ஒரே நாளில், முடி உதிர்வை நிறுத்தி ஒட்டுமொத்த முடியையும் வலுவாக மாற்ற, ஒரே வழி இது மட்டும்தான். 10 ரூபாய் செலவில் பவர்ஃபுல்லான ரெமெடி.

hair5
- Advertisement -

ஒரே நாளில் ஒட்டுமொத்த முடி உதிர்வு பிரச்சனைக்கும் ஒரு முடிவு கட்ட சூப்பரான ஐடியாவை இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த ஐடியா பெரும்பாலும் எல்லோருடைய தலைமுடிக்கும் செட் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் ஒரே ஒரு நாள், ஒரே ஒருமுறை முயற்சி செய்து பார்த்தாலே தலைமுடி உதிர்வில் அத்தனை வித்தியாசங்கள் தெரியும். இதற்காக போகும் செலவும் பெருசாக இருக்காது. 10 ரூபாய் கொடுத்தால், கடைகளில் வாங்கலாம். பக்கத்து வீட்டிலோ உங்கள் வீட்டில் இந்த முருங்கைக்கீரை மரம் இருந்தால் செலவு கூட இல்லை. செலவே இல்லாமல் அந்த முருங்கைக் கீரையை பறித்து இந்த ரெமிடியை ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா உங்களுடைய முடி உதிர்வு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

முடி உதிர்வு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முருங்கைக்கீரை ஹேர் பேக்:
இந்த முருங்கைக் கீரையை முறையாக எந்த முறையில் தலையில் அப்ளை செய்தால் தலைமுடி உதிர்வு குறையும் என்பதை தெரிந்து கொள்வோமா. உங்களுடைய தலைமுடிக்கு எவ்வளவு முருங்கைக்கீரை வேண்டுமோ, அதை எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு கைப்பிடி, மூன்று கைப்பிடி அது உங்களுடைய இஷ்டம் தான்.

- Advertisement -

முருங்கைக் கீரையோடு சேர்த்து அதில் இருக்கும் சின்ன சின்ன காம்புகளும் இதில் சேர்த்துக் கொள்ளலாம் தவறு கிடையாது. முதலில் அந்த முருங்கைக் கீரையை தண்ணீரில் அலசி விடுங்கள். பிறகு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து முருங்கைக் கீரைகளை அதில் போட்டு, தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும். ரொம்பவும் தண்ணீர் ஊற்ற வேண்டாம். மிகக் குறைந்த அளவு தண்ணீரை ஊற்றி அரைத்து கொஞ்சம் திக்கான சாராக இந்த முருங்கை கீரை சாறை பிழிந்து எடுக்கவும்.

இப்போது பிழிந்து எடுத்த இந்த முருங்கைக் கீரை சாறில் ஏதாவது ஒரு எண்ணெய் ஊற்ற வேண்டும். நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் அல்லது உங்களுடைய வீட்டில் பாதாம் எண்ணெய், ஆலிவ் ஆயில் இருந்தால் கூட அதிலிருந்து இரண்டு ஸ்பூன் இதில் ஊற்றி நன்றாக அடித்து கலந்து உங்களுடைய தலையில் வேர்க்கால்களில் படும்படி இந்த லிக்விடை வைக்க வேண்டும்.

- Advertisement -

ஒரு பஞ்சை இந்த லிக்விடில் தொட்டு வேர்க்கால்களில் மசாஜ் செய்யலாம். அப்படி இல்லை என்றால் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் இந்த லிக்விடை ஊற்றி அப்படியே வேர்க்கால்களில் படும்படி ஸ்பிரே செய்து, உங்கள் விரல்களை வைத்து மசாஜ் செய்து 30 நிமிடங்கள் கழித்து ஜென்டிலான ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு தலைக்கு குளித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: மதியம் மீந்த சாதத்தை வைத்து நைட்டு டின்னருக்கு நல்லா பூ போல சாஃப்ட்டான இடியாப்பத்தை சூப்பரா இப்படி ரெடி பண்ணி குடுங்க, எனக்கு உனக்குன்னு போட்டி போட்டு சாப்டுவாங்க.

எப்போதுமே நீங்கள் தலைக்கு குளிக்கும் போது முடி உதிர்வு இருக்கும் அல்லவா. அந்த முடி உதிர்வுக்கும், இந்த ஹேர் சீரமை அப்ளை செய்த பிறகு, ஏற்படக்கூடிய முடி உதிர்வுக்கும் நிச்சயம் மாற்றம் தெரியும். வாரம் ஒரு முறை இந்த ஹேர் பேக் தொடர்ந்து பயன்படுத்தி வர முடி உதிர்வு இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகிறதா இல்லையா என்று பாருங்கள். அவ்வளவு ஊட்டச்சத்து நிறைந்த இந்த ஹேர் பேக்கை யாருமே மிஸ் பண்ணாதீங்க. செலவில்லாத பவர்ஃபுல் ஹேர் பேக்களில் இதுவும் ஒன்று. அழகு குறிப்பு பிடித்தவர்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

- Advertisement -