நினைத்தது உடனே நிறைவேற, இந்த பேப்பரில், இந்த பேனாவில், இப்படி எழுதி, இந்த தெய்வத்தின் பாதங்களில் வைத்தாலே போதும்.

krishna

நினைத்தது உடனே நிறைவேற வேண்டும் என்பதற்காக, நாம் எத்தனையோ தெய்வங்களை எத்தனையோ முறையில் வழிபட்டு கொண்டு தான் வருகின்றோம். முதலில், நினைத்தது நிறைவேற வேண்டும் என்றால், இறை வழிபாட்டிற்கு முன்பாக, நம்முடைய மனதை நம் கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும். ‘இதை இத்தனை நாட்களுக்குள் நிறைவேற்றியே தீர வேண்டும்’ என்ற உறுதிமொழியை உங்களுடைய மனதில் விதைக்க வேண்டும். உங்களை சுற்றி இருக்கும் ஆரா வட்டம் எதற்கு தயாராக இருக்க வேண்டும். ‘நாம என்ன நினைக்கிறோமோ அதுதா நடக்கும்ங்க!’ நடக்கும் நடக்கும் என்று நினைச்சிட்டே இருந்தீங்கன்னா, அது நிச்சயம் நடந்திடும். நடக்காது நடக்காது என்று சொல்லிட்டே இருந்தா, அது நிச்சயம் நடக்காம தான் போயிடும்.

Krishna mantra in tamil

நினைப்பதை நடத்தி காட்டுவதில் வரக்கூடிய சிரமங்கள், தடைகள் இதை தகர்த்தெறிய தான் இறைவனிடம் வேண்டுதலை வைக்க வேண்டுமே தவிர, எந்த ஒரு முயற்சியையும் எடுக்காமல், வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும், கோடிகோடியாக பணம் கிடைக்க வேண்டும் என்று எண்ணுவது முற்றிலும் தவறு. சரி, உங்களுடைய முயற்சிகள் வெற்றியடைய எந்த பேனாவில், எந்த இறைவனை நினைத்து என்ன எழுத வேண்டும், எந்த மந்திரத்தை உச்சரித்தால் அந்த குறிக்கோள் உடனே நிறைவேறும் என்று இப்போதே பார்த்து விடலாமா?

உங்களது குறிக்கோள்களை உங்களது, நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள சிவப்பு பேனாவை எடுத்து, ஒரு வெள்ளைத் தாளில், உங்களுடைய குறிக்கோளை இரண்டே வரியில் எழுதி, அந்த பேப்பரை கிருஷ்ண பரமாத்மாவின் பாதங்களில் வைத்துவிட்டு ‘ஓம் க்லீம் க்ருஷ்ணாய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். (நல்ல வேலை கிடைக்க வேண்டும். தொழிலில் முன்னேற்றம் தேவை. சோம்பேறித்தனம் நீங்க வேண்டும். விடாமுயற்சி வேண்டும். இப்படியாக ஏதாவது ஒரு வரியை எழுதிக் கொள்ளுங்கள் அது உங்களுடைய விருப்பம் தான்.)

handwriting

காகிதத்தில் நீங்கள் எழுதக்கூடிய குறிக்கோள், ஏதாவது ஒன்றை நினைத்து எழுதக்கூடிய குறிக்கோளாக இருக்கும். அந்தக் குறிக்கோள்காண முயற்சியை நீங்கள் கைவிடக்கூடாது. அந்தப் பேப்பரை மாற்ற வேண்டாம். கிருஷ்ணர் படத்தின் காலடியிலோ, கிருஷ்ணர் சிலையின் காலடியிலோ  அதை அப்படியே வைத்து விடுங்கள். இந்த மந்திரத்தை தினம்தோறும் தொடர்ந்து உச்சரித்து வாருங்கள். நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறாமல் போவதற்கு வாய்ப்பே கிடையாது.

- Advertisement -

மந்திரத்தை உச்சரிப்பதற்கு முன்பு குறிக்கோளை எழுதுவதற்கு முன்பு, கிருஷ்ண பரமாத்மாவின் முன்பு ஒரு அகல் தீபத்தை ஏற்றி வைத்து, தீப ஒளியில் கிருஷ்ண பரமாத்மாவை தரிசனம் செய்து, ஆத்மார்த்தமான வேண்டுதலை வைப்பதும் நன்மையைத் தரும். முடிந்தால், தினம்தோறும் ஒரு கைப்பிடி அவல் கிருஷ்ண பரமாத்மாவுக்கு நிவேதனமாக வையுங்கள். எந்த ஒரு இறை வழிபாட்டிற்கு முன்பும், எந்த ஒரு மந்திரத்தை உச்சரிப்பதற்கு முன்பாகவும் கட்டாயம் உங்களுடைய வீட்டு பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைக்க வேண்டும் என்பதையும் இந்த இடத்தில் நினைவு கொள்வோம்.

dheepam

இதோடு சேர்த்து, நம்முடைய தொழில் பின்தங்கி இருந்தால், அந்தத் தொழிலை முன்னேற்றி செல்வதற்கு, ஒரு சிறிய வழிபாட்டு முறையையும் தெரிந்து கொள்வோம். நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தால், ஐந்து முகம் உள்ள ஒரு விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள்.

kuthu-vilakku

அது குத்துவிளக்காக இருந்தாலும் பரவாயில்லை. அதில் தாமரை தண்டு திரியை போட்டு, ஐந்து முகங்களிலும் திரி போட்டு, நெய் விட்டு, தினம் தோறும் தீபம் ஏற்றி வந்தால் உங்கள் தொழிலில் இருக்கக்கூடிய தடைகள் படிப்படியாக குறையும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு சின்னசின்ன தீப வழிபாட்டையும், சின்ன சின்ன மந்திரங்களை உச்சரிப்பது, பெரிய அளவிலான வெற்றியை கட்டாயம் கொடுக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
நவராத்திரி விழாவை கொண்டாட முடியாதவர்கள் நாளைய நாள் 24/10/2020 துர்காஷ்டமி அன்று இதை நிவேதனம் வைத்து பூஜை செய்தால் கோடான கோடி பலன்கள் கிடைக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.