உங்களின் எத்தகைய பிரச்சனைகளும் 7 நாட்களில் தீர இங்கு சென்று வழிபடுங்கள்

nallandavar
- Advertisement -

முற்லங்களில் கிராம தெய்வங்களின் வழிபாடு என்பது ஒவ்வொரு கிராமத்தில் வசிக்கின்ற மக்களின் ஒற்றுமையை மேலோங்கச் செய்து, அனைவருக்கும் நன்மை ஏற்பட வழிவகுத்தது. இன்றும் பல கிராமங்களில் தங்களின் குடும்பத்தில் ஏற்படும் எத்தகைய பிரச்சினைகளையும் தீர்க்க தங்களின் குலதெய்வமாக இருக்கும் கிராம தெய்வங்களையே மக்கள் வழிபடுகின்றனர். அப்படி தங்களை உண்மையாக வழிபடும் பக்தர்களின் குறையை ஏழு நாட்களில் தீர்க்கும் தெய்வம் இருக்கும் அதிசய கோயில் மணப்பாறை அருள்மிகு நல்லாண்டவர் திருக்கோயில் ஆகும். அக்கோயிலை பற்றிய மேலும் பல சிறப்புகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

nallandavar

அருள்மிகு நல்லாண்டவர் கோயில் வரலாறு

சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் பழமையான கோயிலாக இருக்கிறது இந்த நல்லாண்டவர் கோவில். இக்கோயிலின் பிரதான தெய்வமாக நல்லாண்டவர் இருக்கிறார். கோயிலின் தல விருட்சமாக காட்டு மின்னை மரம் இருக்கிறது.

- Advertisement -

மாய மானை ராமர் பூண்டிய தலம் இது. இதனால் தான் இப்பகுதி மான்பூண்டி தலம் எனப்படுகிறது. இப்பெயர் காலப்போக்கில் மருவி மாமுண்டி ஆண்டவர் கோயிலாக விளங்குகிறது என வரலாறு கூறினாலும், இப்பகுதியில் முற்காலத்தில் வாழ்ந்த மான்பூண்டி வள்ளல் என்கிற ஒருவரின் வரலாற்றோடு இக்கோயிலின் வரலாறும் தொடர்பு கொண்டுள்ளது எனக் கூறுகிறார்கள்.

nallandavar

வலிமையும், மந்திர ஆற்றல் சித்துக்களும் கொண்ட வீரராக விளங்கியவர் இப்பகுதியை ஆண்ட மான்பூண்டி அரசர். சிறப்பாக ஆட்சி புரிந்த இவர் இப்பகுதி மக்களை கள்வர்களிடமிருந்தும், காட்டு விலங்குகளிடமிருந்தும் காப்பாற்றி வந்தார். ஒருமுறை இத்தலத்திற்கு வடக்குப் பகுதியில் அமைந்துள்ள குளத்திற்கு சப்த கன்னிமார்கள் நீராட வந்தனர். அப்போது கள்வர்கள் கூட்டம் ஒன்று அந்த சப்தகன்னியர்களுக்கும் தொல்லை கொடுத்தது. இதனால் வேதனை அடைந்த சப்த கன்னியரும் தங்களை யாராவது காக்குமாறு கூக்குரல் இட்டபோது, சத்தத்தை கேட்டு குதிரையில் ஏறி விரைவாக அவ்விடத்திற்கு வந்து, கள்வர்கள் அனைவரையும் விரட்டி அடித்தார் மாமுண்டி அரசர்.

- Advertisement -

சரியான நேரத்தில் எங்கள் உடன் பிறந்த அண்ணன் போல் வந்து காப்பாற்றியதால் உங்களை அனைவரும் நல்லண்ணன் என அழைப்பார்கள் என்று கூறி மாமுண்டி அரசருக்கு சப்த கன்னியர்களும் அருள் புரிந்தனர். அன்றிலிருந்து இக்கோயிலின் தெய்வம் நல்லண்ணன், நல்லாண்டவர், மாமுண்டி ஆகிய பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

nallandavar

ராமாயண காலத்தில் மாயமானின் அழகில் மயங்கி அதை பிடிக்குமாறு ராமனிடம் சீதை கூறிய போது, ஸ்ரீராமன் அந்த மானை அம்புவிட்டு சாயத்த இடமே இந்த மான்பூண்டி தலம் என கூறப்படுகிறது. பூண்டுதல் என்றால் சாய்த்தல் என்று பொருள். மான்பூண்டி சீமை என்று இப்பகுதியை பழங்கால மக்கள் அழைத்துள்ளனர். மாமுண்டி ஆறு ஓடி வரும் இப்பகுதிக்கு இருபுறமும் மணம் மிக்க மலர் சோலைகள் இருந்ததாகவும், அதன் காரணமாகவே இவ்வூருக்கு அருகில் உள்ள மணப்பாறை எனும் ஊருக்கு அப்பெயர் உண்டானது என கூறுகிறார்கள். இப்பகுதியின் தலைவராக விளங்கிய மாவீரர் மாமுண்டி நீதிநெறியோடு ஆட்சி புரிந்து, ஆன்மீகத்திலும் மிகவும் சிறந்து விளங்கினார். பில்லி பிணிகள் அகற்றுவதில் சிறந்த சித்தனாக விளங்கிய மாமுண்டி சித்தர் உறையும் கோயிலாக இது இருக்கிறது. இக்கோயில் கட்டப்படுவதற்கு முன்பாக பொந்துபுளி கருப்பண்ணாசுவாமி இங்கே இருந்துள்ளார். இவர் மாமுண்டி சித்தரின் இதயம் நிறைந்த தெய்வம் ஆவார்.

- Advertisement -

மாதவபட்டியில் இருந்த ஒரு புளிய மரத்தில் இருந்த அதிக பொந்துகள் அங்கிருந்த மக்களை அச்சத்தில் ஆழ்த்தின. இதனால் அப்புளியமரத்தை அவ்வூர் மக்கள் வெட்ட முயன்றபோது, இங்கே எனக்கு ஒரு கோவில் கட்டினால் மக்களின் அச்சத்தை நான் போக்குகிறேன் என அசரீரி ஒலித்தது. அதன் படியே மக்களும் சேர்ந்து இங்கே இருக்கும் இக்கோவிலை கட்டி முடித்தனர். சைவ – வைணவ கோவில் சிறப்புக்களை தாங்கிய தலமாக இக்கோவில் இருக்கிறது. திருநீறு, துளசி தீர்த்தம் திருப்பாதம் இங்கே பிரசாதமாக பக்தர்களுக்கு தரப்படுகின்றன

அருள்மிகு நல்லாண்டவர் கோயில் சிறப்புக்கள்

மிகப்பெரிய பிரகாரத்துடன் அமைக்கப்பட்ட கோவிலில் விநாயகர், ஆஞ்சநேயர், பரிக்காரர், மதுரைவீரன், ஏழு கருப்பண்ண சுவாமி, ஓங்கார விநாயகர், பட்டத்து யானை, பேச்சியம்மன், நல்லாண்டவர் யானை தெப்பக்குளம் முருகன் ஆகிய தெய்வங்களுக்கு தனி சன்னதிகள் இருக்கின்றன.

nallandavar

நல்லாண்டவருக்கு நல்லையா, ராஜகோபாலன், இலக்கையன், நல்லேந்திரன் ஆகிய திருநாமங்கள் இருக்கின்றன. இக்கோயிலில் காலில் விலங்கு பூட்டப்பட்டு, கையில் கமண்டலத்துடன், ஆணி தைத்த செருப்பை அணிந்து கொண்டு இருக்கும் பிரம்மச்சரிய தெய்வமான லாட சன்யாசி பக்தர்களின் சகல நோய்களையும் தீர்க்கும் வைத்தியராக இருக்கிறார். சிறந்த சித்தரான இவர். யானைகள் மலைக்குச் செல்லும் பாதையில் இருக்கும் இக்கோயிலில் ஏழு கருப்பு பேச்சியாத்தாள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களின் ஆற்றலை கண்டு வியந்து, அந்த தெய்வங்களின் சக்திகளை ஒரு கலயத்திற்குள் திரட்டி எடுத்துச் செல்ல முயன்ற போது, முத்துக்கருப்பன் சாமி லாட சாமியின் முயற்சியை முறியடித்தார். இதன் பின்னர் தனது தவறை உணர்ந்த மாடசாமி இத்தலத்திலேயே முத்துக்கருப்பனின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் அருகில் அமர்ந்து விடுகிறார்.

nallandavar

கோயிலின் சிறிய ராஜ கோபுரம் மதுரை மாநகரை நோக்கி செல்லும் வழியில் தனது துணைவியார்கள் வெள்ளையம்மாள் மற்றும் பொம்மியம்மாள் சமேதமாக மதுரை வீரன் களைப்பாரிய இடத்தில் மதுரை வீரனுக்கு ஒரு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இங்கே ஒரே கல்லில் ஏழு தெய்வங்களின் உருவங்கள் செதுக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த ஏழு கருப்பர்களின் ஏவலர்களான கம்பீர தோற்றத்தோடு மகா முனீஸ்வரரின் சிலைகள் எழுப்பப்பட்டுள்ளன. இக்கோயிலில் சப்த கன்னிமார்களும் நல்லாண்டவரின் சகோதரிகளாக அறிவிக்கப்பட்டு மூலவருக்கு அருகில் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார்கள். இக்கோயிலில் இந்த சப்த கன்னியருக்கு தான் முதல் பூஜை. லாட சன்யாசி எனப்படும் வடநாட்டு சித்தருக்கு இரண்டாவது பூஜை செய்யப்படுகிறது. மூன்றாவது பூஜையையே இக்கோயிலின் பிரதான தெய்வமான நல்லாண்டவர் ஏற்கிறார்.

Veerabhadra

குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள், உடன்பிறந்தவர்களுக்கு ஏற்படும் சங்கடங்கள், கணவன்-மனைவிக்குள் ளாக எழும் பிரச்சனைகள், விஷ ஜந்துக்களால் ஏற்படும் தொந்தரவுகள், பெண்களுக்கு மனம் சம்பந்தமாக ஏற்படும் பாதிப்புகள் போன்ற பிரச்சனைகள் தீர இங்கு வந்து நல்லாண்டவரை வழிபட்டால் நமக்கு அண்ணனாக இருந்து நமது அத்தனை பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பார் என்பது ஐதீகம். எத்தகைய பிரச்சினைகளையும் நல்லாண்டவர் ஏழு நாட்களில் தீர்த்து வைப்பார் என நம்பிக்கையுடன் கூறுகின்றனர் இங்கு வரும் பக்தர்கள். இங்குள்ள ஏழு கருப்பு சுவாமியை வழிபட்டால் உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டங்கள் அதிகரிக்கும். வேண்டுதல் நிறைவேறியதும் சுவாமிக்கு பக்தர்கள் வேஷ்டி துண்டு மற்றும் பரிவட்டம் சாத்தி அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்

கோயில் அமைவிடம்

அருள்மிகு நல்லாண்டவர் திருக்கோயில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் மணப்பாறை பகுதியில் அமைந்துள்ளது.

கோயில் நடை திறப்பு

காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

கோயில் முகவரி

அருள்மிகு நல்லாண்டவர் திருக்கோயில்
மணப்பாறை
திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 621306

இதையும் படிக்கலாமே:
வியாபார நஷ்டம் நீங்க இக்கோயில் செல்லுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Nallandavar temple history in Tamil. It is also called as Nallandavar kovil manapparai in Tamil or Manaparai sri nallandavar in Tamil or Kudumba prachanaigal theera in Tamil or Manaparai nallandavar in Tamil.

- Advertisement -