2021 நாளை ஆங்கில புத்தாண்டு அன்று எதை செய்தால் அதிர்ஷ்டம்? எதை செய்தால் துரதிருஷ்டம் ஏற்படும்? நீங்களும் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

perumal-vilakku

புத்தாண்டன்று ஒவ்வொருவரும் புதிதாக சில விஷயங்களை கடைப்பிடிப்பதும், சில விஷயங்களை இனி செய்யக்கூடாது என்று தவிர்ப்பதும் காலம் காலமாக செய்து வரும் ஒரு வழக்கமாகும். ஒவ்வொரு புதிய ஆண்டும் பல முடிவுகளும், சில தொடக்கங்களும், மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் அதிர்ஷ்ட வரமாகும். அதை எப்படி சரியாக பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே அந்த வருடத்திய மகிழ்ச்சியான தருணங்கள் அமைந்திருக்கும். அந்த வகையில் நாளை வரவிருக்கும் 2021-ஆம் ஆங்கில புத்தாண்டு அன்று வீட்டில் எந்த விஷயங்களை எல்லாம் செய்யலாம்? எந்த விஷயங்களை கட்டாயம் செய்யக்கூடாது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

praying-god

ஒரு வருடம் முடிந்து இன்னொரு வருடம் பிறக்கும் பொழுது, அதுவும் ஒரு புதிய ஜனனம் போல உலக மக்கள் அனைவரும் கொண்டாடுகிறார்கள். இதுவரை மனதில் இருந்த அழுக்குகளை எல்லாம் நீக்கிவிட்டு, புதிதாக வாழ வேண்டும் என்கிற ஆசையோடு தான் நாளை விடியல் ஒவ்வொருவருக்கும் அமைய இருக்கிறது. உங்கள் ஆசை நிறைவேறுவதற்கு கடவுளுடைய அனுகிரகம் வேண்டும். எந்த மதத்தினராக இருந்தாலும் ஆங்கில புத்தாண்டு அன்று தங்களுடைய இறைவனை வேண்டிக் கொள்ளாதவர்கள் யாருமே இருக்க முடியாது.

நம் நல்வாழ்வுக்கு அருள்புரியும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் பொழுது, புதிதாக அன்றைய நாளில் பூஜை அறைக்கு விளக்கு ஒன்றை வாங்கி வையுங்கள். புதிதாக விளக்கை மாற்ற நினைப்பவர்கள் புத்தாண்டு அன்று புதிய விளக்கை வாங்கலாம். இந்த நாளில் வெள்ளி விளக்கு, குபேர விளக்கு போன்ற விளக்குகளை வாங்குவது இன்னும் அதிர்ஷ்டத்தை சேர்க்கும். பொங்கலுக்கு புதுப்பானை வாங்குவது போல், புத்தாண்டிற்கு புது விளக்கை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தும்.

ainthu-muga-vilakku

ஒரு வீட்டில் புதிதாக ஒரு பொருள் வரும் பொழுது, அதனுடன் அதிர்ஷ்டமும் சேர்ந்து வரும் என்பது நம்பிக்கை. அதற்காகவே நிறைய பேர் புத்தாண்டு அன்று வீட்டுக்கு தேவையான புதிய பொருட்களை தங்கள் தேவைக்கு ஏற்ப வாங்கி மகிழ்வது உண்டு. இதற்காகவே பல நிறுவனங்கள் அதிரடி ஆஃபர்களையும் அறிவிப்பார்கள். டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஸ்டவ் என்று வீட்டு உபயோகப் பொருட்களில் தேவைப்படுபவர்கள் ஏதாவது ஒன்றை வாங்கலாம்.

- Advertisement -

நாளை புத்தாண்டு அன்று கண்டிப்பாக தலைக்கு குளிக்க வேண்டும். புத்தாடை உடுத்த வேண்டும். நீங்கள் இதுவரை போடாமல் வைத்து இருக்கும் ஏதாவது ஒரு ஆடையையாவது அன்றைய நாளில் உடுத்திக் கொள்ளுங்கள். அது போல் உங்களால் முடிந்தால் ஏழை எளியவர்களுக்கு வஸ்திர தானம் செய்யுங்கள். இந்த நாளில் அதிகாலையில் எழ பழகிக் கொள்ளுங்கள். நம்மால் பிரம்மமுகூர்த்தத்தில் எழ முடியாவிட்டாலும், மூதேவி வரும் நேரத்திற்குள் எழுந்து விடுவது நல்லது. அதாவது காலையில் 8 மணிக்கு முன்னரே எழுந்து விடுங்கள். எட்டு மணிக்கு மேல் தூங்கும் ஒரு நபரால் வாழ்க்கையில் எதையுமே சாதிக்க முடியாது என்று சான்றோர்கள் கூறியுள்ளனர்.

vasthira-dhanam

இந்த நாளில் செய்யவே கூடாத ஒரு விஷயம் என்ன தெரியுமா? நல்ல நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் பொதுவாகவே வெளி நபர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். கடன் அன்பை முறிக்குமோ! இல்லையோ! அதிர்ஷ்டத்தை கெடுக்கும் என்பது மட்டும் நிச்சயம். நாளை ஒரு நாள் மட்டும் யாருக்கும் கடனை கொடுக்காதீர்கள். பொருளாக கேட்டாலும் வீட்டில் இருக்கும் பொருளை எடுத்துக் கொடுத்து விடாதீர்கள். தானம் கொடுப்பது வேறு, கடன் கொடுப்பது வேறு. புத்தாண்டு அன்று கடன் கொடுக்கக் கூடாது தானே தவிர, எல்லாருக்கும் தானத்தை தாராளமாக செய்யலாம் புண்ணியத்தை சேர்க்கும்.

kadan

காலையில் கோவிலுக்கு சென்று குடும்பத்தில் இருக்கும் அத்தனை நபர்கள் பெயரில் ஒரு அர்ச்சனையை போட்டுவிட்டு, பசுக்களுக்கு அகத்திக்கீரை தானம் செய்யுங்கள். இதனால் முன்னோர்களின் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கப்பெறும். முடிந்தால் குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். வீடு முழுவதும் சாம்பிராணியுடன், வெண்கடுகு சேர்த்து தூபம் போடுங்கள். வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் அனைத்தும் ஒழியட்டும். புரிய தீர்மானங்களில் ஒன்றாக நாளைய தீர்மானத்தில் யாரையும் மனம் புண்படும் படியாக பேசி விடக்கூடாது என்பதையும் சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள் நல்லதே நடக்கும்.

sambrani

வீட்டில் செல்வ வளம் பெருக நாட்டு மருந்து கடையில் பச்சை கற்பூரம் வாங்கி பூஜை அறையில் மற்றும் பணப்பெட்டியில் வையுங்கள். வீட்டில் இருக்கும் மகாலட்சுமி நிரந்தரமாக தங்க, வீட்டில் இருக்கும் இந்த சில முக்கியமான உணவு பொருட்கள் குறையவே கூடாது என்கிற ஐதீகம் உள்ளது. அதாவது அரிசி, பாசிப்பருப்பு, துவரம் பருப்பு, கல் உப்பு, ஊறுகாய், நாட்டு சர்க்கரை இவை எல்லாம் குறையாமல் அந்தந்த பெட்டிகளில் முழுதாக நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். இப்படி செய்வதால் மகாலட்சுமி நிரந்தரமாக தங்குவாள் என்பது நம்பிக்கை.

mangalyam1

நாளை புத்தாண்டு அன்று இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் மாங்கல்ய கயிறு மாற்ற நினைக்கும் திருமணமான பெண்கள் மாற்றிக் கொள்ளலாம். மங்கல திருமாங்கல்யம் அன்றைய தினத்தில் புதிதாக கணவன் கையால் போட்டுக் கொள்வது தம்பதியருக்குள் அன்னோன்யம் அதிகரிக்கச் செய்யும். சதா சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்கள் கூட, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள்.

இதையும் படிக்கலாமே
கணவனின் அன்பை பெற இப்படியும் ஒரு வழி இருக்கிறதா? இவ்வளவு நாள் இதை தெரிந்து கொள்ளாமல் இருந்து விட்டோமே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.