சொந்தமாக வீடு, நிலம் வாங்கி கடன் இல்லா பெரு வாழ்வு வாழ செவ்வாய் கிழமையில் முருப்பெருமானை இப்படி வழிபாடு செய்யுங்கள். இதன் பிறகு நீங்கள் வாழ போகும் ராஜ வாழ்கையை யாராலும் தடுக்க முடியாது.

cash-murugan
- Advertisement -

“எலி வலையானாலும் தனி வலையே சிறந்தது” என்ற பழமொழிக்கு இணங்க நாம் அனைவரும் நம் வாழ்நாளில் சொந்தமாக ஒரு மனை வாங்கி வீடு கட்டிக் குடியேற வேண்டும் என்று ஆசைப்படுவோம். பலருக்கு அது நிறைவேறினாலும், சிலருக்கு கனவாகவே இருக்கிறது. அந்தக் கனவை நினைவாக்குவதற்கு முருகனை எவ்வாறு வழிபட வேண்டும் என்று தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

முருகப்பெருமானுக்கு என்று பல விரதங்கள் இருக்கின்றன. பல கோரிக்கைகளை வைத்து அவரை மக்கள் வழிபட்டு வருகின்றனர். அவற்றுள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது முருகப்பெருமானுக்குரிய செவ்வாய் கிழமை விரதம் ஆகும். இந்த விரதத்தை நாம் முறையாக மேற்கொண்டால் எண்ணில் அடங்கா பலன்களை முருகப் பெருமான் அருள்வார். வளர்பிறையில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமையை இந்த விரதத்தை தொடங்குவதற்கு நாம் தேர்வு செய்ய வேண்டும். செவ்வாய்க் கிழமை காலை பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து நீராடி, வீட்டை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இந்த வழிபாட்டின் போது முருகப் பெருமானுக்கு உகந்த நிறமான சிவப்பு நிற ஆடை அணிவது மேலும் சிறப்புக்குரியது.

- Advertisement -

செல்வம் சேர முருகர் வழிபாட்டு முறை:
இந்த வழிப்பாட்டை செய்வதற்கு வீட்டில் விளக்கேற்றி விட்டு அருகில் இருக்கும் முருக பெருமானின் கோவிலுக்கு சென்று நம்முடைய பிரார்த்தனையை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு நாம் வீடு திரும்பி முருகப் பெருமானின் புகைப்படத்திற்கு செந்நிற பூக்களை வைத்து அலங்காரம் செய்து கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்யுங்கள். அன்று முழுவதும் நீராகாரத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு விரதம் மேற் கொள்ள வேண்டும். உடல் நலமில்லாதவர்கள் எளிமையான உணவை எடுத்து கொண்டு விரதத்தை தொடரலாம்.

அன்று மாலை முருகப் பெருமானிற்கு முன்பாக அவருக்கு பிடித்த நெய்வேத்தியமான சக்கரை பொங்கல் அல்லது பாசிப்பருப்பு பாயாசத்தை படைக்க வேண்டும். மேலும் ஆறு அகல் விளக்குகளை எடுத்து அதில் நெய் ஊற்றி பஞ்சுத் திரி போட்டு முருகப் பெருமானிற்கு முன்பாக நட்சத்திர கோலம் போட்டு அதில் அகல் விளக்குகளை வைத்து விளக்கேற்ற வேண்டும்.

- Advertisement -

முருகப்பெருமானுக்கு பிடித்த செவ்வரளி பூக்களை வைத்து அவருக்கு அர்ச்சனை செய்யலாம் அல்லது “ஓம் சரவணபவ” என்னும் மந்திரத்தை உச்சரிக்கலாம். இவ்வாறு செய்த பிறகு கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும். முருகனின் வழிபாட்டில் மிகவும் முக்கியமான ஒன்றாக கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்வது என்று கருதப்படுகிறது.

முருகனுக்கு உரிய எந்த விரதத்தை அனுஷ்டித்தாலும் கண்டிப்பான முறையில் கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அந்த விரதத்திற்குரிய முழு பலனையும் நம்மால் பெற முடியும். இவ்வாறு பாராயணம் செய்த பிறகு, நெய்வேத்தியமாக வைத்த பிரசாதத்தை வீட்டில் இருக்கும் நபர்களுக்கு கொடுத்து விட்டு நாமும் அதை உண்டு விரதத்தை நிறைவு செய்யலாம். அதன் பிறகு மீண்டும் மாலையில் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று முருகப் பெருமானுக்கு இரண்டு நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு, வீடு திரும்ப வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு தொடர்ந்து ஆறு செவ்வாய்க்கிழமைகள் செய்ய வேண்டும். ஆறாவது செவ்வாய்க்கிழமை அன்று கோவிலுக்கு செல்லும் பொழுது சக்கரை பொங்கலை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. மேலும் முருகப் பெருமானுக்கு அபிஷேகத்திற்காக சந்தனம், பன்னீர், விபூதி போன்ற அபிஷேகப் பொருட்களை வாங்கி கொடுப்பது சாலச் சிறந்தது.

இதையும் படிக்காலமே: நாளை மூன்றாம் பிறை தரிசனத்தை இப்படி செய்தால், வாழ்க்கையில் சீக்கிரம் முன்னேறி விடலாம். பணம், பெயர், புகழ், படிப்பு, இப்படி எல்லாமும் உங்களைத் தேடி வர அந்த ஈசனின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைக்கும்.

இவ்வாறு நாம் செவ்வாய்க்கிழமை விரதத்தை மேற்கொள்வதால் அங்காரகனின் பாதிப்புகள் நமக்கு குறையும். மேலும் வீடு, மனை போன்ற அனைத்திற்கும் அதிபதியாக விளங்கும் அங்காரகனின் கருணை பார்வை நம் மேல் படுவதால் நம்முடைய வீடு, மனை பிரச்சனைகள் அனைத்தும் விலகும். மேலும் சொந்த வீட்டில் குடியேறுவதற்கான அனைத்து விதமான சூழ்நிலைகளும் ஏற்படும். தீராத கடன் தொந்தரவில் இருப்பவர்களுக்கு அந்த கடன் பிரச்சனையில் இருந்து வெளி வருவதற்குரிய நல்ல வாய்ப்புகள் அவர்களை தேடி வரும். ஆறுமுகப்பெருமானை ஆறு விளக்குகள் ஏற்றி வழிபட்டு வாழ்க்கையில் ஆனந்தத்தை அடைவோம்.

- Advertisement -