பூக்காத செம்பருத்தி செடியில் கூட தாறுமாற பூ பூக்க நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் இந்த ஒரு பொருள் போதும். அப்புறம் பாருங்க நீங்களே பறிக்க முடியாம போதும் சொல்ற அளவுக்கு பூத்து தள்ளும்.

sembaruthi pal perungayam
- Advertisement -

பெரும்பாலும் பூ செடிகள் என்றால் மல்லி, ரோஜா, செம்பருத்தி இவைகள் தான் முதலிடத்தில் இருக்கும். இதிலும் கூட மற்ற செடிகள் இல்லை என்றாலும் நிச்சயமாக ஒரு செம்பருத்தி செடியாவது வைத்து வளர்ப்பார்கள். ஏனெனில் இதற்கு பராமரிப்பு அதிகம் கிடையாது செலவு செய்ய வேண்டியது இல்லை. அப்படி வரக்கூடிய இந்த செடியிலும் கூட சில சமயங்களில் மொட்டுக்கள் வைத்து பூப்பதற்கு முன்பாகவே உதிர்ந்து விடும். அது மட்டும் இன்றி சில செய்திகள் மரமாக வளர்ந்தாலும் கூட மொட்டுக்கள் வைத்து பூக்காமல் இருக்கும் இது போன்ற செடிகளுக்கு அருமையான இயற்கை உரக்கரைசலை எப்படி தயாரித்துக் கொடுப்பது என்பதை பற்றி தான் இந்த வீட்டுத் தோட்டம் குறித்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

பூக்காத செம்பருத்தி செடி பூக்க இயற்கை உரக்கரைசல் தயாரிக்கும் முறை
இந்த உரக்கரைசல் தயாரிப்பதற்கு நாம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பால் பெருங்காயத்தை வாங்கிக் கொள்ள வேண்டும். இது அங்கு வாங்கினால் சுத்தமானதாக கிடைக்கும். மற்ற கடைகளில் இதில் கலப்படம் கலந்திருக்க கூடிய வாய்ப்பு அதிகம்.

- Advertisement -

இந்த பால் பெருங்காயத்தில் 20 கிராம் எடுத்துக் அடுப்பில் கடாய் வைத்து லேசாக சூடாகும் வரை வறுத்து, அதன் பிறகு உரல் அல்லது அம்மியில் சேர்த்து பவுடராக்கிக் கொள்ளுங்கள். இதை வறுப்பதற்கு முன்பாக உடைத்தால் கொஞ்சம் கடினமாக இருக்கும். இதற்கு வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் பெருங்காயத்தை பயன்படுத்தக் கூடாது.

அடுத்ததாக ஐந்து லிட்டர் தண்ணீர் பிடிக்கும் அளவிற்கு மூடி போட்டு பிளாஸ்டிக் டப்பா ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் தண்ணீரை ஊற்றிய பிறகு நீங்கள் வறுத்து பொடி செய்த பால் பெருங்காயத்தூளை அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு கைப்பிடி சாம்பல் தூளையும் அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு சாம்பல் தூள் கிடைக்கவில்லை என்றால் காய்ந்த இலை தழைகள் போன்றவற்றை எரித்தாலும் இந்த சாம்பல் கிடைக்கும்.

- Advertisement -

இந்த இரண்டையும் தண்ணீரில் கலந்து ஒரு முறை குலுக்கி விட்டு அப்படியே வைத்து விடுங்கள். இரண்டு நாட்கள் வரை இது வெயிலின் நிழல் படும் இடத்தில் வைத்து காலை மாலை இரண்டு நேரமும் குலுக்கி மட்டும் வைத்து விடுங்கள். மூன்றாவது நாள் காலையில் இந்த தண்ணீரை வடிகட்டி ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி செடிகளின் காம்பு பகுதிகளில் தெளித்து விட்டு வேரிலும் கொஞ்சமாக ஊற்றி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: பைசா செலவில்லாத இந்த உரத்தை ரெடி பண்ணி வச்சிக்கிட்டீங்கன்னா போதும். உங்க வீட்ல இருக்க பூச்செடி காய்ச்செடி எல்லாம் கண்ணா பின்னான்னு தளதளன்னு வளர்ந்து நிக்கும்.

இதில் சாம்பலும் சேர்த்து இருப்பதால் அதிக அளவு பொட்டாசியம் சத்து கிடைக்கும். இதனால் பூக்கள் உதிராமல் பூக்கும். இந்த பால் பெருங்காயத்தை பொறுத்த வரையில் ஒரு பூச்சி விரட்டியாகவும், அதே நேரத்தில் பூக்கள் பெரிது பெரிதாக அதிகமாக பூக்கவும் உதவி செய்யும். வீட்டிலே தயாரிக்க கூடிய இந்த எளிமையான உரத்தை பயன்படுத்தி உங்கள் வீட்டில் உள்ள செம்பருத்தி செடிகளை நிறைய பூக்கள் வைத்து விடலாம்.

- Advertisement -