நடக்காத காரியத்தை நடத்தி காட்டும் ஆஞ்சநேயர் வழிபாடு

anjaneyar valipadu
- Advertisement -

வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்றுதான் ஒவ்வொருவரும் முயற்சி செய்து கொண்டு இருக்கின்றோம். அப்படி நல்ல நிலைக்கு வர முடியாமல் ஏதாவது ஒரு ரூபத்தில் தடைகள் வந்து கொண்டே இருக்கும் பட்சத்தில் அந்த தடைகளை நீக்குவதற்கு நாம் இறைவனிடம் சரணாகதி அடைய வேண்டும். அப்படி நாம் சரணாகதி அடையக்கூடிய தெய்வமாக ஆஞ்சநேயர் திகழ்கிறார். ஆஞ்சநேயரை எந்த முறையில் வழிபட்டால் நம் வாழ்வில் நடக்கவே நடக்காது என்று நினைத்த காரியமும் நடக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக எந்த கோவிலுக்கு நாம் சென்றாலும் அந்த கோவிலில் இருக்கக்கூடிய தெய்வத்தின் பெயரை கூறி தான் வழிபடுவோம். ஆனால் ஆஞ்சநேயர் கோவிலுக்கு நாம் சென்றால் மட்டும் தான் ஆஞ்சநேயரின் பெயரை கூறாமல் ராமா ராமா என்று ராமபிரானின் பெயரை கூறுவோம். அப்படி நாம் ராமபிரானின் பெயரை கூறும் பொழுது தான் ஆஞ்சநேயரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட அற்புதமான ஆற்றல் கொண்டவராக தான் ஆஞ்சநேயர் திகழ்கிறார். இந்த ஆஞ்சநேயரை தடைபட்ட காரியங்கள் நடப்பதற்கும், நடக்கவே நடக்காது என்று நினைத்த காரியங்கள் நடப்பதற்கும் எந்த முறையில் வழிபடுவது என்று பார்ப்போம்.

- Advertisement -

பொதுவாக ஆஞ்சநேயருக்கு உகந்த நட்சத்திரமாக மூல நட்சத்திரம் திகழ்கிறது. மாதத்தில் வரக்கூடிய மூல நட்சத்திர நாள் அன்று ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பு மிகுந்ததாக இருக்கும். அதே போல் ஆஞ்சநேயருக்கு உகந்த கிழமையாக வியாழக்கிழமை திகழ்கிறது. வியாழக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய மூல நட்சத்திர நாள் அன்று ஆஞ்சநேயரை நாம் வழிபட்டால் நமக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும்.

இந்த வழிபாட்டை நாம் வியாழக்கிழமை அன்று செய்தால் போதும். நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். இந்த வழிபாட்டிற்கு நாம் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்ற வேண்டும். நல்ல கிளியாக வெற்றிலையாக எடுத்து அதை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு ஈரமில்லாமல் அந்த வெற்றிலையை துடைத்து, ஒவ்வொரு வெற்றிலைக்கும் நடுவில் சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும். ஒரு வெள்ளை நிற நூலை எடுத்து அந்த நூலில் மஞ்சளை தடவிக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒவ்வொரு வெற்றிலையின் காம்பில் அந்த நூலை வைத்து கட்டி மாலையாக தொடுக்க வேண்டும். இப்படி 54, 108 என்ற எண்ணிக்கையில் வெற்றிலைகளை மாலையாக தொடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி நம் கையால் தொடுத்த வெற்றிலை மாலையை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு சென்று அவருக்கு மாலையை சாற்றி விட்டு இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து மனதார வழிபாடு செய்ய வேண்டும்.

இப்படி தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்ய வேண்டும். ஒன்பதாவது வாரம் ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்தமான தயிர் சாதத்தை செய்து நெய்வேத்தியமாக படைத்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக தர வேண்டும்.

இதையும் படிக்கலாமே: குழந்தை வரம் தரும் குங்கும அர்ச்சனை

யாரொருவர் முழு நம்பிக்கையோடு ஆஞ்சநேயரை இந்த முறையில் வழிபடுகிறார்களோ அவர்களின் வாழ்க்கையில் தடைப்பட்டு இருந்த அனைத்து விஷயங்களும் நல்லபடியாக நடந்தேரும்.

- Advertisement -