சமையலில் இதுவரை நீங்கள் கேள்வி கூட படாத சுலபமான எளிய குறிப்புகள் 10.

dosai1
- Advertisement -

சமையல் செய்வதில் பெண்கள் எவ்வளவு தான் திறமைசாலியாக இருந்தாலும், சின்ன சின்ன விஷயங்களில் தவறு செய்யும் போது அதை அவர்களால் திருத்திக் கொள்ள முடியாது. சமையலறையில் நாம் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய சின்ன சின்ன பயனுள்ள குறிப்புகளைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குறிப்புகளை படியுங்கள். உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அந்த குறிப்புகளை பின்பற்றி பலன் பெறலாம்.

குறிப்பு 1:
பால் காய வைக்க அடுப்பில் வைத்து மறந்து விட்டீர்களா. அடிபிடித்து லேசாக தீய்ந்த வாடை அடிக்கிறதா. அதில் ஒரு வெற்றிலையை போட்டால், கருகிய வாடை காணாமல் போகும்.

- Advertisement -

குறிப்பு 2:
உளுந்த வடை செய்யப் போறீங்களா. 1 கிலோ உளுந்து ஊறவைக்கும் போது, கூடவே 100 கிராம் பச்சரிசியும் அந்த உளுந்தோட சேர்த்து ஊற வைத்து மாவு அரைத்தால் உளுந்த வடை மொறுமொறுப்பாகவும் வரும். அதே சமயம் எண்ணெய் குடிக்காமலும் இருக்கும்.

குறிப்பு 3:
வாழை இலையின் பின்பக்கத்தை லேசாக நெருப்பின் அனலில் காட்டிவிட்டு, அதன் பின்பு அதில் பொட்டலம் மடித்தால், வாழை இலையை எவ்வளவு சுருட்டி மடித்தாலும் அது கிழியாது.

- Advertisement -

குறிப்பு 4:
காலிஃப்ளவரை சமைக்கும் போது அதில் சிறிதளவு பால் சேர்த்துக் கொள்ளுங்கள். சமைத்து முடித்த பிறகு அதிலிருந்து பச்சை வாடை வீசாது. அதே சமயம் அதனுடைய நிறம் மாறாமல் இருக்கும்.

குறிப்பு 5:
உளுந்தம் பருப்பை ஊறவைத்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இதோடு கோதுமை மாவை போட்டு நன்றாக கரைத்து முதல் நாள் இரவே வைத்து விடுங்கள். மறுநாள் காலை இந்த மாவில் தேவையான அளவு உப்பு போட்டு கலந்து தோசை வார்த்தால் சூப்பராக வரும். இரண்டு கப் அளவு கோதுமை மாவிற்கு, 1 கைப்பிடி அளவு உளுந்தம் பருப்பு சரியான அளவாக இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 6:
பிரியாணி இலையை நெருப்பில் போட்டு பொசுக்கும் போது ஒரு புகை வரும். அந்த புகையை அப்படியே பல்லி வரும் இடத்தில் வைத்து விடுங்கள். இந்த புகைக்கு இருக்கும் பல்லி ஓடிவிடும். இந்த வாசத்திற்கு பல்லிகள் வீட்டிற்குள் வராது.

குறிப்பு 7:
வாய்ப்புண் அதிகமாக இருக்கிறதா. சமையலறையில் இருக்கும் வெறும் தக்காளியை வெட்டி கொஞ்சம் வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிடுங்கள், அதாவது அந்தப் புண்ணின் மேல் தக்காளி பழத்தின் சாறு படும்படி மென்று சாப்பிட்டால் வாய்ப்புண் உடனடியாக குணமாகும். தக்காளி சாறு எடுத்து வாய்க்குள் ஊற்றி நன்றாக கொப்பளித்துக் குடித்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

குறிப்பு 8:
ஆப்பம் சுடும் போது, சாஃப்டாக வரவில்லையா. ரொம்பவும் முறப்பாக இருக்கிறதா. அதில் தேவைக்கு ஏற்ப கொஞ்சம் வெதுவெதுப்பான பாலை ஊற்றி கலந்து ஆப்பம் வார்த்தால் ஆப்பம் உடனடியாக சாப்டாக வரும்.

குறிப்பு 9:
குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்லும் போது வாட்டர் கேனில் தண்ணீர் ஊற்றி கொடுப்பீர்கள் அல்லவா. அதில் பெரிய நெல்லிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டி போட்டு கொடுங்கள். நெல்லிக்காய் அந்த தண்ணீரில் ஊறும் போது அதில் இருக்கும் வைட்டமின் சி சத்து குழந்தைகள் உடலை போய் சேரும்.

இதையும் படிக்கலாமே: ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் ஒரு சூப்பரான சோயா சங்க்ஸ் கிரேவியை வீட்டிலே எப்படி சுலமபாக செய்வது என்று பார்க்கலாம்.

குறிப்பு 10:
பட்டை லவங்கம் கிராம்பு ஏலக்காய் இவைகளை ஒரு நெட் துணியில் கட்டி விடுங்கள். இதை அப்படியே டீ தூள் இருக்கும் டப்பாவில் போட்டு வையுங்கள். உங்கள் டீத்தூள், மசாலா டீ தூள் போல சூப்பரா வாசம் நிறைந்து இருக்கும்.

- Advertisement -