வாழ்க்கையில் திசையறியாமல் தவிக்கும் போது இந்த வழிபாட்டை செய்தால் போதும். மலை போல் முன் நின்ற பிரச்சினை கூட பனி போல உருகி விடும்.

nandhi siva crying lady
- Advertisement -

உலகில் பிறந்த அனைத்து மனிதர்களுக்கும் ஏதாவது ஒரு கவலை இருந்து கொண்டே தான் இருக்கும். அவ்வாறு கவலைகள் ஏற்படும் பொழுது நாம் நம் உடன் இருப்பவர்களிடம் அந்த கவலைகளை பகிர்ந்து கொள்கிறோம். உடன் இருப்பவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாத கவலைகளை நாம் கடவுளிடம் தான் பகிர்கிறோம். திக்கற்றவர்களுக்கு தெய்வம் தான் துணை என்று கூறுவார்கள். அந்த வகையில் நாம் தெய்வத்திடம் எப்படி முறையிட்டால் நம் மனக் கவலைகள் தீரும் என்பதை பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்ப்போம்.

நம்முடைய தீராத மனக்கவலையை தீர்த்து வைக்கும் தெய்வமாக கருதப்படுபவர் நந்தி பகவான். அனைத்து சிவாலயங்களிலும் நந்தி பகவான் இருப்பார். சிவபெருமானின் பூதகணங்களில் முதல்வராகத் திகழ்பவர் நந்தி பகவான். மேலும் சிவபெருமானின் வாகனமாகவும் இருப்பவர் நந்தி பகவானே. அதுமட்டுமின்றி இவரின் அனுமதி இல்லாமல் நம்மால் சிவபெருமானின் ஆசிர்வாதத்தை பெற முடியாது.

- Advertisement -

பிரச்சனைகள் தீர நந்தி வழிபாட்டு முறை
நந்தி பகவானுக்கு நாம் என்னென்ன செய்கிறோமோ அது எல்லாமே சிவனையே சேரும். நந்தி பகவானிடம் நம்முடைய மனக்கவலைகளை ஒப்படைத்தோம் என்றால், அவர் சிவபெருமானிடம் நமக்காக பேசி பரிந்துரை செய்து, நம் மனக் கவலைகளை விரைவில் தீர்க்க வழிவகை செய்வார். அப்படிப்பட்ட நந்தி பகவானுக்கு நாம் இரண்டு தீபங்களை ஏற்றி வைக்க வேண்டும். அது நல்லெண்ணெய் தீபமாகவும் இருக்கலாம் அல்லது நெய் தீபமாகவும் இருக்கலாம்.

பிறகு நந்தியை வலம் வர வேண்டும். நந்தியை மட்டும் வலம் வந்தால் போதாது, நந்தியோடு சேர்த்து சிவபெருமானையும் வலம் வர வேண்டும். 5, 9, 11 என்ற எண்ணிக்கையில் வலம் வந்த பிறகு நந்தி பகவானின் வலது காதில் நம்முடைய தீராத மனக்கவலையை, பிரச்சினையை கூற வேண்டும். பிறகு நந்தி பகவானுக்கு மலர்களை சாற்ற வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு செய்த பிறகு, நந்தி பகவானுக்கும் சிவபெருமானுக்கும் சேர்த்தார் போல் அர்ச்சனை செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து தினமும் 108 நாட்கள் செய்து வர நம்முடைய மனக்கவலைகள் அகன்று மன நிம்மதி ஏற்பட்டு பிரச்சனைகள் தீரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இதையும் படிக்கலாமே: நரசிம்மரின் இந்த ஒரு சக்கரத்தை இப்படி வரைந்து வீட்டிலேயே வழிபட்டால் போதும். நரசிம்மரின் ஆசியால் நீண்ட நாட்களாக இருந்து வந்த பயம், கவலை அனைத்தும் நீங்கி, உடலில் புது தெம்பும் தைரியமும் பிறக்கும்.
இத்துடன் சிவாலயங்களில் நாம் உளவாரப் பணி மேற்கொண்டாலும் நம்முடைய பிரச்சனைகளுக்கு  தீர்வுகள் எளிதில் கிட்டும். மனக் கவலையை போக்கும். இந்த எளிய வழிபாட்டு முறையை மேற் கொண்டு நிம்மதியுடனும் சந்தோஷத்துடனும் வாழலாம்.

- Advertisement -