உங்கள் வீட்டில் இருக்கும் நகையை அடகு வைக்க போகிறீர்களா? ஒரு நிமிஷம் இருங்கள். இந்த பரிகாரத்தை செய்து விட்டு பிறகு அடகு வைத்தால் விரைவிலேயே உங்கள் நகை உங்களிடம் திரும்பி வந்துவிடும்.

jewel loan
- Advertisement -

யாருக்குத்தான் பணம் தேவை இல்லாமல் இருக்கிறது. அனைவருக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் பணத்துடைய தேவை இருந்து கொண்டே தான் இருக்கிறது. நம் பணத் தேவை பூர்த்தி ஆகிவிட்டால் பிறரிடம் இருந்து கடன் வாங்க போவதில்லை. பூர்த்தியாகவில்லை என்றால் முதலில் நம் நினைவிற்கு வருவது நம் வீட்டில் இருக்கும் நகை தான். நகையை கொண்டு போய் அடகு வைத்து, அதன் மூலம் நம்முடைய பணத் தேவையை பூர்த்தி செய்து கொள்வோம். பிறகு நகையை திருப்புவதற்கான போராட்டம் நடக்கும். அதற்காக பல பரிகாரங்களையும் நாம் செய்வோம். அடகு வைத்த பிறகு செய்யக்கூடிய பரிகாரத்தை விட வருமுன் காப்போம் என்பதற்கு இணங்க அடகு வைப்பதற்கு முன்பே ஒரு பரிகாரத்தை செய்துவிட்டு அடகு வைத்தால் அந்த நகை விரைவில் நம்மிடம் திரும்பி வந்துவிடும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பரிகாரத்தை தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பாக பலமுறை யோசிக்க வேண்டும், செய்த பிறகு அதைப்பற்றி யோசிக்கவே கூடாது என்று கூறுவார்கள். இக்கட்டான, எதிர்பாராத சூழ்நிலையில் நம் வீட்டில் இருக்கும் நகையை அடமானம் வைப்போம். அப்பொழுது நம்முடைய எண்ணம் முழுக்க அந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க வேண்டும் என்பது மட்டுமே தான் இருக்கும். பிறகு அந்த நகையை எப்படி திருப்புவோம் என்று யாரும் யோசிக்க மாட்டார்கள். ஆதலாலேயே நகையை திருப்ப முடியாமல் கஷ்டப்படுவார்கள். அடகு வைத்த பிறகு பரிகாரத்தை செய்து நகையை திருப்ப முயற்சி செய்வதற்கு பதிலாக, அடகு வைப்பதற்கு முன்பே ஒரு பரிகாரத்தை செய்து விட்டால், அந்த பரிகாரத்தின் மூலமாக நாம் அடகு வைத்த நகை விரைவில் நம்மிடமே திரும்பி வந்து சேரும். இது அடகு வைப்பதற்கு மட்டுமல்ல, யாரேனும் நகையை கடனாக கேட்டால் கூட இந்த பரிகாரத்தை நாம் செய்துவிட்டு கொடுக்கும் பொழுது அவர்கள் நம்மை ஏமாற்றாமல் நகையை திருப்பிக் கொண்டு வந்து கொடுத்து விடுவார்கள். அவ்வளவு சக்தி வாய்ந்த பரிகாரம் தான் இது.

- Advertisement -

நாம் அடகு வைக்கப் போகும் நகையை முதலில் சுத்தமான நீரில் கழுவ வேண்டும். பிறகு பசுமாட்டு கோமயத்தில் அந்த நகையை சுத்தம் செய்ய வேண்டும். மறுபடியும் தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு அருகில் இருக்கும் கடைக்கு சென்று கல் உப்பு வாங்கி வர வேண்டும். ஒரு பாத்திரத்தில் சிறிது கல்லுப்பை போட்டு அதன் மேல் அடமானம் வைக்கப் போகும் நகையை வைத்து அதற்கு மேல் மறுபடியும் நகை முழுவதும் மூழ்குவது போல் உப்பை கொட்டி வைக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது நகை அப்படியே இருக்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து கற்பூரம் ஏற்றி வைத்து இந்த நகையை அடமானம் வைக்கப் போகிறோம் அது விரைவில் திரும்பி வீடு வந்து சேர வேண்டும் என்று பிரார்த்தனை செய்துவிட்டு, அந்த நகையை எடுத்து மறுபடியும் சுத்தமான நீரில் கழுவ வேண்டும். பிறகு அந்த நகையை அடமானம் வைக்க எடுத்துச் செல்ல வேண்டும்.

அடமானம் வைக்கும் பொழுது அவர்கள் அடமான சீட்டு கொடுப்பார்கள். அந்த சீட்டை ஜெராக்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அந்த அடமானத் தொகையில் ஏதேனும் ஒரு சிறிய தொகையை எடுத்துக் கொள்ள வேண்டும். ரசீதில் அந்த தொகையை வைத்து நாம் ஏற்கனவே நகை வைத்திருந்த கல் உப்பில் சிறிது எடுத்து அதனுடன் வைத்து மடித்து, பூஜை அறையில் வைத்து விட வேண்டும். மீதம் இருக்கும் உப்பை தண்ணீரில் கரைத்து விட்டு கால் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும். அன்றாடம் பூஜை செய்யும்பொழுது அதற்கும் தூப தீபம் காட்டி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் நாம் அடகு வைத்த நகை விரைவில் நம்மிடம் வந்து சேரும்.

- Advertisement -

யாரேனும் கடனாக நகை கேட்கிறார்கள் என்றால் இந்த காலத்தில் நகை விற்கும் விலைக்கு கொடுப்பதற்கு மனம் வராது. எங்கே ஏமாற்றி விடுவார்களோ என்று பயமாக இருக்கும். அப்படிப்பட்ட நிலையில் நாம் கடனாக கொடுக்கும் நகையை கல் உப்பில் சிறிது நேரம் வைத்து விட்டு கொடுத்தால், அந்த நகை நம்மிடம் திரும்பி வந்து விடும் என்று கூறப்படுகிறது. உப்பில் நகையை வைப்பதற்கு முன்பும் பின்பும் சுத்தமான தண்ணீரில் நகையை கழுவ வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.

இதையும் படிக்கலாமே: நெருப்பை கனவில் கண்டால் என்ன பலன் தெரியுமா? உங்க கனவில் நெருப்பு வந்திருக்கிறதா?

இந்த எளிய பரிகாரத்தை நாம் அடகு வைப்பதற்கு முன்பே செய்து விரைவில் நம்முடைய நகையை திரும்பப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழலாம்.

- Advertisement -