நினைத்தது நடக்க முருகன் வழிபாடு

ninaithathu niravera
- Advertisement -

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பலவிதமான ஆசைகள் இருக்கும். அதில் சில நிறைவேறாத ஆசைகளும் இருக்கும். அப்படியான ஆசைகளும் கனவுகளும் நிறைவேற நாம் எடுக்கும் முயற்சியோடு தெய்வத்தின் அனுகிரகமும் இருந்தால் நிச்சயம் நிறைவேறும். அத்தகைய வேண்டுதல்கள் நிறைவேற கூடிய அனுகிரகத்தை உடனே அருளக் கூடிய கடவுளாக முருகப்பெருமான் இருக்கிறார்.

கந்தா என்று மனம் உருகி அழைத்தாலே, நினைத்த கணம் உடனே வந்து நிற்கக் கூடிய கருணை மிக்க கடவுள் தான் இந்த கந்த பெருமான். அவரை நினைத்து நாம் செய்யக் கூடிய இந்த வழிபாடானது நம்முடைய வேண்டுதல் அனைத்தையும் நிறைவேற்றித் தரும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன வேண்டுதல் என்பதை ஆன்மிகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

நினைத்தது நிறைவேற முருகன் வழிபாடு

நம்மில் பலரும் செவ்வாய்க்கிழமையை நல்ல நாள் இல்லை என நினைத்து ஒதுக்கி வருகிறோம். செவ்வாய்க்கிழமையை போல ஒரு அற்புதமான நாள் இல்லை என்று சொல்லப்படுகிறது. முருகருக்கு மிகவும் உகந்த தினமான செவ்வாய்க்கிழமை அங்கார காரனுக்கும் உகந்தது. நம்முடைய வேலை வருமானம் ஆரோக்கியம் போன்ற அனைத்திற்கும் காரண கர்த்தாவாக இருக்கக்கூடியவர் செவ்வாய் பகவான். இந்த செவ்வாய் பகவானுக்கு உகந்த நாள் தான் செவ்வாய் கிழமை.

அத்தகைய அற்புதமான இந்த நாளை நம் இனியும் ஒதுக்கி விடாமல், இறைவழிபாட்டிற்கு என ஒதுக்கினால் நம்முடைய வாழ்க்கையில் நல்ல பலனை பெற முடியும். செவ்வாய்க்கிழமையின் மகிமையை நன்கு அறிந்த நம் முன்னோர்கள் செவ்வாய் வெறும் வாய் என்ற அத்தனை சாதாரணமாக சொல்லி இருப்பார்களா என்ன?.

- Advertisement -

நாமோ இதற்கான அர்த்தத்தை தவறாக புரிந்து கொண்டு அந்த நாளைய ஒதுக்கி வருகிறோம். இப்பொழுது இந்த பழமொழிக்கான அர்த்ததையும் தான் இந்த நாளின் விரதத்தின் பவனையும் தெரிந்து கொள்ளலாம். செவ்வாய்க்கிழமையில் முருகப்பெருமானின் நினைத்து மௌன விரதம் இருக்க வேண்டும். இதை தான் நம் முன்னோர்கள் செவ்வாய் வெறும் வாய் என்ற பழமொழியாக சொல்லி வைத்தார்கள்.

அன்றைய தினம் முழுவதும் யாரிடமும் எதையும் பேசாமல் சாப்பிடாமல் முருகப்பெருமானை நினைத்து மௌன விரதம் இருந்தால் நீங்கள் நினைத்த எதுவும் நிச்சயமாக நடந்தே தீரும். இந்த விரதத்தை ஒன்பது வாரங்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். இந்த விரதம் இருக்கக் கூடிய செவ்வாய்க்கிழமை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து முதலில் பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு முருகப்பெருமானை நினைத்து அவருடைய மந்திரங்களை ஜெபிப்பதோடு முருகப்பெருமானுக்கு ஆறு வெற்றிலை வைத்து அதன் மேல் அகல் விளக்கு இது நல்லெண்ணெய் ஊற்றி தீபமும் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். இன்றைய நாளில் கந்த சஷ்டி கவசம் கந்த குரு கவசம் போன்றவற்றை பாராயணம் செய்யலாம்.

எந்த மந்திரமும் தெரியாது என்பவர்கள் ஓம் சரவண பவ என்ற இந்த நாமத்தை மட்டுமே நாள் முழுவதும் ஜெபித்துக் கொண்டு இருந்தாலே போதும் இறைவனின் அருள் நிச்சயமாக உங்களுக்கு கிடைக்கும். இந்த வழிபாட்டை கோவிலிலும் செய்யலாம் வீட்டிலும் செய்யலாம்.

இன்றைய கால சூழ்நிலையில் இந்த மௌன விரதத்தை அனைவரும் இருக்க முடியாது என நினைப்பவர்கள் உண்டு. அப்படியானவர்கள் அன்றைய நாளில் முருகப்பெருமானை மனதார நினைத்து அவரை மட்டுமே சிந்தனையில் வைத்து அவருடைய நாமங்களையும் சொல்லிக் கொண்டு மனமார வேண்டினால் நிச்சயமாக உங்களுடைய வேண்டுதல் பலிக்கும்.

நீங்கள் வேண்டக் கூடிய உங்களுடைய வேண்டுதல் நியாயமானதாக இருக்க வேண்டும். முருகனை இந்த முறையில் வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய வேண்டுதல் படிப்பதுடன் சிவபெருமானின் அருளையும் முழுவதுமாக பெற முடியும் ஏனெனில் முருகனின் சிவபெருமானின் அம்சம் தானே.

இதையும் படிக்கலாமே: மாட்டுப் பொங்கல் அன்று ஏற்ற வேண்டிய தீபம்

இந்த ஒரு வழிபாட்டை செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத மாற்றங்களை காணலாம். இந்த வழிபாட்டை முழுமனதுடன் செய்து முருகனுடைய முழு அருளையும் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.

- Advertisement -