இந்த 5 தவறை உங்கள் வீட்டில் செய்தால் செல்வம் சேரவே சேராது.

selvam

நம் வீட்டில் செல்வத்தை சேர்த்துக் கொள்வதற்கு நாம் எவ்வளவோ முயற்ச்சி மேற்கொள்கிறோம். செல்வத்தை சேர்ப்பதற்காக எல்லா இறை வழிபாட்டையும் செய்கின்றோம். இருந்தும் சிலரது வீட்டில் அந்த மகாலட்சுமி தங்காமல் இருப்பாள். என்ன காரணம் என்று புரியாமல் பல பரிகாரங்களை செய்து வீண் விரயத்தை தான் ஏற்படுத்திக் கொள்வோம். நாம் எதையெல்லாம் செய்தால் மகாலட்சுமி தங்குவாள் என்று யோசிப்பதைவிட, எதையெல்லாம் நம் வீட்டில் செய்யக்கூடாது என்று முதலில் தெரிந்து கொள்வோம். நம் வீட்டில் செய்யக்கூடாத தவறுகளை, செய்யாமல் இருந்தாலே போதும். அந்த மகாலட்சுமி நமது வீட்டில் நிரந்தரமாக தங்கிவிடுவாள். நம்மை அறியாமலேயே நம் வீட்டில் செய்யும் அந்த தவறுகள் என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

mahalakshmi

மகாலட்சுமி வீட்டில் நிரந்தரமாக தங்குவதற்க்கு வீட்டினை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள். நாமும் தினமும் வீட்டை கூட்டி சுத்தமாகத்தான் வைத்துக் கொள்வோம். ஆனால் வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை நம் வீட்டில் இருந்து அகற்றுகின்றோமா? என்று கேட்டால், இல்லை என்றுதான் நம்மில் பலர் கூறுவோம். உடைந்த பொருட்கள், கிழிந்த துணி,  தேவைப்படாத உபகரணங்கள் இவற்றை முதலில் நம் வீட்டில் இருந்து அகற்ற வேண்டும். இவையெல்லாம் நம் வீட்டிலுள்ள நேர்மறை ஆற்றலை அழிக்கும் சக்தி கொண்டவை.

அடுத்ததாக நம் வீட்டை கூட்டி சுத்தப்படுத்த நாம் உபயோகப்படுத்தும் ஒரு பொருள் விளக்குமாறு. துடைப்பம் என்றும் சிலர் கூறுவார்கள். இந்த விளக்குமாறானது மகாலட்சுமியின் அம்சமாக கூறப்படுகிறது. நம் வீட்டில் உள்ள குப்பைகளை எல்லாம் அகற்றி அந்த மகாலட்சுமி நம் வீட்டிற்குள் அழைப்பதற்கு இந்த விளக்குமாறை நாம் ஒரு உபகரணமாக பயன்படுத்துகிறோம் அல்லவா அதனால் தான். இதனால் இந்த விளக்குமாறு பூமியில் படுமாறு செங்குத்தாக நம் வீட்டில் நிற்க வைக்க கூடாது. அப்படி செய்தால் நம் வீட்டின் லட்சுமி கடாட்சத்தை பூமி ஈர்த்துக்கொள்ளும்.

broom

பொதுவாக நாம் எந்த பூஜையை செய்தாலும் தரையில் அமர்ந்து செய்யக்கூடாது. பலகையின் மீது தான் அமர்ந்து செய்யவேண்டும் என்பது நம் சாஸ்திரம். ஏனென்றால் இறைவன் நமக்குத் தரும் நல்ல ஆற்றலை நம்மிடமிருந்து இந்த பூமியானது ஈர்த்து விடும். இதனால் பூமிக்கும் நமக்கும் இடையே ஏதாவது ஒரு பொருள் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பாயிலோ அல்லது மரப் பலகையின் மீதோ அமர்ந்து பூஜை செய்ய வேண்டும் என்று கூறுவார்கள்.

- Advertisement -

நம் வீட்டில் உபயோகப்படுத்தும் துடைப்பத்தை இனிமேல் செங்குத்தாக தரையில் வைக்காமல், ஏதாவது ஒரு பலகையின் மீதோ, மேஜையின் மீதோ படுக்க வைத்தது போல் வைக்க வேண்டும். அல்லது இப்போது வரும் துடைப்பதற்கு எல்லாம் ஆணியில் மாட்டும் வசதி உள்ளது. அப்படி இருந்தால் ஒரு ஆணியில் மாட்டி விடலாம். அதேபோல் அதிகமாக தேய்ந்த துடைப்பமும் பயன்படுத்தக்கூடாது. அதிலிருந்து வெளிப்படும் எதிர்மறை ஆற்றல் அதிகம். பழையதாகிவிட்டால் அதை வீட்டிலேயும் வைத்துக்கொள்ள வேண்டாம். வீட்டில் இருந்து அப்புறப்படுத்தி விடுங்கள்.

broom stand

வீட்டை 6 மணிக்கு மேல் கூட்டக் கூடாது. இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். வீட்டை கூட்டும்போது ஒதுக்கப்படும் குப்பைகள் மற்றவரின் மீது படக்கூடாது. உங்கள் வீட்டில் உள்ளவர்கள் யாரேனும் தரையில் படுத்து இருந்தால் அந்த சமயத்தில் வீட்டினை கூட்டாதீர்கள்.

நீங்கள் கூட்டும் குப்பைகளை வீட்டு வாசலை நோக்கி கொட்டக்கூடாது. உங்கள் வீட்டில் ஏதாவது ஒரு மூலையை நோக்கி கூட்டி அந்த குப்பையை உடனடியாக வாரி விடுவது நல்லது. வாரிய குப்பையை முறத்திலும் வைக்கக்கூடாது. குப்பை டப்பாவில் போட்டு வீட்டின் வெளிப்புறத்தில் வைத்து விடுங்கள்.

broom

வீட்டை கூட்டி சுத்தம் செய்த பின்பு தண்ணீரில் கல் உப்பு, மஞ்சள் தூள், பச்சைகற்பூரம் இவைகளை கலந்து வீட்டின் மூலை பகுதிகளில் தெளித்து விட வேண்டும்.

உடைந்த தேவையற்ற பொருட்களை வீட்டில் வைக்காதீர்கள். துடைப்பத்தை செங்குத்தாக நிற்க வைக்காதீர்கள். தேய்ந்த துடைப்பத்தில் வீட்டை கூட்டாதீர்கள். கூட்டிய குப்பைகளை வீட்டிற்குள் ஒதுக்காதீர்கள். வாரிய குப்பையை முறத்தில் வீட்டிற்குள் வைக்காதீர்கள். இந்த ஐந்து தவறினை செய்யாமல் இருந்தாலே நம் வீட்டில் மங்களகரம் நிறைந்திருக்கும்.

இதையும் படிக்கலாமே
பதிமூன்று வகையான சாபங்கள்

English Overview:
Here we have Vettil seiyya kodathavai. Vettil seiyya kodatha thavarugal. Vettil thavirkka vendiyavai. Vettil seiyya kodatha mistakes.