முட்டைகோஸ் வாங்கினால் இப்படி செஞ்சு பாருங்க முட்டைகோஸில் இவ்வளவு அருமையான டிஷ் செய்ய முடியுமான்னு நீங்களே ஆச்சரியப்படுவீங்க. பிரியாணி வெரைட்டி ரைஸ், சாதம் சப்பாத்தி எல்லாத்துக்குமே பெஸ்ட் சைடு டிஷ்.

cabbage gravy
- Advertisement -

முட்டை கோஸ் வாங்கினால் அதை வைத்து கூட்டு பொரியல் போன்ற டிஷ்களை தான் நாம் இது வரை செய்திருப்போம். அதுவும் இல்லாமல் இந்த முட்டைகோஸ் அதிகமாக யாரும் விரும்பி சாப்பிடுவது கிடையாது. அப்படியே சாப்பிட்டாலும். இந்த சமையல் குறிப்பு பதிவில் முட்டை கோஸை வைத்து ஒரு அருமையான கிரேவி ரெசிபி எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் முட்டை கோஸ் வேண்டாம் என்று யாரும் சொல்லவே மாட்டாங்க.

முட்டை கோஸ் உருளைக்கிழங்கு கிரேவி செய்முறை விளக்கம்.
இந்த கிரேவி செய்வதற்கு முதலில் கால் கிலோ முட்டைகோஸை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் இரண்டு மீடியம் சைஸ் உருளைக்கிழங்கை துருவி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த கிரேவிக்கு ஒரு மசாலாவை அரைத்து விடுவோம். அதற்கு மிக்ஸி ஜாரில் கால் ஸ்பூன் சோம்பு, கால் ஸ்பூன் சீரகம், ரெண்டு லவங்கம், ஒரு ஏலக்காய் , ஒரு துண்டு பட்டை, கால் ஸ்பூன் மிளகு, கால் கப் துருவிய தேங்காய், இரண்டு பழுத்த தக்காளியை நறுக்கி சேர்த்து நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கால் டீஸ்பூன் கடுகு சேர்த்து பொரிந்த பிறகு நறுக்கி வைத்த வெங்காயத்தையும் ஒரு கொத்து கருவேப்பிலையும் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ளுங்கள் அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு முறை வதக்கிய பிறகு நறுக்கி வைத்த முட்டைகோஸ்,உருளைக்கிழங்கு இரண்டையும் சேர்த்த பிறகு ஒரே ஒரு பச்சை மிளகாயை கீறி சேர்த்து மூடி போட்டு ஐந்து நிமிடம் வரை வேக விடுங்கள்.

- Advertisement -

ஐந்து நிமிடம் கழித்து கோஸ் பாதி அளவு வெந்திருக்கும். இந்த சமயத்தில் ஒரு டீஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள், அரை டீஸ்பூன் தனியாத்தூள், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் உப்பு என அனைத்தையும் சேர்த்து ஒரு முறை கலந்த பிறகு ஏற்கனவே அரைத்து வைத்த விழுதையும் இதில் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு பத்து நிமிடம் வரை கொதிக்க விட்டால் என்ன எல்லாம் பிரிந்து அருமையான முட்டைகோஸ் உருளைக்கிழங்கு மசாலா கிரேவி தயாராகி விடும்.

இதையும் படிக்கலாமே: சும்மா ஈஸியா போனபோக்குல இந்த சின்ன வெங்காய டிபன் சாம்பார் வைச்சுதா பாருங்களேன்! இட்லி சாம்பார் செய்ய நீங்க தான் பெஸ்ட் குக்ன்னு அவாட் வாங்குவீங்க.

இந்த முட்டைகோஸ் கிரேவியை பிரியாணிக்கு கத்தரிக்காய்க்கு பதிலாக வைத்து சாப்பிடலாம் அது மட்டும் இன்றை வரைக்கும் சாதத்துடன் போட்டு சாப்பிடவும் அருமையாக இருக்கும் சப்பாத்தி தோசை போன்ற அனைத்து டிபன் வகைகளுக்கும் கூட இது நல்ல காம்பினேஷன் தான்.

- Advertisement -