முருங்கைக்கீரை பொரியல்! இப்படி செஞ்சா யாருமே வேணாம்னு சொல்ல மாட்டாங்க!

murungai-keerai
- Advertisement -

நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது கீரைவகைகள். அதிலும் முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து மிகவும் அதிகம். குழந்தைகளுக்கு வாரத்தில் ஒரு முறையாவது, கட்டாயம் கொடுக்க வேண்டிய கீரை, என்று கூட சொல்லலாம். கர்ப்பிணிப் பெண்கள் தாராளமாக வாரத்தில் மூன்று நாட்கள் முருங்கைக்கீரையை சாப்பாட்டில், அளவோடு சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், இந்த கீரையை பொரியல் செய்து கொடுத்தால், குழந்தைகள் விருப்பமாக சாப்பிட மாட்டார்கள். ஒருமுறை உங்கள் வீட்டில் முருங்கைக்கீரையை இந்த பக்குவத்திற்கு செய்து கொடுத்து பாருங்கள். சூடாகப் பரிமாறும் பட்சத்தில், யாருமே இந்தக் கீரை பொரியலை வேண்டாம் என்று சொல்லமாட்டார்கள். சுவையான, சுலபமான முருங்கைக்கீரை பொரியல் எப்படி செய்வது தெரிந்துகொள்ளலாமா?

murungai-keerai1

முருங்கைக்கீரை பொரியல் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை – 3 கைப்பிடி அளவு, எண்ணெய் – 1 ஸ்பூன், கடுகு – 1/4 ஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1/4 ஸ்பூன், வரமிளகாய் – 2, பெரிய வெங்காயம் – பாதி அளவு (பொடியாக நறுக்கியது), வேகவைத்த துவரம் பருப்பு 4 டேபிள் ஸ்பூன், தேங்காய் துருவல் 2 ஸ்பூன் தேவையான அளவு உப்பு.

- Advertisement -

இரண்டு வர மிளகாயை, நான்காக கிள்ளி போட்டு கொள்ள வேண்டும். பெரிய வெங்காயத்திற்கு பதிலாக, சிறிய வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளலாம் துவரம்பருப்பை குக்கரில் வைத்து குழைய விடக்கூடாது. ஒரு தனி பாத்திரத்தில், துவரம் பருப்பு போட்டு, கொஞ்சம் தண்ணீர் விட்டு, மஞ்சள் பொடி போட்டு, ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, ஒரு துவரம் பருப்போடு ஒரு துவரம்பருப்பு ஒட்டாத அளவிற்கு வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. கீரையை நன்றாக அலசி கழுவி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். வேக வைத்த துவரம் பருப்பை, தண்ணீரை வடிகட்டி விட்டு கீரையில் சேர்க்கவேண்டும். கீரையை மூடி வேக வைக்க வேண்டாம். திறந்து வைத்தால் கீரை வெந்து விடும்.

toordal

முதலில் அடுப்பில் கடாயை வைத்து, ஒரு ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வரமிளகாய் போட்டு, உளுத்தம் பருப்பு சிவந்ததும், வெங்காயம் போட்டு, ஒரு நிமிடம் வதக்க வேண்டும். அதன் பின்பு, கீரையை சேர்க்கவேண்டும். கீரையை உங்கள் கைகளால் எடுத்து தூவியபடி கடாயில் சேருங்கள். அதன்பின்பு லேசாக வதக்கி விட வேண்டும். இரண்டு நிமிடங்கள் கீரை வதங்கியதும், பாதி அளவு கீரை வெந்த பின்பு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உப்பு குறைவாகத்தான் சேர்க்கவேண்டும். கீரை வேக, வேக சுருங்கும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கீரை முக்கால் பாகம் வெந்ததும், துவரம்பருப்பை தூவி ஒரு கிளறு கிளற வேண்டும். பருப்பு, கீரையோடு நன்றாக கலந்த பின்பு, (அடுப்பை கீரையோடு சேர்த்த ஒரு நிமிடம் கழித்து)இரண்டு ஸ்பூன் அளவு தேங்காய் துருவலை தூவி, தேங்காய் நன்றாக சூடான பின்பு, சுட சுட இந்தக்கீரையை பரிமாறி பாருங்கள். இதன் சுவையே தனி. அருமையான வாசம் வரும். நீங்கள் செய்த கீரையும் காலியாகிவிடும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் உங்கள் வீட்டில் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

murungai-keerai2

முடிந்தவரை முருங்கைக்கீரையை அன்றே வாங்கி, அன்றைய தினமே சமைப்பதுதான் நல்லது. முருங்கைக்கீரையை உருவி வைத்து, ஃபிரிட்ஜில் வைத்து ஒருநாள் விட்டு சமைப்பது அவ்வளவு நல்லது அல்ல என்று நம் முன்னோர்கள் சொல்லுவார்கள். முடிந்தவரை அன்றைக்கே சமைக்க பாருங்கள். முடியவில்லை என்றால் அடுத்த நாள் காலை சமைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே
ரேஷன் அரிசியில், ஒரு முறை இப்படி மாவு அரைத்து, தோசை சுட்டுப் பாருங்கள்! ஹோட்டல் டேஸ்ட் ரோஸ்ட் ரெடி!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -