நீ இல்லா தனிமை – காதல் கவிதை

Love kavithai

நீ இன்றி என்னை கொள்ளாமல்
கொள்கிறது தனிமை..
என் இதயத்தை இரண்டு
துண்டாக்கி புதைக்கிறது உன் நினைவு..
என் கனவை களவாடி
அதில் சோகத்தீயை மூட்டுகிறது
உன் பிரிவு..

Kadhal kavithai Image
Kadhal kavithai

இதையும் படிக்கலாமே
உனது நினைவு சின்னங்கள் – காதல் கவிதை

காதலை தன் உயிராக நினைத்த ஒருவருக்கு காதலின் தோல்வியை ஒரு கணம் கூட தாங்க முடியாது. அந்த அளவிற்கு கொடிய அரக்கனாக மாறும் குணம் காதல் தோல்விக்கு உண்டு. காதல் தோல்வியில் இருக்கும் ஒருவருக்கு தனிமை என்பது மயானம் போல இருக்கும். ஆனாலும் அவர்களின் மனம் அதை தான் தேடும்.

இன்பம் மட்டுமே நிறைந்திருந்த இதயத்தில் சிறு துளி கூட இன்பம் இல்லாத நிலை உருவாக, இதயமே துண்டாவது போன்ற ஒரு உணர்வு ஏற்படும். கனவில் கட்டிய காதல் கோட்டை அனைத்தும் இடிந்து விழுந்த மறுகணமே காதலும் இருக்காது, கனவும் இருக்காது, அந்த கனவை வர செய்யும் தூக்கமும் இருக்காது. அனைத்தும் தொலைந்துபோய் வெறுமையே மிஞ்சும்.

Love Kavithai Image
Love Kavithai

காதலில் தனிமை என்பது மிகவும் கொடுமையான ஒரு விடயம் அதை கடக்க நினைத்தாலும் விடாது, மறக்க நினைத்தாலும் விடாது. தனிமையில் இனிமை காண செய்வதும் காதல் தான், அதே தனிமையில் அழுகையின் உச்சத்திற்கு கொண்டு செல்வதும் காதல் தான். தனிமை கவிதைகள் பல எழுதி அந்த கவிதைகளும் இன்று தனிமையாகவே ஏராளமாய் பலரது வீட்டில் குவிந்து கிடக்கின்றன என்பதே நிதர்சனமான உண்மை.

மேலும் பல காதல் கவிதைகள், காதல் மெசேஜ் மற்றும் காதல் தோல்வி கவிதைகள் பல படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Thanimai kavithaigal in Tamil. It is also called as Thanimai kavithai or lonely poem.