நிம்மதியான வாழ்க்கை வாழ இந்த ஆன்மிக குறிப்புகளை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

lakshmi
- Advertisement -

காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை வாழ்க்கையின் ஒவ்வொரு செயலிலும் தினமும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. அதேபோல் பண்டைய காலம் முதல் இன்றுவரை சில ஆன்மீக குறிப்புகளையும், ஒரு சில பழக்க வழக்கங்களையும் தலைமுறை தலைமுறையாக பின்பற்றி வருகிறோம். அவ்வாறு நம் முன்னோர்கள் சொல்லி வைத்த சில பழக்கவழக்கங்கள் நமது மன நிம்மதிக்கும், வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் பெரிதும் உதவியாக இருக்கிறது. அவ்வாறு ஒரு சில ஆன்மீக செயல்களை எப்பொழுதும் சரியான முறையில் பின்பற்ற வேண்டும். அவற்றில் ஏதேனும் ஒரு சிறு தவறு நிகழ்ந்தாலும் அவை நமக்குப் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். அதேபோல் இவற்றை சரியான முறையில் பின்பற்றி வந்தால் நம் வாழ்க்கை எப்போதும் செல்வச் செழிப்புடன் சந்தோஷமானதாக இருக்கும். வாருங்கள் அவ்வாறான சில ஆன்மீக குறிப்புகளை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

காலையில் எழுந்ததும் முதலில் நாம் எதைப் பார்க்கிறோமோ அது போலத்தான் நமது அன்றாட நாளும் தொடர்ந்து செல்லும். அவ்வாறு கோவில் கோபுரம், இறைவனின் புகைப்படம், மலைகள், கடல் போன்றவற்றை நாம் பார்ப்பது மிகவும் நல்லது. அது போல் காலை மற்றும் மாலை வேளையில் முடிந்தவரை இறைவனின் பெயரை மனதார உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

நம் வீட்டின் கிழக்குப் புறத்தில் துளசிச் செடி, வேப்ப மரம் இருக்க வேண்டும். இதன் மூலம் எந்த வித நோயும் வராது. விஷ ஜந்துக்களும் வீட்டிற்குள் நுழையாது. சுத்தமான காற்றும் கிடைக்கும். வீட்டில் இருக்கும் பூஜை அறை எப்போதுமே சுத்தமாக இருக்க வேண்டும். அங்கு உடைந்த பொருட்களை வைத்திருக்கக் கூடாது. இதன் மூலம் வீட்டில் பணத்திற்கு கஷ்டம் ஏற்படும்.

சிவன் பார்வதி விநாயகர் முருகர் ஆகிய நால்வரும் சேர்ந்து இருக்கும் திரு உருவ படத்தை வீட்டின் கிழக்குப் பக்கத்தில் மாட்டி வைத்தால் வீட்டில் இருக்கும் வாஸ்து பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். மகாலட்சுமியின் அருள் மட்டும் கிடைத்து விட்டால் அனைவருக்கும் நன்மை கிடைக்கும். அவ்வாறு காலை எழுந்தவுடன் நமது உள்ளங்கையை பார்ப்பது மகாலட்சுமியை பார்ப்பதற்கு சமமாகும்.

- Advertisement -

அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில் வீட்டின் வாசலில் கோலமிடக்கூடாது. அதேபோல் அமாவாசை, பௌர்ணமி, ஜென்ம நட்சத்திரம் போன்ற நாட்களில் எண்ணெய் தேய்த்து தலைக்குக் குளிக்கக் கூடாது. பெண்கள் நெற்றியில் திலகமிடாமல் பூஜை செய்யக் கூடாது. அவ்வாறு பூசணிக்காய் உடைப்பதையும் பெண்கள் செய்யக் கூடாது.

சுவாமி படங்களுக்கு எப்போதும் வாசனை இல்லாத மலர்களை வைக்க கூடாது. வீட்டு நிலை வாசலில் எப்போதும் மஞ்சள், குங்குமம் வைத்திருக்க வேண்டும். இதனால் தீய சக்திகள் உள் நுழையாமல் இருக்கும். வீட்டின் பூஜை அறையில் ஏற்றப்படும் கற்பூரம் தானாக எரிந்து அனைய வேண்டும். அவ்வாறு விளக்கு ஏற்றுவதற்கு ஐந்து எண்ணெய்கள் சேர்ந்த கூட்டு எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி இறைவனை வழிபடும் பொழுது உங்கள் வேண்டுதல் விரைவாக நிறைவேறும்.

- Advertisement -