நகை வாங்கிய சில நாட்களிலே அது அடகு கடைக்கு சென்று விடுகிறதா? மீண்டும் நகை வாங்கவே கஷ்டப்படுகிறீர்களா? இதை செய்தால் போதும் உங்கள் நகை எப்போதும் உங்கள் கைவசம் இருக்கும். அதோடு தொடர்ச்சியாக நகையும் சேரும்.

nagai
- Advertisement -

பொதுவாகவே நகையின் மீதும் எப்போதும் பெண்களுக்கு ஆசை உண்டு. ஆனால் பல சமயங்களில் வீட்டில் எந்த ஒரு பண பிரச்சனை என்றாலும் முதலில் அடகு வைக்க கூடியது நகையாக தான் இருக்கும். இப்படி கஷ்டப்பட்டு வாங்கிய நகை அடகு கடைக்கு போவது ஒருபுறம் இருந்தாலும், அதை மீட்டு எடுத்த சில தினங்களிலேயே அந்த நகையை அடுக்கவைக்கும் சூழ்நிலை வருவது தான் வருத்தத்திற்குரியது. இப்படி நீங்கள் கஷ்டப்பட்டு வாங்கிய நகை அடகு கடைக்கு செல்லாமல் இருக்கவும், நகை சேர்க்கையானது அதிகப்படியாக இருக்கவும் இந்த ஒரு பரிகாரத்தை செய்தால் போதும். உங்கள் நகை எப்போதும் உங்களிடமே இருக்கும், புதிய நகைகளும் சேர துவங்கும்.

பொதுவாக நகைகள் அடகு கடையிலேயே மீண்டும் மீண்டும் இருப்பதற்கு காரணம் நகைகளில் ஏற்படும் தோஷங்கள் தான். ஒருமுறை நகை அடகு கடைக்கு சென்று விட்டாலே, நகையில் தோஷம் ஏற்பட்டு விடும். அப்படி ஏற்பட்ட தோஷத்தை நாம் நிவர்த்தி செய்யாமல் மறுபடியும் அணிந்து கொண்டாலோ அல்லது நகைகள் வைத்திருக்கும் லாக்கரில் வைத்தாலோ அந்த நகை மட்டுமல்லாமல் நம் வீட்டில் இருக்கும் எல்லா நகைகளுக்கும் அந்த தோஷம் சேர்ந்து விடும். அவ்வாறு சேர்வதன் மூலம் நம்மிடம் இருக்கும் நகைகள் நம்மிடம் தங்காமல் அடகு கடைக்கு செல்லவோ அல்லது சில நேரங்களில் அவற்றை விற்க கூட நேரிடலாம். இப்படி அந்த நகைக்கு ஏற்படும் தோஷத்தை எவ்வாறு நீக்க வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.

- Advertisement -

நாம் இந்த பரிகாரத்தை முதல் முதலில் நகை வாங்கும் போதும் செய்யலாம் அல்லது அடகு கடைக்கு சென்ற நகைகளை மீட்டு வரும்போதும் செய்யலாம். அதே போல இரண்டு வகைகளில் இந்த பரிகாரங்களை நாம் மேற்கொள்ளலாம். முதலாவது வகை: இதற்கு நமக்கு தேவைப்படும் பொருள் கைப்படாத நீர். பொதுவாக நீர் என்றால் அனைவருக்கும் தெரியும். ஆனால் கை படாத நீ என்றால் என்ன? கை படாத நீர் என்று தேங்காய் தண்ணீரை தான் நாம் சொல்கிறோம்.

தேங்காய் தண்ணீர் அல்லது இளநீர் இரண்டில் ஏதாவது ஒன்றை உபயோகப்படுத்தலாம். ஒரு பாத்திரத்தில் இந்த தண்ணீரை ஊற்றிவிட்டு, அதில் நாம் நகைகளை போட்டு வைத்தோம் என்றால், நகைகளின் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கிவிடும். இதன் மூலம் நகையானது நம்மிடம் அதிகப்படியாகவும் சேரும். இது ஒரு எளிய பரிகாரமே.

- Advertisement -

மற்றொரு பரிகாரத்திற்கு நமக்கு தேவைப்படும் பொருட்கள் மஞ்சளும், உப்பும் தான். அதாவது நகைகளை அடகு கடையில் இருந்து திருப்பி வந்த அன்றைக்கு, ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை எடுத்து, அதில் ஒரு கைப்பிடி கல் உப்பை போட்டு அத்துடன் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளையும் சேர்க்க வேண்டும். பிறகு இந்த நகைகளை அதில் போட வேண்டும். அன்று இரவு முழுவதும் நகை தண்ணீரில் இருக்க வேண்டும். மறுநாள் காலை அந்த நகைகளை எடுத்து மறுபடியும் சுத்தமான தண்ணீரில் போட்டு கழுவியப் பிறகு அதை நாம் அணிந்து கொள்ளலாம் அல்லது நம்முடைய லாக்கரில் வைத்து விடலாம்.

இதையும் படிக்கலாமே: சம்பாதிக்கும் பணம் பல மடங்கு பெருக வெற்றிலையில் இதை தடவி வைத்து பாருங்கள். கையில் இருக்கும் பணம் வீண் விரயமாகாமல் பல மடங்காக பெருகி கொண்டே இருக்கும்.

சில பேர் நகைகளை வாங்கி வந்த உடன் சாமி ரூமில் வைப்பார்கள். அது மிகவும் தவறு. ஏனென்றால், அந்த நகைகள் நம்மிடம் வருவதற்கு முன் யாரிடம் இருந்தது என்று நமக்கு தெரியாது. அதனால் தான் இந்த பரிகாரங்களை செய்ய வேண்டும். அவ்வாறு செய்த பிறகு நாம் சாமி ரூமில் வைக்கலாம் அதில் எந்த தவறும் இல்லை. மேற்சொன்ன பரிகாரங்களை செய்து தங்களின் நகைகள் தங்களிடமே எப்போதும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -