நந்தி போற்றி

Prathosam
- Advertisement -

எல்லாம் ஈசனின் செயல் என்று கூறுவார்கள். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று இறைவனுக்குரிய தொழில்களில் நம்மிடம் இருக்கும் தீமைகளையும், கர்ம வினைகளையும் அழித்து நமக்கு வரத்தை அருள்பவர் ஈஸ்வரன் ஆவார். அவரின் வாகனம் நந்தி பகவான் ஆவார். சிவனின் அணுக்க தொண்டர். அவர் சிவபெருமானை வழிபடும் சிறப்புக்குரிய தினம் தான் பிரதோஷ தினமாகும். அன்றைய தினத்தில் நந்தி பகவானை துதித்து வழிபடுவதற்கான நந்தி போற்றி இதோ.

Nandhi

நந்தி போற்றி

ஓம் அன்பின் வடிவே போற்றி
ஓம் அறத்தின் உருவே போற்றி
ஓம் அகிலத்தை காப்பாய் போற்றி
ஓம் அரனுக்குக் காவலனே போற்றி
ஓம் அரியாய் வந்து அமர்ந்தவனே போற்றி
ஓம் அம்பலக் கூத்தனே போற்றி
ஓம் ஆலயத்தின் முன் இருப்பாய் போற்றி
ஓம் இருளை ஒழிப்பவனே போற்றி
ஓம் இடபமே போற்றி
ஓம் இடர்களைத் தடுப்பவனே போற்றி
ஓம் ஈகை உடையவனே போற்றி
ஓம் உலக ரட்சகனே போற்றி
ஓம் உபதேச காரணனே போற்றி
ஓம் ஊக்கமுடையவனே போற்றி
ஓம் எருது உருவம் கொண்டவனே போற்றி
ஓம் எங்களுக்கு வரம் தருவாய் போற்றி
ஓம் ஏவல்களை ஒழித்தவனே போற்றி
ஓம் ஐயன்பால் அமர்ந்தவனே போற்றி
ஓம் ஒப்பில்லாத தேவனே போற்றி
ஓம் ஓங்கார வடிவானவனே போற்றி
ஓம் ஒளடதமாய் இருப்பவனே போற்றி
ஓம் கணநாயகனே போற்றி
ஓம் கஷ்டங்களைப் போக்குவாய் போற்றி
ஓம் கல்யாண மங்களமே போற்றி
ஓம் கலைகள் பல தெரிந்தோய் போற்றி
ஓம் கற்பகத் தருநிழல் அமர்ந்தாய் போற்றி
ஓம் கஸ்தூரி நிற ஒளி அணிந்தாய் போற்றி
ஓம் கவலைகளை ஒழிக்கும் வல்லவனே போற்றி
ஓம் காலனுக்கும் காவலனே போற்றி
ஓம் கிரிவல்லயன் துணையே போற்றி
ஓம் கீர்த்திகள் பல பெற்றாய் போற்றி

- Advertisement -

ஓம் குணநிதியே போற்றி
ஓம் குற்றம் களைவாய் போற்றி
ஓம் கூத்தனுக்கு மத்தளம் அடித்தாய் போற்றி
ஓம் கோலங்கள் பல செய்வாய் போற்றி
ஓம் கைலாச வாகனனே போற்றி
ஓம் கந்தனைக் கையால் அமர்த்தினாய் போற்றி
ஓம் காலமெல்லாம் ஈசன் சிந்தனையே போற்றி
ஓம் பஞ்சாசட்ர ஜபம் செய்பவனே போற்றி
ஓம் பஞ்சலிங்கத்தில் ஒருவனாய் ஆனாய் போற்றி
ஓம் பரமசிவன் தன்மை தெரிந்தோய் போற்றி
ஓம் பார்வதிக்கும் வாகனமாய் நின்றாய் போற்றி
ஓம் பிரதோஷ காலம் உடையனே போற்றி
ஓம் பிறவிப் பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பிஞ்ஞகன் ஏவல் செய்வாய் போற்றி
ஓம் புகழ்கள் பல பெற்றாய் போற்றி
ஓம் பூதங்களுக்குத் தலைவனே போற்றி
ஓம் பூதப்பிரதேச பிசாசுகளை அடக்குவாய் போற்றி
ஓம் மகாதேவனே போற்றி
ஓம் மகிமை பல செய்வாய் போற்றி
ஓம் மகேஸ்வரன் தூதனே போற்றி
ஓம் மங்கள நாயகனே போற்றி
ஓம் மதோன்மத்தன் போற்றி
ஓம் மஞ்சள் மகிமை கொடுப்பாய் போற்றி
ஓம் மணங்கள் செய் காரணனே போற்றி
ஓம் யந்திர மகிமை உனக்கே போற்றி
ஓம் அகிலமெல்லாம் உன் அருள் போற்றி
ஓம் மதங்கள் மேல் கொடி ஆனாய் போற்றி
ஓம் லட்சியமெல்லாம் உன் அருள் போற்றி
ஓம் தட்சனுக்கு உபதேசம் செய்தாய் போற்றி
ஓம் தண்டங்களின் மேல் அறிந்தாய் போற்றி

nandhi

ஓம் தயாபரம் அருள் பெற்றவனே போற்றி
ஓம் தஞ்சமென்றவர்களுக்கு அருள்செய்வாய் போற்றி
ஓம் நஞ்சுண்டவனை நாயகனாய் அடைந்தாய் போற்றி
ஓம் நாகநந்தனின் நயனம் தெரிந்தவனே போற்றி
ஓம் நாதமும் பிந்துவும் ஆனாய் போற்றி
ஓம் பழமும் சுவையும் நீயே போற்றி
ஓம் பண்புகள் பல செய்வாய் போற்றி
ஓம் பார் எல்லாம் உன்புகழ் போற்றி
ஓம் பிறவிப் பிணி அறுப்பாய் போற்றி
ஓம் அடியவர்க்கெல்லாம் அன்பே போற்றி
ஓம் ஆண்டவனிடம் அன்பு கொண்டாய் போற்றி
ஓம் ஆதார சக்திமயம் பெற்றாய் போற்றி
ஓம் சிவனின் வாகனமானாய் போற்றி
ஓம் இன்னல் தீர்க்கும் இறைவனே போற்றி
ஓம் நீண்ட கொம்புடையவனே போற்றி
ஓம் நீலாயதாட்சி அருள் நின்றாய் போற்றி
ஓம் வேதங்களை காலாய் உடையவனே போற்றி
ஓம் வேள்விக்குத் தலைவனே போற்றி
ஓம் வித்யா காரணனே போற்றி
ஓம் விவேகம் எனக்குத் தருவாய் போற்றி
ஓம் விண்ணுலகம் செல்லும் வழியே போற்றி
ஓம் வில்வத்தின் மகிமையே போற்றி
ஓம் விஸ்வே உன் வல்லமையே போற்றி
ஓம் வேல் உடையவனே போற்றி
ஓம் மகா காணனே போற்றி
ஓம் மக்கள் பேறு தருவாய் போற்றி
ஓம் மாயைகளை அகற்றுவாய் போற்றி
ஓம் வெள்ளை நிறம் உடையாய் போற்றி

- Advertisement -

nandhi

ஓம் உலகம் அறிந்த உத்தமனே போற்றி
ஓம் உன் மகிமை உலகமெல்லாம் போற்றி
ஓம் ஊஞ்சல் ஆட்டுபவனே போற்றி
ஓம் ஊடலுடக்குதவியவனே போற்றி
ஓம் உபதேசம் பெற்றவனே போற்றி
ஓம் உலகுக்கு அருள்வாய் போற்றி
ஓம் பிழைகள் பொறுப்பாய் போற்றி
ஓம் பிள்ளையார் சோதரனே போற்றி
ஓம் மாயை ஒடுக்கும் மாடாய் நின்றாய் போற்றி
ஓம் மாமன்னரும் உன் பணி செய்வாய் போற்றி
ஓம் மகதேவன் கருணையே போற்றி
ஓம் மகாவிஷ்ணுவே போற்றி
ஓம் பரப்பிரம்மமே போற்றி

nandhi

சிவனின் வாகனமான நந்தி பகவான் மீது இயற்றப்பட்ட போற்றி துதி இது. இந்த போற்றி துதியை சிவபெருமான் கோவிலுக்கு சென்று சிவபெருமானை வழிபடுவதற்கு முன்பு அவரின், வாகனமான நந்தி பகவானை முதலில் தரிசித்து இந்த போற்றி துதிகளை கூறி வழிபடுவது சிறப்பு. குறிப்பாக பிரதோஷ காலங்களில் நந்தி பகவானுக்கு அருகம்புல் மாலையை சாற்றி, அரிசிமாவில் வெல்லம் கலந்து நைவேத்தியம் வைத்து இத்துதிகளை கூறி வழிபட்டால் நோய்கள் மற்றும் வறுமை நீங்கும். பிள்ளை பேரில்லாதவர்களுக்கு குழந்தைகள் பிறக்கும். வேலைவாய்ப்பு தேடுபவர்கள் தங்களுக்கு விருப்பமான வேலைகள் பெறுவார்கள்.

- Advertisement -

lingam

மனிதர்கள் நாகரீகமடைய தொடங்கிய காலத்தில் இருந்து மாடுகள் மனித வாழ்வில் முக்கிய பங்காற்றியிருக்கின்றன. பசுமாடுகள் மனிதர்களின் பால் தேவையை பூர்த்தி செய்து வருவதை போல எருதுகள் விவசாய நிலங்களை உழுவதற்கும், வண்டிகளை இழுப்பதற்கும் பயன்படுகின்றன. இந்த எருது தான் சிவபெருமானின் வாகனமான நந்தியாக கருதப்படுகிறது. நந்தி பகவான் சிவனின் நெருக்கமான சேவகன் மற்றும் சீடர் ஆவார். பிரதோஷ காலத்தில் நந்தி பகவானை இந்த போற்றி துதிகள் கூறி வழிபட நமது விருப்பங்கள் அனைத்தையும் சிவபெருமானிடம் கொண்டு சேர்த்து நிறைவேற்றுவார் நந்தி பகவான்.

இதையும் படிக்கலாமே:
சண்முக கடவுள் போற்றி

இது போன்று மேலும் பல மந்திரங்கள் குறித்து தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview we have Nandhi potri in Tamil. It is also called as Nandhi slogam in Tamil or Nandhi mantra in Tamil.

- Advertisement -