நினைவுகளுக்கு மத்தியில் நீ – காதல் கவிதை

Kadhal kavithai

தினமும் கொள்ளும் உன்
நினைவுகளுக்கு மத்தியில்
உயிருடன் நான் ஓயாமல் காத்திருக்கிறேன்
ஒரு நாள் நீ என்னை தேடி வருவாய் என்று..

kadhal kavithai image
kadhal kavithai image

சுட்டெரிக்கும் வெயிலின் நடுவில்
விரும்பி நான் நிற்கிறேன்
என் மனதில் உள்ள காதலின் ஈரங்கள்
இன்றாவது காயுமா என்று..

உன் நினைவுகளோடு வாழவும்
முடியவில்லை..
என் உறவுகளை விடுத்து
சாகவும் முடியவில்லை..
சீக்கிரத்தில் வந்துவிடு
என்னோடு சேர்ந்துவிடு..

Love kavithai image
Love kavithai image

இதையும் படிக்கலாமே:
சிறைப்பட்டு கிடைக்கும் நான் – காதல் கவிதை

தான் காதலிப்பவர்களை வெகு நாட்களாக பிரிந்து வாழ்பவர்களுக்கு மனதின் ஓரத்தில் ஒரு துளி நம்பிக்கை என்றும் இருக்கும். நம் காதல் நமக்கு திரும்ப கிடைக்காதா, நம் காதலனோ காதலியோ நிமிடம் திரும்பி வரமாட்டார்களா என்ற ஏக்கம் எப்போது அவர்களின் கண்களில் பிரதிபலிக்கும். சிரிக்கும் உதடுகளுக்கு பின்னல் இப்படி எத்தனையோ சிந்தனைகள் ஒளிந்திருக்கும். அது தான் காதலின் விளையாட்டு.

தோழி கவிதை, நட்பு கவிதைகள், காதல் கவிதைகள் என அனைத்து விதமான கவிதை தொகுப்புகளையும் படிக்க ஒரு சிறந்த பக்கம் இது.