பனியில் உங்க செடியில் இலைகள் உதிர்கிறதா? பூச்சி தொந்தரவு அதிகமாக இருக்கிறதா? மசாலா டப்பாவில் இருக்கும் இந்த பொருளை இப்படி பண்ணுங்க பிரச்சனை உடனே தீரும்!

plant-insects-pattai
- Advertisement -

உங்கள் வீட்டில் பூத்துக் குலுங்கும் பூச்சொடிகள் முதல் கனிகள், காய்கள் காய்க்கும் மரம், செடி, கொடி எதுவாக இருந்தாலும் அதில் பூச்சிகள் தொந்தரவு அதிகம் இருந்தால் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவது வேப்ப எண்ணெயை தான். இந்த எண்ணெயை பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் எளிதாக வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு பூச்சிக்கொல்லி மருந்து பற்றிய தோட்டக்கலை குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

தோட்டக்கலையில் மிகப்பெரிய பிரச்சினையாக வந்து நிற்பது பூச்சி தொந்தரவுகள் தான். சிறிய சிறிய செடிகளில் அதிகம் தாக்கக்கூடிய பூச்சிகள், புழுக்கள் போன்றவை அந்த செடிகளை முற்றிலுமாக சேதப்படுத்திவிடும். அதிலிருந்து நமக்கு பலன்கள் கிடைக்காமல் செய்து விடும். இந்த பூச்சி தொந்தரவை கட்டுப்படுத்துவதற்கு வேப்ப எண்ணெயை ஸ்ப்ரே செய்து விடுவார்கள், அல்லது பூச்சிக்கொல்லி மருந்துகளை செயற்கை முறையில் தெளிப்பார்கள். அப்படி செய்யாமல் ரொம்பவும் எளிதாக நம் வீட்டில் இருந்து எப்படி பூச்சிகளை அண்ட விடாமல், இலைகளை உதிரவிடாமல் செடியை பாதுகாப்பது?

- Advertisement -

பனிக்காலங்களில் அதிகம் பூச்செடிகளில் இருந்து இலைகள் உதிர ஆரம்பிக்கும். இதனால் அதிகம் பூக்களும் பூக்காது, தளிர்களும் தளிர்க்காது, எனவே இந்த பிரச்சனையையும் தீர்க்கக் கூடிய சத்துடன் கூடிய இந்த பூச்சிக்கொல்லி மருந்து எல்லா வகையான செடிகளுக்கும் பயன்பெறக் கூடியதாக அமைந்திருக்கிறது. இதற்காக நாம் எதுவுமே செலவு செய்யப் போவதில்லை. நம் வீட்டில் சமையல் கட்டில் இருக்கும் மசாலா டப்பாவில் இந்த பொருட்கள் நிச்சயம் எல்லோரும் வைத்திருப்போம்.

பூச்சி கொல்லிக்கு சிறந்த மருந்து வேப்ப இலை! வேப்ப இலை ஒரு கைப்பிடி அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் இதை போட்டு பாதி அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். இதனுடன் உங்கள் மசாலா டப்பாவில் இருக்கும் பட்டை துண்டுகளை நாலைந்து எடுத்துக் கொள்ளுங்கள். பட்டையில் இருக்கும் ஒருவித மூலக்கூறு பூச்சிகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும், எனவே செடியை விட்டு பூச்சிகள் ஓடிவிடும் என்பதால் இதை நாம் சேர்க்கிறோம்.

- Advertisement -

பின்னர் இவற்றுடன் 10 பூண்டு பற்களை தோலுடன் அப்படியே இடித்து சேருங்கள். உரலில் இட்டு இடித்து தோலுடன் அப்படியே தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். தண்ணீர் சிறிதளவு நன்கு கொதித்து, சுண்டியதும் ஆற வைத்து விடுங்கள். ஆற வைத்த இந்த தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை நீங்கள் செடிகளின் இலைகள், பூக்கள், தளிர்கள் போன்ற எல்லா பகுதிகளிலும் படும்படி நன்கு ஸ்பிரே செய்ய வேண்டும். இதை வேரில் ஊற்றுவதை விட, இந்த மாதிரி நீங்கள் செடி முழுவதும் படும்படி தெளித்து விட்டால் இலைகள் உதிர்வது தடுக்கப்படும். மேலும் இலைகளில் அமர்ந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத பூச்சிகள் கூட செடியை விட்டு நீங்கிவிடும்.

இதையும் படிக்கலாமே:
பூச்செடிகள் அதிக மொட்டு வைத்து பெரிய பெரிய பூக்களாக பூத்து, உங்கள் வீட்டை அழகாக்க வேண்டுமா? இதோ நீங்கள்சமையலுக்கு பயன்படுத்தும் இந்த காய் போதும். இத்தனை நாள் இது தெரியம்மா போச்சே.

இந்த ஒரு இயற்கையான பூச்சிக்கொல்லி மருந்தை நீங்கள் வாரம் ஒரு முறை தெளித்தால் போதும், எல்லா வகையான செடிகளுக்கும், எல்லா வகையான பூச்சிகளுக்கும் ஏற்புடையதாக இருக்கக் கூடிய இந்த எளிமையான பூச்சிக் கொல்லி உரத்தை இப்படி நீங்களும் கொடுத்து பாருங்க, உங்களுடைய செடிகளும் பூச்சிகள் தொந்தரவிலிருந்து தப்பித்து, இலைகள் உதிர்வது தடுக்கப்பட்டு நன்கு பச்சை பசேலென செம்மையாக வளரும்.

- Advertisement -