சண்டே ஸ்பெஷலா இந்த சைவ மட்டன் வறுவலை மட்டும் செஞ்சிட்டீங்கன்னா போதும். காலையில் டிபனில் இருந்து நைட் டின்னர் வரைக்கும் சைட் டிஷ்க்கு வேற எதுவுமே வேண்டாம்.

mushroom pepper fry
- Advertisement -

சண்டே என்றாலே நமக்கு ஞாபகம் வருவது ரெண்டே விஷயம் தான். ஒன்று விடுமுறை இன்னொன்று அசைவ சமையல். ஞாயிற்றுக்கிழமையானாலே அசைவம் சமைத்தே ஆக வேண்டும் என்பது போல சூழ்நிலை மாறி விட்டது. அசைவம் சமைப்பவர்களுக்கு சிக்கன், மட்டன் என எத்தனையோ வெரைட்டி இருக்கிறது. சைவம் சாப்பிடுபவர்கள் கொஞ்சம் வித்தியாசமாக காரசாரமாக சமைத்து சாப்பிட வேண்டும் என நினைத்தால் இந்த சைவம் மட்டன் வறுவலை ட்ரை பண்ணலாம். வாங்க அது எப்படி செய்யலாம் என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் பார்க்கலாம்.

செய்முறை

இந்த டிஷ் செய்வதற்கு முதலில் 200 கிராம் காளானை நறுக்கி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு பெரிய சைஸ் வெங்காயத்தை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். அதே போல் ஒரு சின்ன தக்காளியும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். இப்பொழுது வறுவல் செய்ய ஆரம்பித்து விடலாம்.

- Advertisement -

முதலில் அடுப்பில் கடாய் வைத்து சூடானவுடன் நான்கு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து பொரிந்தவுடன் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அரிந்து வைத்த வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் நன்றாக சிவந்து பொன்னிறமாக வரும் வரை வதக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன் சேர்த்து அடுப்பை மீடியம் ஃபிளேமில் வைத்து விட்டு இதன் பச்சை வாடை போகும் வரை வதக்கி கொள்ளுங்கள்.

இவையெல்லாம் நன்றாக வதங்கிய பிறகு தக்காளியும் சேர்த்து கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து தக்காளி நன்றாக குழைந்து வரும் வரை வதக்க வேண்டும். இப்போது அரை டீஸ்பூன் உப்பு, ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒன்னறை டீஸ்பூன் தனியாத்தூள், கால் டீஸ்பூன் மட்டன் மசாலா, அரை டீஸ்பூன் மிளகு இவை அனைத்தையும் சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். இதை எல்லாம் செய்யும் போதும் அடுப்பு லோ பிளேமில் தான் இருக்க வேண்டும்.

- Advertisement -

இந்த மசாலா அனைத்தும் பச்சை வாடை போகும் வரை வதக்கிய பிறகு சுத்தம் செய்து வைத்த காளானை சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து லேசாக தண்ணீர் தெளித்து மூடி போட்டு ஐந்து நிமிடம் வரை வேக விடுங்கள். காளானில் இருந்து தண்ணீர் விடும் ஆகையால் தண்ணீரை அதிகமாக சேர்க்காமல் வேக வைக்க வேண்டும்.

ஐந்து நிமிடம் கழித்து காளானிலிருந்து தண்ணீர் வெளியேறி கிரேவி பதத்தில் இருக்கும். இந்த சமயத்தில் மூடி எடுத்து விட்டு திறந்து வைத்தஸபடியே நன்றாக கலந்து விட வேண்டும். சிறிது நேரம் இப்படி கலந்து விட்டாலே தண்ணீர் மொத்தமும் வற்றி எண்ணெய் நன்றாக பிரிந்து இந்த காளான் ரோஸ்ட் ஆகி இருக்கும். இப்போது பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை இதன் மேல் தூவி இறக்கி விட்டால் அருமையான காளான் மிளகு வறுவல் தயார்.

இதையும் படிக்கலாமே: பலாப்பழம் வாங்குன கொட்டை தூர போடாம ஒரு முறை இப்படி பலாக்கொட்டை சுக்கா செஞ்சு பாருங்க. மட்டன் சுக்காவை தோற்றுப் போயிடும். சைவ பிரியர்களுக்கு இந்த சுக்கா ஒரு வரப்பிரசாதம் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க.

இந்த முறையில் செய்யப்படும் காளான் அப்படியே மட்டன் வறுவல் சுவையிலே அட்டகாசமாக இருக்கும். எப்பொழுதும் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக இது போல செய்து பாருங்கள். ஞாயிற்றுக்கிழமையில் கூட இனி சைவமே போதும் என்று சொல்வார்கள் அந்த அளவிற்கு இதன் சுவை சூப்பராக இருக்கும்.

- Advertisement -