வெறும் 5 நிமிடத்தில் மைசூர் ஸ்டைல் மனமனக்கும் கார சட்னியும், மசால் தோசையும். சாப்பிட காரசாரமாக வேற லெவல் டேஸ்ல இருக்கும் இது.

dosai2
- Advertisement -

ரொம்ப ரொம்ப வித்தியாசமான முறையில் ஒரு சட்னி ரெசிபியையும், அந்த சட்னியை செய்து வைத்துக் கொண்டு ஒரு மசால் தோசை எப்படி சுடுவது என்பதை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். தவிர இந்த சட்னியை சுடசுட இட்லி, சப்பாத்திக்கு கூட தொட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். ருசியாக தான் இருக்கும். உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த சட்னி மைசூர் சட்னி. ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம் வாங்க.

முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் வரமிளகாய் – 8, சிறிய எலுமிச்சம் பழம் அளவு -புளியை போட்டு தண்ணீரை ஊற்றி 1/2 மணி நேரம் ஊற வைத்து விடுங்கள்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் – 1 ஸ்பூன் ஊற்றி, வெள்ளை எள் – 1 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, போட்டு நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் முக்கால் பாகம் வதங்கி வந்தவுடன் அடுத்தபடியாக தோல் உரித்த பூண்டு பல் – 8, கருவாப்பிலை – 1 கொத்து, தேங்காய் துருவல் – 3 டேபிள் ஸ்பூன், பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன், போட்டு நன்றாக இரண்டு நிமிடம் வதக்கி விட்டு இறுதியாக ஊற வைத்திருக்கும் வரமிளகாயையும் புளியையும் இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். அடுப்பை அணைத்து விடுங்கள்.

இந்த கலவை நன்றாக ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை கட்டியான சட்னியாக அரைத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இதை தாளிக்க தேவை கிடையாது. அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து மெல்லிசாக தோசை வார்த்து அதை வேக விடுங்கள். மேலே இருக்கும் மாவு வெந்து வந்த பிறகு, இந்த சட்னியை தோசை மேலே போட்டு நன்றாக பரப்பி விட்டு மேலே 1 ஸ்பூன் நெய் விட்டு மிதமான தீயில் சிவக்க வைத்து பொன்னிறமாக வந்தவுடன் இதை அப்படியே பரிமாறினால் அவ்வளவு சுவையாக இருக்கும்.

தேவைப்பட்டால் இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி வைக்கலாம். அப்படி இல்லை என்றால் இந்த தோசைக்கு உள்ளே உருளைக்கிழங்கு மசால் கூட வைத்துக் கொள்ளலாம். சூப்பரான டேஸ்ட் கிடைக்கும். தோசையை திருப்பி போட வேண்டாம். மேலே ஒரு மூடி போட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள். அட்டகாசமான இந்த தோசையை யாரும் மிஸ் பண்ணாதீங்க

- Advertisement -