கணவனின் அன்பை பெற இப்படியும் ஒரு வழி இருக்கிறதா? இவ்வளவு நாள் இதை தெரிந்து கொள்ளாமல் இருந்து விட்டோமே!

munivar-marraige
- Advertisement -

கணவனின் அன்பை பெற ஒவ்வொரு மனைவியும் விரும்புகிறாள். இந்த உலகத்தில் எல்லா ஜீவராசிகளிடமும் அன்பு நிறைந்து இருக்கிறது. அதை அவர்களிடமிருந்து எப்படி பெறுகிறோம்? என்பதில் தான் சூட்சமம் இருக்கிறது. நெருங்க கூட முடியாத காட்டில் வாழும் புலிகளுக்கு கூட அன்பு இருக்கிறது. புலியிடம் விளையாடிக் கொண்டிருக்கும் எவ்வளவோ மனிதர்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் நம்மால் அந்த புலியிடம் செல்ல முடியுமா? அது போல் தான் மனிதர்களும்.

ego-couple

எப்பேர்பட்ட கோபக்காரர்கள் கூட சிறு அன்புக்கு அடிமையாகிவிடுவார்கள். அப்படி இருக்க வாழ்க்கை முழுவதும் உங்களுடன் பயணிக்க இருக்கும் கணவன் அல்லது மனைவியின் அன்பை பெறுவது அவ்வளவு கஷ்டமா என்ன? அதற்கு என்ன செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்வதற்கு தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

- Advertisement -

இந்த கதை இரண்டு பாலருக்கும் பொருந்தும். கணவனிடம் இருந்து அன்பை பெற விரும்பும் மனைவியும், மனைவியிடமிருந்து அன்பை பெற விரும்பும் கணவனும் இப்படி நடந்து கொண்டால் நீங்கள் நினைத்தது நடக்கும். இதனால் வாழ்க்கை முழுவதும் அவர்களுடன் இன்பமாக பயணிக்க முடியும். இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தாலும், அதை நடைமுறைப்படுத்துவதில் பலருக்கும் சிக்கல் இருக்கிறது. இதனை புரிந்து கொள்ள ஒரு சிறுகதை மூலம் நாம் இப்பொழுது பார்க்க இருக்கிறோம்.

fight4

ஒரு வீட்டில் சதா வீட்டிற்கு வந்த உடனேயே சண்டையை ஆரம்பிக்கும் கணவன்-மனைவி. சிறு சிறு விஷயத்திற்கு கூட ஆவேசப்பட்டு பேசிக் கொண்டிருப்பார்கள். இவர்களுக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தது. வாழ்க்கை என்பது வேறு, கருத்துக்கள் என்பதும் வேறு. இதனை முதலில் நீங்கள் உணர வேண்டும். கருத்துக்களில் வேறுபாடுகள் இருந்தாலும், கணவன்-மனைவிக்குள் வேறுபாடுகள் ஒருபோதும் இருந்துவிடக்கூடாது.

- Advertisement -

அப்படியிருந்தால் வாழ்க்கை முழுவதும் பிடிக்காமல் தான் வாழ வேண்டும். இவர்களும் அப்படி தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் ஒருவரை ஒருவர் உள்ளுக்குள் நிறையவே காதலித்தார்கள். என்றாவது ஒரு நாள் தன்னை புரிந்து கொள்ள மாட்டாரா? என்று மனைவியும், தன்னைப் புரிந்து கொள்ள மாட்டாளா? என்று கணவனும் ஏங்கிக் கொண்டிருந்தார்கள். இந்த சூழ்நிலையில் தெரிந்தவர் ஒருவர் மூலம் மனைவி ஆனவள் ஒரு சாமியாரை பார்க்க சென்றாள்.

munivar

அந்த சாமியாரிடம், தன் கணவன் தன்னிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டி ஏதாவது ஒரு மந்திரம் செய்யுங்கள் என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டாள். இதனைக் கேட்ட அந்த சாமியார், நான் ஒரு சக்தி வாய்ந்த மந்திரம் செய்கிறேன். அதற்கு ஒரு சிங்கத்தினுடைய தலையில் இருக்கும் உச்சி முடி வேண்டும். இதை நீ கொண்டு வந்து கொடுத்தால் போதும். அதை வைத்து நான் ஒரு பரிகாரம் சொல்கிறேன். அதை மட்டும் நீ செய்துவிட்டால், உன் கணவன் உன்னையே சுற்றி சுற்றி வருவார் என்று கூறினாராம்.

- Advertisement -

lion

இதனைக் கேட்ட மனைவிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. உடனே காட்டிற்கு புறப்பட்டாள். அங்கு ஒரு சிங்கத்தை சந்தித்தாள். கஷ்டப்பட்டு போராடி சிங்கத்திற்கு தேவையான இறையை கொடுத்து, பாசமாக பார்த்துக் கொண்டாள். சுமார் ஒரு மாத காலத்திற்கு பிறகு அந்த சிங்கம் அவளுடைய நெருங்கிய நண்பன் ஆகிவிட்டது. அவள் என்ன சொன்னாலும் கேட்கும் அளவிற்கு அந்த சிங்கம் அவள் மேல் அன்பை பொழிந்தது. அதன் பிறகு சிங்கத்தினுடைய அனுமதியுடன், அந்த உச்சி முடியை ஒரு வழியாக பெற்றுக் கொண்டாள். அதன் பிறகு சாமியாரை சந்தித்த அவள் பணிவன்புடன் சாமியாரிடம், சிங்கத்தினுடைய உச்சி முடியை கொடுத்தாள். அதனை வாங்கிக் கொண்ட சாமியார் கூறியது என்ன?

munivar

ஒருமாத காலம் போராடி காட்டில் இருக்கும் காட்டு ராஜாவாகிய சிங்கத்தையே நீ உன் அன்பிற்கு அடிமை ஆக்கி விட்டாய். யாரும் நெருங்க முடியாத உச்சி முடியையும் எடுத்து விட்டாய். இதை உன் அன்பிற்கு ஏங்கிய கணவனிடம் ஒரு நாளாவது செய்திருந்தால் எதுவுமே இல்லாமல் அவனுடைய அன்பை நீ பெற்று இருப்பாய். இதை உணர்த்தவே உன்னை இப்படி செய்ய சொன்னேன், என்று கூறினார். உண்மையை உணர்ந்த அந்தப் பெண் சாமியாருக்கு நன்றி உ.ரைத்து வீட்டிற்குப் புறப்பட்டாள்.

marraige-couple

பெரும்பாலும் திருமணத்திற்கு பிறகு கணவன்மார்கள் பக்குவம் ஆகி விடுகிறார்கள். குழந்தைப் பருவத்தில் அப்பாவின் கண்டிப்பையும், பள்ளி பருவத்தில் ஆசிரியர்களையும், அலுவலகத்தில் மேல் அதிகாரிகளையும் பல்லை கடித்துக் கொண்டு அனுசரித்து செல்லும் நீங்கள்! மனைவியிடம் மட்டும் கண்டிப்புடன் நடந்து கொள்வது எந்த விதத்தில் நியாயம்? உங்களை நம்பி வந்த அவளுக்கு மரியாதை கொடுத்து, கொஞ்சம் சகித்துக் கொண்டாலே, அதைவிட இரட்டிப்பான அன்பை அவள் உங்களுக்கு கொடுப்பாள். அதில் எந்த சந்தேகமும் இல்லை என்பதைக் கூறி இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
இடுப்பில் அரைஞான் என்கிற கருப்பு கட்டுவது ஏன்? பெண்கள் அரைஞான் கயிறு கட்டலாமா? இதனால் வரும் ஆபத்துக்கள் என்னென்ன? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -