நினைத்தது நினைத்தபடி நடக்க பரிகாரம்

homam sucess
- Advertisement -

நல்லதை நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும். தீயதை நினைப்பவர்களுக்கு தீயதே நடக்கும். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று பல மொழிகளை நாம் கேட்டிருப்போம். நம் உள்ளத்தில் நாம் நன்மையை நினைத்து எந்த ஒரு செயலை செய்தாலும் அந்த செயலால் நமக்கு நன்மைகளை ஏற்படும். அதே போல் பிறருக்கு தீமை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஏதாவது ஒரு செயலை நாம் செய்தோம் என்றால் அந்த செயலால் நமக்கு தான் தீமை ஏற்படும். இதைதான் நேர்மறை ஆற்றல் எதிர்மறை ஆற்றல் என்றும் கூறப்படுகிறது. இப்படி நாம் நல்லதை நினைத்து செய்யக்கூடிய காரியம் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

அன்றைய காலத்தில் மன்னர்கள் எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் அந்த செயலை செய்வதற்கு முன்பாக யாகம் வளர்க்கும் பழக்கம் இருந்து வந்தது. யாகத்தில் போடக்கூடிய ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு விதமான பலன் இருக்கும். போரில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு உரிய யாகம், கோவில் கட்ட வேண்டும் என்றால் அதற்கு உரிய யாகம் என்று ஒவ்வொரு செயலுக்கும் தனித்தனியாக யாகம் வளர்த்து அந்த செயலில் வெற்றி பெற்றார்கள். அதேபோல் இன்றைய காலத்திலும் பலரும் யாகம் வளர்க்கும் பழக்கத்தை வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

- Advertisement -

அதன் ரீதியாக தான் வீட்டில் ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ, கணபதி ஹோமமாவது செய்ய வேண்டும், அப்பொழுதுதான் வீட்டில் இருக்கும் தீய சக்திகள் அனைத்தும் விலகும். வீட்டில் சுபிட்சம் உண்டாகும் என்று கூறப்படுகிறது. யாகங்களில் இருந்து பல தெய்வங்களும் பல நல்ல சக்திகளும் வெளிப்படும் என்று நம்முடைய புராணக் கதைகள் கூறுகின்றன. அவ்வளவு அற்புதம் மிகுந்த யாகத்தை நாமும் வீட்டிலேயே எளிமையான முறையில் எப்படி செய்தால் நாம் நினைத்தது நடக்கும் என்று பார்ப்போம்.

இந்த யாகத்தை நாம் செய்வதற்கு நமக்கு ஐந்து வகையான மர குச்சிகள் தேவை. ஆலமரம், அரசமரம், வேப்பமரம், அசோக மரம், அத்தி மரம். இந்த மரக்குச்சிகள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் யாகம் செய்யும் பொருட்களோடு சேர்த்து வைத்திருப்பார்கள். இந்த குச்சிகளை நாம் வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டை சுத்தம் செய்த மறுநாள் ஒரு சிறிய அகலமான பாத்திரமாக எடுத்துக்கொண்டு அதில் இந்த ஐந்து மரக் குச்சிகளிலும் ஒவ்வொன்றும் நான்கு என்ற வீதத்தில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு நெய்யை ஊற்றி கற்பூரத்தை வைத்து ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு ஏற்றும்பொழுது அதிலிருந்து புகை வெளிப்படும். இந்த புகையை நம்முடைய முகத்தில் படும் அளவிற்கு காட்டிவிட்டு வீடு முழுவதும் காட்ட வேண்டும். இவ்வாறு காட்டுவதன் மூலம் நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் விலகும். கற்பூரத்தை வைத்து ஏற்றும் பொழுதும் நமக்கு என்ன நடக்க வேண்டுமோ அதை மனதார நினைத்துக் கொண்டு செய்ய வேண்டும். இந்த குச்சிகள் அனைத்தும் எரிந்து சாம்பலான பிறகு இதை அப்படியே எடுத்து ஒரு சிறிய டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக நமக்கு ஐந்து விதமான தண்ணீர் தேவைப்படும். கிணற்றுத் தண்ணீராக இருந்தாலும் சரி போர்வெல் தண்ணீராக இருந்தாலும் சரி புனித தீர்த்தங்களாக இருந்தாலும் சரி ஐந்து தீர்த்தங்கள் வேண்டும். இவை ஐந்தையும் தனித்தனியாக ஒவ்வொரு பாட்டிலும் வைத்துக் கொண்டு நீங்கள் குளிக்க செல்வதற்கு முன்பாக ஐந்து தீர்த்தங்களையும் சிறிது சிறிது குளிக்கும் தண்ணீரில் ஊற்றி குளிக்க வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு குளித்து முடித்த பிறகு நாம் எடுத்து வைத்திருக்கும் அந்த சாம்பலை நம்முடைய நெற்றியில் விபூதியாக பூசிக்கொள்ள வேண்டும். அதோடு நம் வீட்டின் நான்கு மூலைகளிலும் இந்த சாம்பலை தூவி விட வேண்டும். இவை அனைத்தையும் நாம் செய்யும்பொழுது நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் நடக்கும். நல்லதை நினைத்தால் நமக்கு கண்டிப்பான முறையில் நல்லதே நடந்திரும். இதே தீய செயல்களுக்காக இந்த விஷயத்தை பயன்படுத்தினால் அது நமக்கே தீமையாகிவிடும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: சித்திரை முதல் வெள்ளி மகாலட்சுமி வழிபாடு

மிகவும் அதிசக்தி வாய்ந்த அதே சமயம் மருத்துவ குணம் மிகுந்த இந்த பரிகாரத்தை நாமும் செய்து நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வோம்.

- Advertisement -