நிலையான வருமானம் பெற பரிகாரம்

varumanam
- Advertisement -

நமக்கு ஏற்படக்கூடிய ஒவ்வொரு கஷ்டங்களும் நம்முடைய கர்ம வினைகளின் அடிப்படையில் தான் நடைபெறுகிறது. அந்த கர்ம வினைகளை போக்குவதற்கு பல பரிகாரங்கள் இருக்கின்றன. ஒரு செயலை செய்யும் பொழுது அந்த செயல் தடைபடுகிறது என்றால் அதற்கு கர்ம வினை தான் காரணம் எனும்போது அந்த கர்மவினையை நீக்கி அந்த செயலை நடத்துவதற்கு என்று ஒரு குறிப்பிட்ட பரிகாரம் இருக்கும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் கர்ம வினையால் நிலையான வருமானம் தடைப்பட்டிருப்பவர்கள் செய்யக்கூடிய பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

நவகிரகங்களின் அருளால் ஒருவருடைய வாழ்க்கையில் நன்மைகளும் நடக்கும் தீமைகளும் நடக்கும். கர்ம வினைகளின் அடிப்படையிலேயே நவகிரகங்கள் நமக்கு அருள் புரிகின்றன. நிலையான வருமானத்தை தரக்கூடிய கிரகமாக சூரிய பகவான் திகழ்கிறார். அதனால் நிலையான வருமானம் இல்லாதவர்கள் சூரிய பகவானை வழிபட வேண்டும்.

- Advertisement -

சூரிய பகவானுக்குரிய கிழமையாக ஞாயிற்றுக்கிழமை திகழ்கிறது. அவருக்குரிய தானியமாக கோதுமை திகழ்கிறது. யாரொருவர் தினமும் சூரிய வழிபாட்டை செய்கிறாரோ அவருடைய வாழ்க்கையில் நிலையான வருமானம் என்பது கிடைக்கும். அதே போல் ஞாயிற்றுக்கிழமையில் சூரிய ஹோரையில் அதாவது காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளும் மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள்ளும் இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள்ளும் அருகில் இருக்கக்கூடிய ஆலயத்திற்கு சென்று அங்கு இருக்கும் சூரிய பகவானுக்கு பகவானுக்கு முன்பாக கோதுமையை பரப்பி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வர வேண்டும்.

அருகில் சூரிய பகவான் இருக்கும் கோவில் இல்லாதவர்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு தாம்பாளத்தை வைத்து அதில் கோதுமையை பரப்பி அதன் மீது தீபம் ஏற்ற வேண்டும். தீபம் எரிந்து முடித்த பிறகு அந்த கோதுமையை பசு மாட்டிற்கு தானமாக வழங்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சூரிய பகவானின் அருளால் கர்மவினை நீங்கி நிலையான வருமானம் கிடைக்கும்.

- Advertisement -

இதேபோல் ஒரு தாம்பாளத்தில் கோதுமை மாவை பரப்பி நம்முடைய மோதிர விரலில் சிறிது நெய்யைத் தொட்டு “ஸ்ரீம்” என்னும் மந்திரத்தை எழுத வேண்டும். பிறகு அந்த மாவை தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிணைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அருகில் இருக்கும் கோவில் குளத்தில் இருக்கும் மீன்களுக்கு உணவாக வழங்க வேண்டும்.

கர்ம வினைகளை நீக்க தானமே மிகச் சிறந்த வழியாக திகழ்கிறது. அதனால் கோதுமையை நாம் எந்த அளவுக்கு தானமாக தருகிறோமோ அந்த அளவுக்கு சூரிய பகவானால் நம்முடைய கர்ம வினைகள் நீங்கி நிலையான வருமானம் கிடைக்கும். விளக்கேற்றும் பரிகாரத்தை தொடர்ந்து 48 ஞாயிற்றுக்கிழமைகள் செய்ய வேண்டும். மீனுக்கு உணவாஉணவு வழங்கும் பரிகாரத்தை தொடர்ந்து 48 நாட்கள் செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: குடிசையில் இருப்பவனை கோபுரத்துக்கு எடுத்துச் செல்லும் குபேர வழிபாடு

கோதுமையை இப்படி தானம் செய்வதன் மூலம் சூரிய பகவானின் அருள் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் நம்முடைய கர்ம வினைகளும் நீங்கி நிலையான வருமானம் கிடைக்கும்.

- Advertisement -