புதினா சட்னியை ஒருமுறை இப்படி அரைத்துப் பாருங்கள். புதினாவே பிடிக்காது என்பவர்கள் கூட இந்த சட்னியை விரும்பி சாப்பிடுவார்கள்.

chilli-chutney
- Advertisement -

புதினா சட்னியை ஒவ்வொருவர் வீட்டிலும் ஒவ்வொரு விதமாக அரைக்கும் வழக்கம் இருக்கும். எல்லா சட்னியிலும் கண்டிப்பாக புதினா தழைகள் இருக்கும். ஆனால் எல்லா சட்னிக்கும் சுவையில் வித்தியாசம் இருக்கும். சுலபமான முறையில் வித்தியாசமான புதினா சட்னி ரெசிபியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்க வீட்ல புதினா சட்னியை இப்படி அரைத்தால் வீட்டில் இருப்பவர்கள் இரண்டு இட்லி சேர்த்து சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு சுவையான சட்னி ரெசிபி உங்களுக்காக.

murungai-keerai-chutney

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன், போட்டு இந்த இரண்டு பருப்புகளும் பொன்னிறமாக வறுபட வேண்டும். அடுத்தபடியாக சிறிய அளவில் இருக்கும் பெரிய வெங்காயம் – 1 நறுக்கி கடாயில் போட்டு 2 நிமிடம் வதக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக தோல் உரித்த பூண்டு பல் – 5, சிறிய துண்டு இஞ்சி, பச்சை மிளகாய் – 5 இந்த பொருட்களை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி அடுத்தபடியாக இரண்டு கைப்பிடி அளவு புதினா தழைகளை போட்டு ஒரு நிமிடம் மட்டும் வதக்க வேண்டும். புதினா தழைகளை தண்ணீரில் கழுவி தண்ணீரை சுத்தமாக வடிகட்டி அதன் பின்பு கடாயில் சேர்த்து வதக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Pudhina thokku

அடுப்பை அணைத்த உடன் இரண்டு கைப்பிடி அளவு தேங்காய் துருவலை கடாயில் சேர்த்து கலந்து விட்டு விடவேண்டும். இறுதியாக சட்னிக்கு தேவையான உப்பையும் கடாயில் போட்டு விடுங்கள். இந்த கலவை நன்றாக ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு விழுது போல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் நிறைய ஊற்றி விட வேண்டாம். இந்த சட்னி கொஞ்சம் கெட்டிப் பதத்தில் தளதளவென இருந்தால்தான் சுவையாக இருக்கும்.

மிக்ஸி ஜாரில் அரைத்த இந்த சட்னியை தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றி சிறிய தாளிப்பு கொடுக்க வேண்டும். எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை பெருங்காயம் சேர்த்து தலைப்பை மணக்க மணக்க இதில் கொட்டி கலந்து பரிமாறுங்கள். நிச்சயமாக வீட்டில் இருப்பவர்கள் இந்த சட்னியை விரும்பி சாப்பிடுவார்கள். சில பேர் புதினா சட்னியில் புளி சேர்க்கும் வழக்கம் இருக்கும்‌. உங்களுக்கு தேவைப்பட்டால் இந்த சட்னியில் கொஞ்சமாக புளி சேர்த்துக் கொள்ளலாம். அது அவரவர் விருப்பம் உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருக்கா உங்க வீட்டுல மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -