நரசிம்மரின் இந்த ஒரு சக்கரத்தை இப்படி வரைந்து வீட்டிலேயே வழிபட்டால் போதும். நரசிம்மரின் ஆசியால் நீண்ட நாட்களாக இருந்து வந்த பயம், கவலை அனைத்தும் நீங்கி, உடலில் புது தெம்பும் தைரியமும் பிறக்கும்.

Narasimmar
- Advertisement -

வாழ்க்கையில் இது நடந்து விடுமோ, அது நடந்துவிடுமோ என்ற பயத்துடன் வாழ்பவர்கள் பல பேர் இருக்கிறார்கள். பயம் மனதில் ஏற்பட்டால் கவலைகளும், கலக்கங்களும் ஏற்பட்டுவிடும்.. எப்பேர்ப்பட்ட பயமாக இருந்தாலும், கவலையாக இருந்தாலும், கஷ்டங்களாக இருந்தாலும், அவை அனைத்தையும் போக்கக்கூடிய ஆபத் பாண்டவனாக உதவி செய்ய வருபவரே நரசிம்மர். அப்படி பட்ட நரசிம்மரை வீட்டிலேயே எப்படி வழிபட்டு, பூஜை செய்தால் நாம் பலன்களை பெற முடியும் என்று பார்ப்போம் வாருங்கள்.

பார்ப்பதற்கு உக்கிரமாக இருந்தாலும், மனதளவில் சாந்தமாக இருப்பவரே நரசிம்மர். தன்னை மனதார நினைத்து அழைப்பவருக்கு அவர்களின் கஷ்டங்களை தீர்க்க வல்லவர் நரசிம்மர். கடவுள் நினைத்தால் மட்டுமே இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நம்மை காப்பாற்ற முடியும் என்று நினைக்கும் போது, “ஓம் மகா சிம்ஹாய நமஹ”, “ஓம் உக்கிர சிம்ஹாய நமஹ”, “ஓம் நரசிம்மாய நமஹ” என்ற மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது நம்முடைய இக்கட்டான சூழ்நிலைகள் மறைய நரசிம்மர் நமக்கு அருள் புரிவார்.

- Advertisement -

நரசிம்மர் வழிபாட்டு முறை:
இதுவரை வாழ்நாளில் சம்பாதித்த அனைத்து செல்வங்களையும் இழந்து, மதிப்பையும் இழந்து, மரியாதையையும் இழந்து, அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாமல் இருப்பவர்கள் ஐந்து வெற்றிலைகளை வாங்கி வந்து, அந்த வெற்றிலையின் நுனி கிழக்கு அல்லது வடக்கு பார்த்தவாறு வைத்து, அந்த வெற்றிலையில் ஐந்து நெய் தீபங்களை தினமும் ஏற்றி வர வேண்டும்.

நரசிம்மருக்கு உகந்த நெய்வேத்தியமாக கருதப்படுவது பானகம். அந்த பானகத்தை நெய்வேத்தியமாக வைத்து, அவரை மனதார நினைத்து, வழிபட்டு வந்தோம் என்றால் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி படிப்படியாக நம் வாழ்வில் முன்னேறலாம். தினமும் விளக்கேற்ற இயலாது என்று நினைப்பவர்கள் ஏகாதசி, அஷ்டமி போன்ற திதிகளில் எட்டு நெய் தீபங்களை ஏற்றி பானகத்தை நெய்வேத்தியமாக வைத்து நரசிம்மரை வழிபடலாம்.

- Advertisement -

நரசிம்மருக்கு பூஜை செய்யும் முறை:
பொதுவாக நரசிம்மரின் புகைப்படத்தை வீட்டில் வைத்து வணங்குவது அரிதான ஒரு செயல். ஏனென்றால் அவர் பார்ப்பதற்கு உக்கிரமாக இருப்பார் என்பதால் பலரும் வீட்டில் வைத்திருக்க மாட்டார்கள். இந்த பூஜை செய்வதற்க்கும் அவரின் புகைப்படம் தேவை படாது. இப்போது முதலில் ஒரு பலகையை எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு பலகை இல்லாத பட்சத்தில் நம் வீட்டு பூஜை அறை செல்ஃபிலோ அல்லது தரையிலோ சுத்தம் செய்து, அதில் அரிசி மாவு அல்லது மஞ்சள் அல்லது குங்குமம் இவை மூன்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி நரசிம்மரின் சக்கரத்தை வரைய வேண்டும்.

நரசிம்மர் சக்கரம்:
முதலில் நட்சத்திரத்தை போட வேண்டும். பிறகு அதை சுற்றி ஒரு வட்டத்தை போட வேண்டும். அதற்கு மேல் அரைவட்டம் போல் 14 அரை வட்டங்களை போட வேண்டும். இதுவே நரசிம்மரின் சக்கரம் ஆகும். இந்தச் சக்கரத்தை வரைந்த பிறகு, அந்த நட்சத்திரத்தின் நடுவில் “ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாய நமஹ” என்று எழுத வேண்டும்.

- Advertisement -

பிறகு கிழக்கு பார்த்தவாரோ அல்லது வடக்கு பார்த்தவாறு ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும். நெய்வேத்தியமாக பானகத்தை வைக்க வேண்டும். பிறகு நரசிம்மருக்குரிய மந்திரமாக “ஓம் சர்வாப்பனே நமஹ”, “ஓம் லக்ஷ்மி நரசிம்மாய நமஹ” என்ற மந்திரத்தை உங்களால் இயன்ற அளவு 11, 21, 48, 108 என்ற எண்ணிக்கைகளில் உச்சரித்து வரவேண்டும்.

இதையும் படிக்கலாமே: சங்கை புதைத்து வைத்து இப்படி வழிபாடு செய்தால் போதும் நாம் கேட்கும் அனைத்தும் இரட்டிப்பாக கிடைக்கும்.

இவ்வாறு செய்வதன் மூலம் நம்முடைய பயங்கள் அனைத்தும் நீங்கி, தைரியம் பிறக்கும். ஒரு காரியத்தை நாம் செய்வதற்கு நமக்கு தைரியம் மிகவும் தேவை. அந்த தைரியத்தை தரக்கூடியவர் நரசிம்மரே. நரசிம்மரை வழிபட வழிபட நமக்கு தைரியம் பிறக்கும். தைரியம் பிறந்தால் பயமும், பயத்துடன் சேர்ந்த கலக்கமும், கவலையும் நீங்கிவிடும். நம்முடைய பாவங்கள் அனைத்தையும் நீக்கி தைரியத்தை கொடுத்து நம் வாழ்வில் நாம் வெற்றி பெறுவதற்கு நரசிம்மர் அருள் புரிவார்.

- Advertisement -