இந்த டோனரை உங்கள் முகத்தில் ஸ்பிரே செஞ்சு பாருங்க. பிறகு  பூதக்கண்ணாடி வைத்து தேடினாலும் ஒரு சின்ன கரும்புள்ளியை கூட உங்கள் முகத்தில் கண்டுபிடிக்கவே முடியாது.

tonner
- Advertisement -

முகப்பரு, கரும்புள்ளி, கொப்பளம், கட்டிகள், இல்லாத அழகான முகம் தேவை என்று தான் எல்லோரும் விரும்புவோம். ஆனால் எல்லோருக்கும் சருமம் கிளியர் ஆக இருப்பது கிடையாது. ஒவ்வொருவர் முகத்திலும், ஒவ்வொரு பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. முகத்தில் இருக்கக்கூடிய எல்லா விதமான பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க சூப்பரான ஒரு டோனர் நம் வீட்டிலேயே, நம் கையாலேயே, தயார் செய்யலாம். அதுவும் மிகக் குறைந்த செலவில்.

இந்த டோனரை பயன்படுத்தி வந்தால் உங்களுடைய முகம் கரும்புள்ளிகள் இல்லாமல் முகப்பரு இல்லாமல் மாசு மரு இல்லாமல் கிளியராக இருக்கும். உங்கள் அழகுக்கு இன்னும் கொஞ்சம் அழகு தரக்கூடிய எளிமையான அந்த டோனரை எப்படி தயார் செய்வது என்று தெரிந்து கொள்ள உங்களுக்கும் ஆர்வமாக இருந்தால், பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அழகான சருமத்தை பெற வீட்டில் இருந்தபடியே டோனர் தயார் செய்யும் முறை:
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து இரண்டு சொம்பு அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். தாராளமாகவே கொஞ்சம் நிறைய தண்ணீரை ஊற்றிக் கொள்ளலாம். தவறு கிடையாது. அதில் வேப்ப இலை – 2 கைப்பிடி, துளசி இலை – 2 கைப்பிடி, ரோஜா இதழ்கள் – 1 கைப்பிடி, இந்த பொருட்களையும் போட்டு நன்றாக கொதிக்க வையுங்கள்.

மூன்று இலைகளின் சாறும் அந்த தண்ணீரில் நன்றாக இறங்கட்டும். பிறகு இதோடு எலுமிச்சை பழச்சாறு – 1/2 ஸ்பூன், பாதாம் ஆயில் – 1 ஸ்பூன், ஊற்றி ஒரு கொதி வந்ததும், அடுப்பை அணைத்து விடுங்கள். இப்போது இதிலிருந்து ஒரு பெரிய டம்ளர் அளவு தண்ணீரை வடிகட்டி எடுத்து ஆற வைத்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி தனியாக வைத்துக் கொள்ளவும். இந்த ஸ்பிரேவை அப்படியே பிரிட்ஜில் வைத்தால் இரண்டு வாரம் வரை கெட்டுப் போகாது.

- Advertisement -

மீதம் கொஞ்சம் தண்ணீர் இருக்கும் அல்லவா அந்த தண்ணீர் கொதிக்க கொதிக்க இருக்கும்போதே, அதில்  முகத்தை 7 லிருந்து 10 நிமிடங்கள் ஆவி பிடிக்கலாம். இந்த தண்ணீரில் ஆவி பிடிக்கும் போது உங்களுடைய சருமத்தில் இருக்கக்கூடிய எல்லா வகையான பிரச்சனைகளும் படிப்படியாக குறையும்.

பிம்பிள்ஸ் வருவது, கரும்புள்ளிகள் வருவது, கருந்திட்டுகள் வருவது, கொப்பளங்கள் வருவது போன்ற பெரிய பெரிய சரும பிரச்சனைகளை கூட படிப்படியாக குறைக்கும் சக்தி இந்த தண்ணீருக்கு இருக்கிறது. (இப்படி வாரத்தில் ஒரு நாள் இந்த தண்ணீரில் ஆவி பிடிப்பது சருமத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது.)

- Advertisement -

ஆற வைத்து ஃப்ரிட்ஜில் ஸ்டொர் செய்து வைத்திருக்கும் அந்த டோனரை எப்படி பயன்படுத்துவது. அந்த டோனரை முகத்தில் லேசாக ஸ்ப்ரே செய்து கொண்டு, ஒரு காட்டன் பஞ்சை வைத்து லேசாக அப்படியே வட்ட வடிவில் மசாஜ் செய்து கொடுக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கேரளா பெண்களின் கூந்தல் ரகசியம்! கரு கரு என்று நீளமாக அவர்களின் முடி இருக்க காரணம் என்ன? இனி உங்கள் தலைமுடியை எலிவால் மாதிரி இருக்குன்னு யாருமே சொல்ல மாட்டாங்க!

பிறகு 15 நிமிடம் கழித்து வெறும் தண்ணீரில் முகத்தை கழுவிக் கொள்ளலாம். இந்த டோனரை நீங்கள் இரவு நேரத்திலும் பயன்படுத்தலாம். பகல் நேரத்திலும் பயன்படுத்தலாம். உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது முகத்தில் இந்த டோனரை தினமும் 1 முறை போடுங்கள். சரி செய்யவே முடியாத சரும பிரச்சனைகள் சரியாகி அழகான அழகு பெறலாம்.

- Advertisement -