கன்னிப் பெண்களுக்கு மனதிற்கு பிடித்த ‘நல்ல அதிர்ஷ்ட வரன்’ அமைய, செல்வம் கொழிக்க வீட்டில் வெள்ளிக் கிழமையில் இப்படி விளக்கு ஏற்றுங்கள்!

lakshmi-kuthu-vilakku

திருமணம் என்பது மாபெரும் பந்தத்தில் இரு குடும்பத்தார் இணையும் அற்புதமான திருவிழா ஆகும். இந்த பந்தத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் கன்னிப் பெண்களுக்கு மனதிற்குப் பிடித்த நல்ல அதிர்ஷ்டமான வரன் அமைய, வீட்டில் இப்படி விளக்கேற்றி வழிபடலாம். செல்வம் கொழிக்க வீட்டில் செய்ய வேண்டிய சில வழிபாடு முறைகளை பின்பற்றி வந்தால் வீடு சுபீட்சமாக இருக்கும். தொடர்ந்து திருமணம் தடைப்பட்டுக் கொண்டே இருந்தால், கன்னி பெண்கள் இந்த வழிபாடு செய்வதன் மூலம் அந்த தடை நீங்கி, நல்ல வாழ்வு அமையும். அத்தகைய வழிபாட்டு முறைகளை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

praying-god

நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் கூட திடீரென நின்று போவதை நாம் பார்த்திருப்போம். நல்ல வரன் கூடி வந்தாலும் அவர்களுக்குள் ஜாதகப் பொருத்தம் இருப்பதில்லை. எவ்வளவு வரன்கள் பார்த்தாலும் ஏதாவது ஒரு குறை இருந்து கொண்டே தள்ளிப் போகும். இப்படி திருமண பந்தத்தில் இணைய இருக்கும் கன்னிப் பெண்களுக்கு திருமணம் சார்ந்த பிரச்சனைகள் இருந்தால் அவர்கள் வீட்டில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமிக்கு இந்த வழிபாடு செய்யலாம்.

வெள்ளிக்கிழமை அன்று பூஜை அறையில் தாமரை கோலம் போட்டு வைக்க வேண்டும். தாமரையில் லக்ஷ்மி தேவி வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. மகாலட்சுமி தாமரை புஷ்பத்தில் தான் வீற்றிருக்கிறாள். அந்த தாமரை கோலத்தை பூஜையறையில் போட்டுவிட்டு, அதன் மேல் ஒரு ஐந்து முக குத்து விளக்கை வைக்க வேண்டும். ஐந்து முக குத்து விளக்கில் அதிர்ஷ்ட லட்சுமி வாசம் செய்கிறாள். குத்து விளக்கை வழிபடுபவர்களுக்கு குடும்பம் சார்ந்த பிரச்சனைகள் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.

ainthu-muga-vilakku

குத்துவிளக்கை நன்கு பளபளப்பாக சுத்தம் செய்து பூஜையில் வையுங்கள். அதற்கு முறையாக மஞ்சள், குங்குமம் அல்லது சந்தனம், குங்குமம் இட்டுக் கொள்ளலாம். குத்துவிளக்கிற்கு பொட்டு வைக்கும் பொழுது ‘மகாலட்சுமி போற்றி ஓம்’ என்று சொல்லிக் கொண்டே வைக்க வேண்டும். பின்பு அதற்கு வாசனை மிகுந்த மலரால் அலங்காரம் செய்ய வேண்டும். அதில் சுத்தமான நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி வைக்க வேண்டும். அதில் தாமரைத் தண்டு திரி அல்லது பஞ்சு திரி வைத்து தீபமேற்றி, மகாலட்சுமி உடைய 108 போற்றிகளை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செய்து வந்தால் நிச்சயம் மனதிற்கு பிடித்த வரன், கன்னிப் பெண்களுக்கு அமையும். இந்த பூஜையை திருமணம் நிச்சயிக்க இருக்கும் மணப்பெண் செய்வது தான் முறையாகும். மகாலட்சுமி தாயை நினைத்து நல்ல வரன் அமைய, பூஜை செய்வது நல்ல பலன்களையும் கொடுக்கும். மேலும் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக மகாலட்சுமிக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

vilvam1

தாமரை மற்றும் வில்வம் இந்த இரண்டும் மகாலட்சுமி அம்சமாக இருப்பவை. வில்வ இலை சிவனுக்கு மட்டுமல்ல, மகாலட்சுமிக்கும் உரிய விருட்சமாகும். வில்வ இலையைக் கொண்டு மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்து வந்தால் வீட்டில் செல்வ வளம் நிலைக்கும். இழந்த செல்வங்கள் மீண்டும் கிடைக்கும். உங்களை ஏமாற்றிய தட்டிப்பறித்த செல்வங்கள், சொத்துக்கள் எல்லாம் மீண்டும் திரும்ப உங்களுக்கு கிடைக்கும். நல்ல வரன் அமையவுன், செல்வம் நிலைக்கவும் வீட்டில் மகாலட்சுமிக்கு இவற்றை செய்யுங்கள், நீங்களும் பயன்பெறலாம்.

இதையும் படிக்கலாமே
வீட்டை விட்டு வெளியே கிளம்பும் பொழுது மனைவி கையால் இதை மட்டும் வாங்கிக் கொண்டு சென்றால் வருமானம் ஓஹோவென்று இருக்கும் தெரிந்து கொள்ளுங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.