முட்டையை சமையலுக்கு, தலை முடிக்கு பயன்படுத்தி இருக்கோம். ஆனா சருமம் பளபளப்பாக மாற முட்டைய பயன்படுத்தலான்னு சொன்னா நம்ப மாட்டீங்க தான். வாங்க ட்ரை பண்ணி பாத்துடலாம்.

- Advertisement -

முட்டை உடம்புக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும், தினமும் ஒரு முட்டை குழந்தைகளுக்கு கட்டாயமாகவே கொடுக்கலாம். (முட்டை என்றால் பிராய்லர் கோழி முட்டை இல்லை நாட்டுக்கோழி முட்டை தான்). இந்த முட்டை பயன்படுத்தி தலைமுடி நல்ல சாஃப்ட்டாக மாற்றலாம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று தான். ஆனால் முட்டையை பயன்படுத்தி முகத்திற்கு நல்ல நிறமும், பளபளப்பும் கொடுக்க முடியும் என்பது கொஞ்சம் வித்தியாசமான அழகு குறிப்பாக தான் இருக்கும். ஆனால் உண்மையிலேயே இதை செய்யும் போது உங்கள் தோல் அவ்வளவு மினுமினுப்பாக மாறும். அது எப்படி என்று தெரிந்து கொள்ளத்தான் இந்த பதிவு.

இந்த முட்டை பேக் செய்வதற்கு இரண்டே பொருள் மட்டும்தான் தேவை. ஒன்று பச்சைப்பயிறு அடுத்தது முட்டை. 200 கிராம் பச்சை பயிருக்கு இரண்டு நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளை கரு மட்டும் தான் இதற்கு தேவை. மஞ்சள் கரு சேர்க்கக் கூடாது.

- Advertisement -

முதலில் 200 கிராம் பச்சை பயிரை எடுத்து அலசி நன்றாக வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நன்றாக காய்ந்த இந்த பாசிப்பருப்பில் இரண்டு நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து நன்றாக கலந்த பிறகு இதை ஒரு இரண்டு நாள் வரையில் நம் வீட்டு நிழலில் (முட்டை சேர்த்த பிறகு வெயிலில் காய வைக்க கூடாது) காய வைக்க வேண்டும். குறைந்தது ஒரு நாளாக காய வைக்க வேண்டும் இரண்டு நாள் காய வைத்தால் நல்லது தான்.

காய்ந்த பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நல்ல பவுடராக அரைத்துக் கொள்ள வேண்டும். அறைத்ததை ஒரு பாக்ஸில் போட்டு ஸ்டார் செய்து கொள்ளுங்கள். இதை நார்மலாக குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பு ஒரு பேக் போல போட்டும் குளிக்கலாம். அல்லது நீங்கள் சோப்பு போட்டு குளித்து முடித்த பிறகு இதை ஒரு ஸ்கிரப் போல உடல் முழுவதுமே தேய்த்தும் குளித்து விடலாம். எப்படி வேண்டுமானாலும் இதை பயன்படுத்தலாம் இது உங்கள் விருப்பம்.

- Advertisement -

பச்சை பயிறு பொதுவாகவே நல்ல நிறத்தை கொடுக்கக் கூடியது தான். முட்டைக்கு சருமத்தை பளபளபாக மாற்ற கூடிய தன்மை உள்ளது. இது இரண்டையும் சேர்த்து நாம் தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது நம் சருமத்தை மெருகூட்டமுடியும். இந்த பவுடரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உபயோகிக்கலாம்.

இதையும் படிக்கலாமே: அழகே உங்கள் அழகை பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு பேரழகியாக மாற, 10 ரூபாய் செலவில் சூப்பர் ரோஜா பூ கிரீம் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?

நம் வீட்டில் இருக்கும் இது போன்ற பொருட்களை வைத்தே முடிந்த வரையில்அழகுப்படுத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இந்த கெமிக்கல் கலந்த ரசாயன பொருட்களை தேய்த்து பணத்தை செலவழிப்பதுடன் ஆரோக்கியத்தையும் கெடுத்து கொள்ள வேண்டாம். இந்த முறை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள் கட்டாயம் நல்ல பலன் கிடைக்கும்.ஆனால் குறைந்தது ஒரு பத்து நாலாவது தொடர்ந்து இதை தேய்த்து வாருங்கள் அப்போதுதான் உங்களுக்கு மாற்றம் தெரியும்.

- Advertisement -