4 முட்டை இருந்தா சமைக்கவே தெரியாதுன்னு சொல்றவங்க கூட ரொம்ப ஈஸியா இந்த ஸ்னாக்ஸ் செஞ்சுரலாம். ஈவினிங் டைம்ல ஒரு கப் டீ கூட, சுட சுட இதையும் சாப்பிட்டு பாருங்க. டேஸ்ட் பிரமாதமா இருக்கும்.

egg snacks
- Advertisement -

சமையலைப் பற்றி எதுவும் தெரியாதவர்கள் புதிதாக சமைக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படியானவர்கள் ரொம்பவே எளிமையாக அதே நேரத்தில் ஆரோக்கியமாக இருக்க கூடிய இந்த ஸ்னாக்ஸை செய்யலாம். வாங்க எளிமையான இந்த ஸ்நாக்ஸை எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் பார்ப்போம்.

செய்முறை

இந்த ஸ்னாக்ஸை செய்வதற்கு நமக்கு நாலு முட்டையை எடுத்து கொள்ளுங்கள். இந்த முட்டையை நன்றாக வேக வைத்து அதன் தோலை உரித்த பிறகு ஒரு முட்டையை இரண்டாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக நான்கு பெரிய வெங்காயத்தை எடுத்து மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வெங்காயத்தை உதிரியாக உதிர்த்து விட வேண்டும். பிறகு அதில் அரை டீஸ்பூன் அளவு உப்பு சேர்த்து, அந்த நன்றாக பிணைந்து கொள்ள வேண்டும். உப்பு சேர்த்த இந்த வெங்காயத்தை 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

வெங்காயம் பத்து நிமிடம் ஊறிய பிறகு அதில் 1/2 ஸ்பூன் மிளகாய்த் தூள், 1 சிட்டிகை மஞ்சள் தூள், 1/4 ஸ்பூன் கரம் மசாலாத் தூள், பொடியாக நறுக்கிய கருவேப்பிலை சிறிது, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிது, இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன், இத்துடன் 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவை சேர்க்க வேண்டும். பிறகு 4 டேபிள் ஸ்பூன் கடலை மாவை சேர்க்க வேண்டும். கடலை மாவு இல்லாதவர்கள் பொட்டுக் கடலையை மிக்ஸியில் போட்டு மாவாக அரைத்து அந்த மாவை சேர்க்கலாம்.

- Advertisement -

இப்பொழுது நன்றாக இதை பிணைந்து கொள்ள வேண்டும். இந்த மாவானது வடை மாவு பதத்திற்கு வர வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துக் பிசைந்து கொள்ளலாம். இப்பொழுது கையில் தண்ணீரை தடவிக் கொண்டு, சப்பாத்தி உருண்டை அளவுக்கு மாவை எடுத்து அதை நன்றாக கையில் வைத்து தட்டிக் கொள்ள வேண்டும். இது மிகவும் கனமாகவும் தட்டக் கூடாது அதே சமயம் மெல்லியதாகவும் தட்ட கூடாது.

அதன் பிறகு அதற்கு நடுவில் நாம் நறுக்கி வைத்திருக்கும் முட்டையை வைத்து, அந்த மாவை மூடி விட வேண்டும். முட்டை முழுவதும் மூடியவாறு இருக்க வேண்டும். இவ்வாறு நாம் அனைத்து முட்டைகளையும் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: அவல் ஊத்தப்பம் செய்முறை விளக்கம்: (Aval Uthappam Recipe in Tamil)

அடுத்ததாக அடுப்பில் கடாயை வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து நாம் தயார் செய்து வைத்திருக்கும் முட்டை கலவையை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான் மிகவும் சுவையான எளிமையான சத்தான ஸ்நாக்ஸ் தயாராகி விட்டது.

- Advertisement -