நவராத்திரி கொலுவில் எத்தனை படிகள் அமைக்க வேண்டும். பொம்மைகளை எவ்வாறு வரிசைப்படுத்த வேண்டும் என்று தெளிவாக தெரிந்து சரியாக செய்தால் மட்டுமே நவராத்திரியின் பலனை பெற முடியும்

kolu
- Advertisement -

அலைமகள், மலைமகள், கலைமகள், ஆகிய மூன்று அம்மையாரும் ஒன்றாக இணைந்து ஒரே சொரூபமாக உருவெடுத்து மக்களுக்கு துன்பத்தைக் கொடுத்து வந்த மகிஷாசுரனை அழித்தத தினமே நவராத்திரி தினமாக கொண்டாடப்படுகிறது. இவ்வாறு இந்த தினத்தில் அம்பிகையை வழிபட்டு அவரின் அருளைப் பெறுவதற்காக வீட்டில் கொலு வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இந்த நாளை சிறப்பிக்கும் வகையில் வீட்டில் கொலு வைப்பதற்கான முறையை பற்றியும், கொலு பொம்மைகளை எப்படி வரிசைப்படுத்த வேண்டும் என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்வோம். அதுமட்டுமல்லாமல் இவ்வாறு கொலு வைக்க முடியாதவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதனையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Kolu_dashavatar

நமக்குள் இருக்கும் நல்ல எண்ணங்கள், திறமைகள் ஆகியவற்றை ஒன்றுசேர்த்து நம்மிடம் இருக்கும் தீய எண்ணங்களை அழிப்பதுதான் நவராத்திரி தினத்தின் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. இந்த நவராத்திரி தினத்தில் வழிபாட்டிற்காக கொலு வைப்பதை அனைவரும் வழக்கமாக வைத்துள்ளனர்.

- Advertisement -

நமது முன்னோர்கள் பின்பற்றி வந்த அதே பழக்கத்தை தான் பரம்பரை பரம்பரையாக பலரும் பின்பற்றி வருகின்றோம். அவ்வாறு கொலு வைப்பதை முறையாக செய்ய வேண்டும். ஒரு சிலருக்கு எவ்வாறு கொலு அமைக்க வேண்டும், அதில் பொம்மைகளை எப்படி வரிசைப்படுத்த வேண்டும் என்ற சரியான முறை தெரிவதில்லை. அதிலும் தனது வீட்டில் புதியதாக கொலு வைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இதற்கான தெளிவு இருப்பதில்லை.

pooja-room

மூன்று படிகள், ஐந்து படிகள், ஏழு படிகள், ஒன்பது படிகள், 11 படிகள் என்று இவ்வாறு ஒற்றை வரிசையில் படிகளை அமைக்கலாம். மனிதனின் வாழ்க்கை எப்படி படிப்படியாக உயர்ந்தது என்றும், உலகில் உயிரினங்கள் எப்படி படிப்படியாக தோன்றியது என்றும், மற்றொரு விளக்கமாக மனிதன் தனது வாழ்வில் வரும் கஷ்டங்களை படிப்படியாக கடந்து வந்து முன்னேற வேண்டும் என்பதையும் உணர்த்தும் விதமாக தான் இந்த படிகள் அமைக்கப் படுகின்றன.

- Advertisement -

கொலு குறித்து தொல்காப்பியத்தில் மிகவும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. அவ்வாறு ஓரறிவு, ஈரறிவு, மூவறிவு உயிரினம் என்று ஒன்றன்பின் ஒன்றாக பொம்மைகளை அடுக்க வேண்டும். மரம், செடி, கொடி போன்றவை ஓரறிவு உடையவை. இவற்றை முதல் படியில் வைக்க வேண்டும். நத்தை சங்கு போன்ற ஈரறிவு உள்ள உயிரினங்களை இரண்டாம் படியில் வைக்க வேண்டும்.

ant1

கரையான், எறும்பு போன்ற மூன்றறிவு உயிரினங்களை மூன்றாம் படியில் வைக்க வேண்டும். நண்டு, வண்டு போன்றவைகளுக்கு நான்கறிவு உள்ளது. இவற்றை நான்காம் படியில் வைக்க வேண்டும். ஐந்தறிவு உள்ள பறவைகள், விலங்குகள் இவற்றை ஐந்தாம் படியில் வைக்க வேண்டும்.

- Advertisement -

ஆறறிவுள்ள மனிதன், மனிதன் பின்பற்றும் பழக்க வழக்கங்கள், திருமணம், நிகழ்ச்சி, நடனமாடுதல், தொழில் செய்தல் இவை போன்ற பொம்மைகளை ஆறாம் படியில் வைக்க வேண்டும். மனிதர்களில் இருந்து உயர்ந்த மகான்களின் பொம்மைகளை ஏழாம் படியில் வைக்கலாம். அதாவது விவேகானந்தர், வள்ளலார், மகா காஞ்சிப்பெரியவர் போன்றவர்களின் பொம்மைகளை வைக்கலாம்.

Hindu Marriage

பகவானின் அவதாரங்களான தசாவதாரம், அஷ்டலட்சுமிகளின் பொம்மைகளை எட்டாம் படியில் வைக்கலாம். சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை போன்ற மூன்று தேவிகளின் பொம்மைகளையும் ,கலச கும்பத்தையும், பிள்ளையாரையும் ஒன்பதாம் படியில் வைக்க வேண்டும்.

navarathiri-golu

இவ்வாறு கொலு வைக்க முடியாதவர்கள் தங்கள் வீட்டில் உள்ள சுவாமி படங்களுக்கு மலர்கள் சூடி அலங்காரம் செய்து, ஒன்பது நாட்களும் தினம் ஒரு தானியத்தில் நெய்வேத்தியம் செய்து படைத்து வீட்டிற்கு வரும் நண்பர்கள், உறவினர்களுக்கு கொடுக்க வேண்டும். அதோடு நவராத்திரி தினத்தின் இறுதி நாளில் வீட்டிற்கு வருபவர்களுக்கு தாம்பூலம் வைத்து கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நவராத்திரி பூஜையின் பலன்கள் அனைத்தையும் நாம் பெற முடியும்.

- Advertisement -