கையில் தொட்டாலே முடி, கொத்துக்கொத்தாக கையோடு வருகிறதா? முடிகொட்டுவதை 10 நாட்களில் நிறுத்த இந்த 1 சூப்பை இப்படி குடித்தாலே போதுமே!

murungai-keerai-soup
- Advertisement -

ரொம்ப ரொம்ப முடி கொட்டுதா? சீப்பை வைத்து தான் தலைவார வேண்டும் என்ற அவசியமில்லை. தலையில் போட்டிருக்கும் ரப்பர் பேண்டை கழட்டினாலே, அந்த பேண்டோடு முடி சிலபேருக்கு கொத்துக்கொத்தாக வந்து கீழே விழும். இப்படிப்பட்ட பிரச்சனையை உடனடியாக நிறுத்த, இதுதான் ஒரே வழி! இரும்புச்சத்து அதிகம் உள்ள, வைட்டமின் சி சத்து அதிகம் உள்ள கீரை, முருங்கைக் கீரை. இந்த முருங்கைக்கீரையை இப்படி சூப் வைத்து தினமும் குடித்து வந்தால் போதும். 10 நாட்களில் உங்களுடைய முடி உதிர்வு குறைவதை கண்கூடாக காணலாம். வாங்க அந்த சூப்பை எப்படி செய்வதென்று இப்பவே தெரிஞ்சுக்கலாம்.

murungai-keerai-soup1

இந்த சூப் வைக்க தேவையான பொருட்களை பார்த்து விடலாம். முருங்கைக்கீரை – 2 கைப்பிடி அளவு, தோல் உரித்த பூண்டு பல் – 6, பழுத்த தக்காளி பழம் – 1, தோல் உரித்த சின்ன வெங்காயம் – 10 பல், பச்சை மிளகாய் – 2, சீரகம் – 1/2 ஸ்பூன், சோம்பு – 1/2 ஸ்பூன், வெந்தயம் – 1/2 ஸ்பூன், பாசிப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், துவரம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன், தேவையான அளவு உப்பு.

- Advertisement -

சூப்பை தாளிக்க தேவையான பொருட்கள். நல்லெண்ணை – 1 டேபிள்ஸ்பூன், கடுகு – 1/2 ஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1/2 ஸ்பூன், கறிவேப்பிலை – 1 கொத்து, வரமிளகாய் – 1, சீரகம் – 1/2 ஸ்பூன், மிளகுத்தூள் – 1 ஸ்பூன், மேலே தூவ கொத்தமல்லி தழை சிறிதளவு.

murungai-keerai-soup2

முதலில் முருங்கைக்கீரையை நன்றாக தண்ணீரில் போட்டு கழுவி, தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக துவரம்பருப்பையும், பாசி பருப்பையும் நன்றாக கழுவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு பிரஷர் குக்கரை எடுத்து அடுப்பில் வைத்து, பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், சீரகம், சோம்பு, வெந்தயம், பருப்பு வகைகள், எல்லாவற்றையும் முதலில் போட்டு விடுங்கள். அதன் பின்பு கழுவி தண்ணீரை வடிகட்டி வைத்திருக்கும் கீரையையும் போட்டு 1/2 லிட்டர் அளவு தண்ணீரை ஊற்றி, குக்கரை மூடி போட்டுவிடுங்கள். 5 லிருந்து 6 விசில் வரட்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து விடுங்கள்.

murungai-keerai-soup3

குக்கரில் பிரஷர் அடங்கியதும், குக்கரை திறந்து ஒரு வடிகட்டியில் தண்ணீரை, தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். கீரையைத் தனியாக வடிகட்டி எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். வடிகட்டிய தண்ணீரை மட்டும் குடித்தால் சத்துதான். இருப்பினும் கீரையில் சத்து நிறைந்து இருக்கும்.

murungai-keerai-soup4

வடிகட்டிய தண்ணீருடன், அரைத்த கீரையையும் ஒன்றாக ஊற்றி, கலந்து கொள்ளுங்கள். இந்த கீரை சூப் கொஞ்சம் கெட்டியாக வேண்டும் என்றால் அப்படியே விட்டு விடலாம். அப்படி கொஞ்சம் தண்ணீராக வேண்டுமென்றால், சுடு தண்ணீர் வைத்துக் கூட இந்த சூப்பில் கலந்து கொள்ளலாம். அது உங்களுடைய இஷ்டம்தான். இப்போ உங்களுக்கு சூப் ரெடியா இருக்கும்.

murungai-keerai-soup5

அடுத்தபடியாக ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, நன்றாக சூடானதும் கடுகு, உளுந்து, கருவேப்பிலை வரமிளகாய் போட்டு தாளித்து, தயாராக இருக்கும் சூப்பை அந்த தாளிப்பில் ஊற்றி, மேலே கொத்தமல்லி தழையை தூவி, தேவையான அளவு உப்பையும் போட்டு விடுங்கள். ஒருமுறை கலந்து விட்டு, சூப் குடிக்கும் அளவு சூடானதும் அடுப்பை அணைத்து விட்டு, மேலே மிளகுத்தூள் தேவைக்கு ஏற்ப தூவி, பரிமாற வேண்டியது தான். சுவையான, ஆரோக்கியம் நிறைந்த முருங்கைக்கீரை சூப் தயார்.

- Advertisement -