நீயும் உணர்வாய் ஒரு நாள் – காதல் கவிதை

Love kavithai

தர்காலிகமாக என்னை காதலித்து
நிரந்தர வலியை தந்தவளே..
காதலின் காயம் என்னை மட்டும் அல்ல
உன்னையும் ஒரு நாள் தாக்கும்..
அப்போது உணர்வாய் நீ
உண்மை காதலின் வலியை..

Kadhal kavithai Image
Kadhal kavithai

இதையும் படிக்கலாமே
நீ செய்யும் மாயம் – காதல் கவிதை

காதல் நிரந்தரம் என்று நினைக்கும் பலருக்கு, அந்த நிரந்தர காயமாக மாறி மனதினுள் பல மாறுதல்களை தருகிறது. அது போன்ற சமயங்களில் நாம் உயிருக்கு உயிராய் நேசித்தவரையே மனதிற்குள் திட்டவும் செய்வோம். அந்த அளவிற்கு காதல் தரும் வலியின் வேதனை இருக்கும். அப்படி பட்ட சமயங்களில் நாம் வேறு எதையாவது பற்றி யோசித்து நம்மை நாமே திசை திருப்பிக்கொள்வதே நமக்கு சிறந்தது.

காதல் மாற்றத்தையும் தரும், ஏமாற்றத்தையும் தரும். மாற்றம் ஏமாற்றம் என இரு அனுபவங்களையும் பெற்றவர்களுக்கு தான் அதன் உண்மையான நிலை புரியும். பல அடிகளை பட்டாலும் அவர்களது மனதில் இன்னும் காதல் ஏதோ ஒரு மூலையில் ஒளிந்து கொண்டு தான் இருக்கும். அது தான் காதுக்குள் இருக்கும் ஈரம்.

Love Kavithai Image
Love Kavithai

காதல் கவிதைகள், காதல் பிரிவு கவிதைகள், மனதை உருக்கும் அன்பு கவிதைகள் என கவிதை தொகுப்பு பல இங்கு உள்ளது.