்கள் கூறியுள்ளனர். நீங்கள் செவ்வாய், வெள்ளி போன்ற கிழமைகளில் பூஜைகள் செய்யும் பொழுது முருகனுடைய படத்தை நிச்சயம் வைத்திருக்க வேண்டும். முருகன் இருக்கும் வீட்டில் பில்லி, சூனியம், ஏவல் போன்ற பலிப்பதில்லை.

muruga

பூஜையின் பொழுது வாசனை மிகுந்த மலர்கள் கொண்டு முருகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அப்படி அர்ச்சிக்கும் பொழுது, ‘கந்தா’ என்கிற சொல்லை உச்சரித்தால்! அங்கு கருணை பிறக்கிறது. நீங்கள் எவ்வளவு பெரிய கோபக்காரராக இருந்தாலும் கோபம் கட்டுப்படும். மூர்க்கத்தனமான குணங்கள் நீங்கி கருணை பிறக்கும்.

- Advertisement -

‘கடம்பா’ என்று உச்சரித்துக் கொண்டே நீங்கள் அர்ச்சனை செய்யும் பொழுது, நீங்கள் செய்த முன் ஜென்ம பாவ வினைகள் ஆகிய கர்மாக்கள் நீங்கும். ‘கதிர்வேலா’ என்று கூறும் பொழுது கொடிய இச்சைகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள். ‘கார்த்திகேயா’ என்று சொல்லும் பொழுது எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் அது நீங்குகிறது. ‘சரவணா’ என்று உச்சரிக்கும் பொழுது கடல் அலை போல் ஆக்ரோஷமாக இருக்கும் மனம் கூட, அமைதியான தீவு போல் அடங்கிப் போகிறது.

‘குழந்தை வேலா’ என்று உச்சரிக்கும் பொழுது பிள்ளை இல்லாத தம்பதிகளுக்கு விரைவில் பிள்ளை வரம் கிடைக்கப் பெறும். ‘குமரா’ என்று உச்சரித்தால் குறைகள் யாவும் விட்டு விலகும். தரித்திரம் நீங்க ‘தண்டாயுதபாணி’ என்று அழையுங்கள். தைரியம் பிறக்க ‘வேலவா’ என்றும் அழகுடன் மிளிர ‘சேயோன்’ என்றும், பாவங்கள் நீங்க ‘பால முருகன்’ என்றும், சுகங்கள் பெற ‘சுப்ரமணியா’ என்றும் உச்சரித்துக் கொண்டே அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -