பொடுகு மற்றும் முடி உதிர்தல் பிரச்சினை இருப்பவர்கள் முருங்கைக் கீரை வைத்து வாரத்திற்கு ஒரு முறை ஹேர் பேக் பயன்படுத்தினால் போதும்.

murungai keerai hair pack
- Advertisement -

பொடுகு பிரச்சனை என்பது இன்றைய தலைமுறையில் பலருக்கும் ஏற்படக்கூடிய பொதுவான பிரச்சனையாக திகழ்கிறது. இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. எதனால் இந்த பொடுகு பிரச்சனை ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து அதை சரி செய்தால் தான் பொடுகு பிரச்சனை என்பதை முற்றிலும் நம்மால் தவிர்க்க முடியும். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பொடுகு பிரச்சினையை தடுப்பதற்கும் முடி உதிர்வை நிறுத்துவதற்கும் முருங்கைக்கீரை வைத்து எப்படி ஹேர் பேக் செய்வது என்று பார்ப்போம்.

பொதுவாக பொடுகு பிரச்சனை ஏற்பட சில முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் மிகவும் முதன்மையாக இருக்கக்கூடியது தான் தலைமுடியை சுத்தமாக பராமரிக்காத தன்மை. மேலும் தலையில் அதிகப்படியாக நாம் கெமிக்கல் நிறைந்த ஷாம்புகளை உபயோகப்படுத்தி அடிக்கடி தலைக்கு குளிப்பதால் தலையில் இயற்கையாகவே இருக்கக்கூடிய எண்ணெய் சுரப்பிகள் குறைந்து தலை வறண்டு அதனால் பொடுகு என்பது ஏற்படும்.

- Advertisement -

மேலும் நாம் உபயோகப்படுத்தும் துண்டு மற்றும் சீப்பு போன்றவற்றை சுத்தமாக இல்லாமல் இருந்தாலும் இந்த பொடுகு பிரச்சனை என்பது ஏற்படும். அது மட்டுமல்லாமல் பிறர் உபயோகப்படுத்திய துண்டையோ, சீப்பையோ உபயோகப்படுத்தினாலும் பொடுகு பிரச்சனை ஏற்படும்.

இந்த பொடுகு பிரச்சனை ஏற்படுவதால் முடி உதிர்தல் என்பது ஏற்பட்டு ஆங்காங்கே திட்டு திட்டாக வழுக்கை விழுந்தது போல் பூச்சி வெட்டி ஏற்பட ஆரம்பித்து விடும். இதை சரி செய்வதற்கு பல வழிமுறைகள் மருத்துவர் ரீதியாகவும், அதேசமயம் வீட்டு வைத்தியமாகவும் மேற்கொள்ளப்படுகிறது.

- Advertisement -

முருங்கை கீரை ஹேர் பேக்:

இந்த பதிவில் நாம் முருங்கைக்கீரை பயன்படுத்தி பொடுகு பிரச்சினையை சரி செய்ய போகிறோம். இரண்டு கைப்பிடி அளவு முருங்கைக் கீரையை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஐந்து சின்ன வெங்காயத்தை சேர்த்து கொள்ள வேண்டும். இப்பொழுது இரண்டையும் மிக்ஸி ஜாரில் போட்டு அரை டம்ளர் அளவிற்கு நீரை ஊற்றி நன்றாக நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வடிகட்டியை பயன்படுத்தி அதன் சாரை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த சாரை தலையில் தடவுவதற்கு முன்பாக தலையில் எண்ணெய் தேய்த்து சிக்கு இல்லாமல் சீவிய பிறகு உபயோகப்படுத்த வேண்டும். இந்த சாரை நம்முடைய தலையின் வேர் கால்களில் நன்றாக தேய்க்க வேண்டும். இவ்வாறு தேய்த்து அரை மணி நேரம் அப்படியே விட்டு விட வேண்டும். அரை மணி நேரம் கழித்து மைல்டு ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து விட வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு வாரத்திற்கு ஒருமுறை நாம் செய்து வர நம் தலையில் இருக்கக்கூடிய பொடுகு பிரச்சனை என்பது சுத்தமாக நீங்கிவிடும். அது மட்டுமில்லாமல் அந்த பொடுகு பிரச்சனையால் ஏற்பட்ட முடி உதிர்வையும் நிறுத்தி விடும். பிறகு முடி உதிர்வு ஏற்பட்ட இடங்களில் முடி வளர்ச்சியை தூண்டிவிட்டு முடி வளர ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே: இந்த ஹேர் பேக் போட்டா ஒரு முடி கூட நரைக்காது. ஒரு முடி கூட கொட்டாது.

பல அற்புதமான சத்துக்கள் நிறைந்த முருங்கைக் கீரையை நாம் உணவாக எடுத்துக் கொண்டாலும் நம்முடைய முடியின் ஆரோக்கியம் மேம்படும். அதோடு சேர்த்து நம் தலைக்கு ஹேர் பேக்காக பயன்படுத்தும் போது இரட்டிப்பு பலனை நம்மால் பெற முடியும்.

- Advertisement -