9 நாட்கள் தொடர்ந்து மார்பளவு தண்ணீரில் தவம் இருந்த மனிதர் – வீடியோ

Jala thavam

பண்டையக் காலம் தொட்டு இக்காலம் வரை “கடவுளைக் காண முடியுமா”? என்ற கேள்வி உலகெங்கிலும் வாழும் மனிதர்களிடம் இருந்து வருகிறது. ஒரு சிலர் கடவுளைக் காண முடியும் என்றும், வேறு சிலர் கடவுளைக் காணமுடியாது அவரை உணரத்தான் முடியும் என்றும் கூறுகின்றனர். ஆனால் கடவுளைக் காணவும் உணரவும் முடியும் என்று உறுதியாக கூறிய நம் நாட்டு ரிஷிகள் அதற்கான சில யோக, தாந்திரிக முறைகளையும் கண்டுபிடித்தனர். இத்தகைய யோக, தாந்திரிக பயிற்சிகளை பயன்படுத்தி தீவிரமான தவமியற்றும் போது சில சமயம் ஒருவரின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். அப்படி கடும் தவமியற்றி இறைவன் மற்றும் சித்தர்களின் காட்சி பெற முயற்சிக்கும் ஒரு நபரைப் பற்றிய இக்காணொளியைப் பாருங்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிரப்பாக்கம் அருகே வசிக்கும் இந்த ஆன்மிகச் சாதகர் இறைவன் மற்றும் சித்தர்களின் தரிசனம் கிடைக்க ஏற்கனவே பல கடினமான பல ஆபத்தான யோக முறைகளில் தவம் புரிந்திருக்கிறார் இப்போது சித்தர்களின் காட்சியைப் பெற 18 யாக குண்டங்களில் தீ வளர்த்து அதில் 16 கிலோ மிளகாய்களை போட்டு மிளகாய் யாகத்தை செய்யப்போவதாக கூறி அதன்படியே செய்தார் அந்த யாகத்தின் போது சிவ பெருமான் தனக்கு ஜோதி வடிவில் காட்சி தந்ததாக கூறுகிறார் இவர்

இதற்கெல்லாம் உச்சகட்டமாக இறைவன் மற்றும் சித்தர்களின் தரிசனம் பெற “9 நாட்கள் கழுத்தளவு தண்ணீருக்குள் அமர்ந்து “ஜல சமாதி தியானத்தில்” ஈடுபடப்போவதாக கூறி அதற்கான ஏற்பாடுகளைப் பற்றி விளக்குகிறார். கூறியப்படி 9 நாட்கள் தண்ணீருக்குள் ஜல சமாதி இருந்த பின், அத்தவத்திலிருந்து வெளிவந்ததும் உடனேயே மீண்டும் “மிளகாய் யாகத்தை” இவர் செய்ததால் இவரின் உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டு, தற்போது நலம் பெற்று வருவதாக இவரது நெருங்கிய உறவினர்கள் கறுகிறார்கள்.

இத்தகைய ஆபத்தான செயல்களால் இவரது உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என தாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளதாக இவரின் குடும்பத்தினர் கூறுகிறார்கள். இத்தகைய ஆபத்தான தவ முறைகளை இனி செய்யப் போவதில்லை என்று இவரும் உறுதியளித்துள்ளார். இதைக் காணும் ஆன்மிகச் சாதகர்களும் தகுந்த குருவின் துணையின்றி இத்தகைய செயல்களில் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.