நர்சரியில் இருந்து ரோஜா செடி வாங்கி வந்தாலும் வளர மாட்டேங்குதா? இந்த குட்டி குட்டி டிப்ஸ் பாலோ பண்ணுங்க கண்டிப்பா வளரும்!

rose-plant-onion-peel
- Advertisement -

ரோஜா செடி வளர்க்க வேண்டும் என்கிற விருப்பம் ஆண், பெண் வித்தியாசம் இன்றி எல்லோருக்குமே இருப்பது தான். அப்படி முதல் முதலில் வளர்ப்பவர்கள் நர்சரியை நாடி செல்வது உண்டு. நர்சரிகளில் இருந்து வாங்கி வரப்படும் ரோஜா செடி பட்டு போய் விடுகிறதா? இந்த குட்டி குட்டி டிப்ஸ் ஃபாலோ பண்ணுனா போதும், கண்டிப்பா உங்க ரோஜா செடியும் வளர ஆரம்பிக்கும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதைத்தான் இந்த தோட்டக்குறிப்பு பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

நர்சரிகளில் இருந்து வாங்கி வரும் போது ரோஜா செடியை முதலில் நல்லா மண் வளம் கொண்ட ஊட்டச் சத்துள்ள தொட்டியில் அதனை மாற்றி அமைக்க வேண்டும். மண்ணானது வறண்டதாக இல்லாமல் ஈரப்பதத்துடன் தளர்வாகவும் இருக்க வேண்டும். அப்போது தான் செடிகளுக்கு ஆக்சிஜன் சுலபமாக கிடைக்கும். இறுக்கமான மண்ணாக இருக்கக் கூடாது.

- Advertisement -

ரோஜா செடியில் பூக்கின்ற பூக்களை பறித்த பின்பு அதனை ஒரு கத்தரிக்கோலால் கவ்வாத்து செய்ய வேண்டும். அதாவது காம்புடன் சிறிதளவு வெட்டி விட வேண்டும். அப்போது தான் மீண்டும் புதிய துளிர்கள் துளிர்க்க ஆரம்பிக்கும். இயற்கையான வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களைக் கொண்டு இதற்கு உரத்தை கொடுத்து வரலாம்.

முட்டை ஓட்டில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. அதே போல டீ தூளில் கூட ஏராளமான சத்துக்கள் உள்ளன. இவற்றை ரோஜா செடியின் முக்கிய உரமாக கொடுத்து வரலாம். மேலும் காய்கறி கழிவுகள் மற்றும் பழக்கழிவுகளையும் உரமாக்கி கொடுக்கலாம். வெங்காயத்தினுடைய தோலை தினமும் ஒரு லிட்டர் அளவிற்கு தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் அதனை தோலுடன் சேர்த்து அப்படியே ரோஜா செடிகளுக்கு கொடுத்து வரலாம், இதனால் பூச்சி தொந்தரவுகள் இருக்காது.

- Advertisement -

பூண்டு தோல், வெங்காயத்தோல் போன்றவற்றினை ரோஜா செடிகளுக்கு போடும் போது அதன் வாசம் பூச்சிகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் எனவே பூச்சிகள் அண்டாது. சிறுக சிறுக இவற்றில் இருக்கும் சாறு மண்ணிற்குள் இறங்கி மண்ணில் இருக்கக்கூடிய தேவையில்லாத நுண் பூச்சிகளும் இறந்து விடும். இதனால் வேர் அழுகல் நோய் பிரச்சனை வராது.

ரோஜா செடியின் மண் ஈரப்பதமாக எப்பொழுதும் இருக்க வேண்டுமே தவிர, அதிகப்படியான தண்ணீர் தேங்கி நிற்கக்கூடாது. இதனால் சிறிய சிறிய வேர்கள் அழிந்து விடும். பெரிய வேர்கள் மட்டுமே நிலைத்து நிற்கும். இதனால் ஊட்டச்சத்தை அதனால் அதிக அளவில் உறிஞ்சி கொள்ள முடியாமல் போய்விடும். அவ்வப்போது மண்ணை கிளறி விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
என்ன! வெயில் காலத்தில் ரோஜா செடி வாடாமல் இருக்க கல்லு கொடுக்கணும்மா?. இது என்ன புதுசா இருக்கு. வெயிலின் தாக்குதலில் இருந்து ரோஜா செடியை காக்க இதோ சூப்பர் டிரிக்ஸ்.

எறும்புகள், கொசுக்கள் தொந்தரவு இல்லாமல் இருக்க சிறிதளவு வேப்பிலைகளை பறித்து மண்ணை சுற்றிலும் போட்டு விடுங்கள். தேயிலை தூள் போடும் போது சர்க்கரை கலக்காததாக பார்த்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் எறும்பு தொல்லை வந்துவிடும். இந்த வெங்காய கரைசலை அடிக்கடி கொடுத்து வந்தாலே, புதிய புதிய தளிர்களில் நன்கு செழித்து வளர ஆரம்பிக்கும். காய்கறிகள் வேக வைத்த தண்ணீரையும் கீழே ஊற்றாமல் ரோஜா செடிகளுக்கு ஊற்றி வாருங்கள். இதனால் 10 பைசா செலவில்லாமல் வீட்டில் இருக்கும் உரங்களைக் கொண்டு நம்முடைய ரோஜா செடியை செழிப்பாக செழித்து வளர செய்யலாம்.

- Advertisement -