உங்கள் நட்சத்திரத்தில் எந்த கடவுள், தேவர்கள், வீரர் பிறந்துள்ளார்கள் தெரியுமா ?

astrology-10
- Advertisement -

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கான கடவுள் யார் ? அந்த நட்சத்திரத்தில் வேறு யார் எல்லாம் பிறந்துள்ளார்கள் என்று பார்ப்போம் வாருங்கள்.

அசுவினி:
அசுவினி நட்சத்திரத்தில் அஸ்வத்தாமன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீசரஸ்வதி தேவி.

- Advertisement -

பரணி:
பரணி நட்சத்திரத்தில் துரியோதனன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீதுர்கா தேவி.

கிருத்திகை:
கிருத்திகை நட்சத்திரத்தில் கார்த்திகேயன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் முருகப் பெருமான்.

- Advertisement -

murugan

ரோகிணி:
ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணன் மற்றும் பீமசேனன் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீகிருஷ்ணன்.

மிருகசீரிடம்:
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் புருஷமிருகம் பிறந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் சிவ பெருமான்.

- Advertisement -

திருவாதிரை:
திருவாதிரை நட்சத்திரத்தில் கருடன், ருத்ரன், ஆதிசங்கரர்ரா மற்றும் மானுஜர் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் சிவ பெருமான்.

புனர்பூசம்:
புனர்பூசம் நட்சத்திரத்தில் ராமன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீராமர்.

Raman

பூசம்:
பூசம் நட்சத்திரத்தில் பரதன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீதட்சிணாமூர்த்தி.

ஆயில்யம்:
ஆயில்யம் நட்சத்திரத்தில் தர்மராஜா,லக்ஷ்மணன்,சத்ருகணன் மற்றும் பலராமன் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஆதிசேசன் .

மகம்:
மகம் நட்சத்திரத்தில் சீதை, அர்ச்சுணன் மற்றும் யமன் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம்  ஸ்ரீசூரிய பகவான்.

பூரம்:
பூரம் நட்சத்திரத்தில் பார்வதி,மீனாட்சி மற்றும் ஆண்டாள் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஆண்டாள் தேவி.

kamatchi amman

உத்திரம்:
உத்திரம் நட்சத்திரத்தில் மஹாலக்ஷ்மி மற்றும் குரு பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீமகாலட்சுமி தேவி.

அஸ்தம்:
அஸ்தம் நட்சத்திரத்தில் நகுலன்-சகாதேவன், மற்றும் லவ-குசன் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீகாயத்ரி தேவி.

சித்திரை:
சித்திரை நட்சத்திரத்தில் வில்வ மரம் பிறந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீசக்கரத்தாழ்வார்.

சுவாதி:
சுவாதி நட்சத்திரத்தில் நரசிம்மர் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீநரசிம்மமூர்த்தி.

narasimmar

விசாகம்:
விசாகம் நட்சத்திரத்தில் கணேசர் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீமுருகப் பெருமான்.

அனுசம்:
அனுசம் நட்சத்திரத்தில் நந்தனம் பிறந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீலட்சுமி நாரயணர்.

கேட்டை:
கேட்டை நட்சத்திரத்தில் தர்மன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீவராஹ பெருமாள்.

மூலம்:
மூலம் நட்சத்திரத்தில் அனுமன் மற்றும் ராவணன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஆஞ்சநேயர்.

shri panchmukhi hanuman

பூராடம்:
பூராடம் நட்சத்திரத்தில் பிரகஸ்பதி பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஜம்புகேஸ்வரர்.

உத்திராடம்:
உத்திராடம் நட்சத்திரத்தில் சல்யன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீவிநாயகப் பெருமான்.

திருவோணம்:
திருவோணம் நட்சத்திரத்தில் வாமனன், விபீசனன் மற்றும் அங்காரகன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஹயக்கிரீவர்.

அவிட்டம்:
அவிட்டம் நட்சத்திரத்தில் துந்துபி வாத்தியம் பிறந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஅனந்த சயனப் பெருமாள்.

சதயம்:
சதயம் நட்சத்திரத்தில் வருணன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீமிருத்யுஞ்ஜேஸ்வரர் .

பூரட்டாதி:
பூரட்டாதி நட்சத்திரத்தில் கர்ணன், மற்றும் குபேரன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஏகபாதர்.

karnan

உத்திரட்டாதி:
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ஜடாயு மற்றும் காமதேனு பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீமகாஈஸ்வரர்.

ரேவதி:
ரேவதி நட்சத்திரத்தில் அபிமன்யு மற்றும் சனிபகவான் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஅரங்கநாதன்.

- Advertisement -