வீட்டில் இட்லி பொடி செய்பவரா நீங்கள்? அப்போ இந்த ஒரு பொருளை அதனுடன் சேர்த்து செய்து பாருங்கள். அனைத்து விதமான சத்துக்களும் நிறைந்த அற்புதமான இட்லி பொடி.

murungai keerai idly podi
- Advertisement -

ஆபத்தில் உதவுபவரை ஆபத் பாண்டவர் என்று நாம் கூறுவோம். அந்த வகையில் இட்லி, தோசை போன்றவற்றிற்கு ஆபத்து பாண்டவனாக நமக்கு உதவி செய்வது தான் இட்லி பொடி. பல குழந்தைகளுக்கு இட்லி பொடி இருந்தால் இட்லியையும், தோசையையும் எதுவும் சொல்லாமல் சாப்பிட்டு விடுவார்கள். அப்படிப்பட்ட இட்லி பொடியை மிகவும் சத்து மிகுந்த இட்லி பொடியாக எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

கடைகளில் வாங்கப்படும் இட்லி பொடி சுத்தமான முறையில் தயார் செய்யப்படுகிறதா? என்பது நம் யாருக்கும் தெரியாது. அதே சமயம் நாமே நம் வீட்டில் சுத்தமான பொருட்களை சேர்த்து இட்லி பொடி செய்தோம் என்றால் அது ஆரோக்கியமான பொடியாகவும் திகழும் அல்லவா? அவ்வாறு ஆரோக்கியமும் சத்து மிகுந்த முருங்கைக்கீரை இட்லி பொடி எப்படி செய்வது என்று பார்ப்போமா?

- Advertisement -

முருங்கைக் கீரையில் இருக்கும் கனமான காம்புகளை மட்டும் நீக்கி விட வேண்டும். பிறகு அதை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு அதை நிழல் காய்ச்சலாக காய வைக்க வேண்டும். சரகு போல் காயும் அளவுக்கு காய வைக்க வேண்டும். காய்ந்த முருங்கைக் கீரை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

கருப்பு உளுந்து – 2 கப், கடலைப்பருப்பு – 1 கப், மிளகு – 1 ஸ்பூன், தனியா – 1 ஸ்பூன், கட்டி பெருங்காயம் – ஒரு சிறிய துண்டு, எள் – 2 ஸ்பூன், மிளகாய் – 8, கருவேப்பிலை – 2 இனுக்கு, துவரம் பருப்பு – 1 கப், அரிசி – 1 கப், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து மிதமான தீயில் இவை அனைத்தையும் தனித்தனியாக போட்டு நன்றாக சிவக்கும் வரை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அனைத்தையும் நன்றாக ஆற வைக்க வேண்டும். பிறகு அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். விருப்பமுள்ளவர்கள் பூண்டு ஆறு பல் சேர்த்து அதையும் நன்றாக வதக்கி இதனுடன் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: இனி பீர்க்கங்காய் வாங்கினால் இது போல கடையல் செய்து பாருங்க. இதெல்லாம் ஒரு காயா அப்படின்னு சொன்னவங்க கூட இனிமே இந்த காய வாங்கி தந்து சமைக்க சொல்லுவாங்க.

இரும்பு சத்து மிகுந்த முருங்கைக்கீரை இட்லி பொடி தயாராகிவிட்டது. சுட சுட இட்லி தோசைக்கு சத்து மிகுந்த முருங்கைக்கீரை இட்லி பொடியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டு மகிழ்வோம்.

- Advertisement -