இனி உங்க வயதை நீங்களே சொன்ன கூட யாரும் நம்ப முடியாத அளவு இளமையா மாற இதோ சூப்பர் டிப்ஸ். இளமையா இருக்கணும்னு நினைச்சா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க.

- Advertisement -

முகம் எப்பொழுதும் இளமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பதில் பெரிய தவறு ஒன்றும் இல்லையே. முகத்தை இளமையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் போது தான், நம்மை பற்றி கொஞ்சம் அதிகமான அக்கறையுடன் இருப்போம். நாம் மேலும் சுறுசுறுப்புடன் இருக்கவும், நல்ல ஒரு மனநிலையில் வேலைகளை செம்மையாக செய்யவும் தன் நம்பிக்கையை கொடுக்கும்.

வயது கூட கூட முகம் சுருக்கம் வருவது இயல்பு தான் அதை இன்னும் சிறிது காலம் தள்ளிப் போட முடியும் என்றால் ஏன் அதற்கு முயற்சி செய்யக் கூடாது. இந்த முறை இப்படியானவர்களுக்கு மட்டும் இல்லை இளம் வயதிலேயே சிலருக்கு முகத்தில் சுருக்கங்கள் தோன்றி வயதான தோற்றம் ஏற்பட்டு விடும். அவர்களும் கூட இந்த முறையில் உங்கள் வீட்டில் பேசியல் செய்து கொள்ளலாம் இதற்கு அதிக செலவு இல்லை அதிக நேரமும் தேவையில்லை அது எப்படி செய்து கொள்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

முகத்திற்காக நீங்கள் எந்த ஒரு கீரிம் பேக் எதை போடுவதாக இருந்தாலும் முதலில் உங்கள் முகத்திதை முகத்தை நன்றாக குளிர்ந்த நீரால் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதன் பிறகு முகத்தை ஸ்கிரப் செய்ய வேண்டும். அரிசி மாவு ஒரு ஸ்பூன், காய்ச்சாத பால் ஒரு ஸ்பூன், இது இரண்டையும் வைத்து முகத்தை நன்றாக ஸ்கிரப் செய்து கொள்ளுங்கள். இப்படி செய்வதன் மூலம் முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, நீங்கள் அடுத்து போட போகும் பேக் உங்க முகத்திற்குள் சென்று முகத்தை பொலிவு படுத்த உதவி செய்யும்.

- Advertisement -

இப்போது முகத்திற்கு போடும் ஃபேஸ் பேக்கை தயார் செய்து கொள்ளலாம். அரிசி மாவு ஒரு ஸ்பூன், முல்தானிமெட்டி ஒரு ஸ்பூன், முல்தானி மெட்டி இல்லை என்றால் அதற்கு பதிலாக கோதுமை மாவு பயன்படுத்திக் கொள்ளலாம். காபி பவுடர் அரை ஸ்பூன் இவற்றை கலக்க சுத்தமான பன்னீர் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து உங்கள் முகத்தில் பேக் போட்டு கொள்ளுங்கள். 15 நிமிடம் வரை இந்த பேக் உங்கள் முகத்தில் இருக்கட்டும். அதன் பிறகு சாதாரண தண்ணீர் கொண்டு முகத்தை அலம்பி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: பார்லருக்கு சென்று ஃபேஷியல் செய்ய நேரமோ, பணமோ வீணடிக்க முடியாதவர்கள், வீட்டிலேயே இத மட்டும் பண்ணுங்க வேற எதையுமே தேட வேண்டாம்!

இதை பேக் போட்ட சில நாட்களிலே உங்கள் முகத்தில் நல்ல ஒரு மாற்றம் தெரியும். இதை வாரத்திற்கு ஒரு முறை செய்து வரும் போது உங்களின் முக சுருக்கம் மறைவது உங்களுக்கே நன்றாக தெரிய வரும். இந்த பேக் உங்கள் முகத்திற்கு நல்ல நிறத்தையும் கொடுக்கும். ஒரே பேக்கில் முக சுருக்கம் மறைந்து அழகான தோற்றத்தையும் பெறலாம்.

- Advertisement -