நீங்கள் வேண்டிய நேர்த்திக்கடனை செலுத்த மறந்து போய் விட்டீர்களா? அதனால் தோஷம் ஏதும் ஏற்படும் என்கிற பயமா? இதற்கு என்ன பரிகாரம்?

nerthikadan-temple
- Advertisement -

மனிதர்கள் எந்த ஒரு துன்ப காலத்திலும் இறைவனை நாடுகிறான். இறைவனிடம் வேண்டிக் கொண்டு அந்த விஷயம் நல்லபடியாக நடந்து முடிந்தால் நான் உனக்கு இதை செய்கிறேன் என்று ஒப்பந்தம் செய்து கொள்வதையே நேர்த்திகடன் என்கிறோம். கடவுள் நம்மிடம் எதையும் எதிர்பார்த்து உதவிகள் செய்வதில்லை. நாம் அவரை நினைக்க வேண்டும் என்பதற்காகவே சிறுசிறு திருவிளையாடல் புரிகிறார். வேண்டிய நேர்த்திக்கடனை செலுத்த மறந்து போய்விட்டால் தோஷங்கள் ஏற்பட்டு விடுமோ? என்கிற அச்சம் மனதை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும். அவர்கள் பரிகாரமாக என்ன செய்யலாம்? என்கிற சுவாரசிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

praying god

நாம் அடிக்கடி நிறைய நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டுபவர்கள் ஆக இருந்தால் அதில் பாதி கட்டாயம் மறந்து போய்விடும். அல்லது உங்கள் பிரார்த்தனை நிறைவேறி விட்டால் நீங்கள் அந்த வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்கிற பொறுப்பு இல்லாமல் மறந்து அலட்சியமாகவும் விட்டு விடுவீர்கள். சிலருக்கு என்ன வேண்டிக் கொண்டோம்? என்ன செலுத்த வேண்டும்? என்பதே ஞாபகத்தில் நிற்காமல் போய்விடும்.

- Advertisement -

இப்படி ஒரு விஷயத்தை கடவுளிடம் நான் இதைச் செய்கிறேன் என்று ஒப்புக் கொண்டு அதை செய்யவில்லை என்றால் மனம் நெருடலாகவே இருக்கும். இந்த நெருடலில் இருந்து விடுபட அந்த பிரார்த்தனைக்கு உரிய நேர்த்தி கடனை எப்படியாவது செலுத்திவிட வேண்டும் என்கிற துடிப்பு ஏற்படும். ஆனால் என்ன நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும்? என்று மறந்து போய்விட்டால் என்ன செய்வது? நாம் என்ன வேண்டிக் கொண்டாலும் அதனை சுலபமாக செய்து விடலாம் ஆனால் அதையே மறந்து போய்விட்டால் என்ன தான் செய்வது?

temple-bell

ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனுக்காக நீங்கள் செய்ய நினைத்ததை அந்த இறைவனுக்கே சென்று சேரும்படி திருப்பணியில் பங்கு கொள்வது, ஆலயங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பது போன்ற விஷயங்களை செய்யலாம். கோவில் கண்ணாடி, கோவில் மணி, சுவாமிக்கு ஏற்றப்படும் விளக்கு, கோவில் கிணற்றில் இருக்கும் வாளி போன்ற கோவில்களிலேயே இருக்கும் பொருட்களை நீங்கள் வாங்கி கொடுப்பதன் மூலம் செய்ய மறந்த நேர்த்திக் கடனுக்கு பரிகாரம் தேடிக் கொள்ளலாம். வேண்டியது பலிக்காவிட்டால் கூட நேர்த்திக்கடன் செழுத்தி விட்டால் நிச்சயம் வேண்டியது நிறைவேறிவிடும் என்பதும் நம்பிக்கை.

- Advertisement -

பரிகாரம் செய்யாவிட்டால் ஏதாவது நடந்து விடுமோ? என்கிற நெருடல் தான் இந்த பரிகாரம் செய்வதற்கும் காரணமாக இருக்கிறது. ஒருவர் நல்லபடியாக திருமணம் நடந்தால் திருப்பதிக்கு வந்து ஒரு பவுன் மோதிரம் போடுவதாக வேண்டிக் கொண்டார். நல்லபடியாக திருமணம் நடந்தது. வேண்டிக் கொண்டபடி திருப்பதிக்கு சென்று விட்டார் ஆனால் அங்கு சென்ற பின் நகை விற்கும் விலைக்கு நாம் வேண்டிய இப்போதே நிறைவேற்றி ஆக வேண்டுமா? பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அவருக்கு தோன்றிவிட்டது. அவர் அந்த ஆலயத்தை விட்டு செல்வதற்குள் அவருடைய மனைவியின் 2 பவுன் தங்க சங்கிலி காணாமல் போய்விட்டது.

Perumal

ஒன்றுக்கு இரண்டாக வசூல் செய்து விட்டார் ஏழுமலையான். இது எதார்த்தமாக நடந்தாலும், நம் கண்களுக்கு அவர் வேண்டிய நேர்த்திக் கடனை செலுத்தாததால் தான் இறைவன் இப்படி செய்து விட்டார் என்று தான் தோன்றும். இறைவனுடனான இந்த அற்புத பிணைப்பு நெருடல் உடன் இருப்பதை நாம் எப்போதும் விரும்புவதில்லை அதனால் எப்போதோ நீங்கள் வேண்டிய வேண்டுதலை நிறைவேற்றாத காரணத்தினால் தான், இப்போது நீங்கள் துன்பப்படுகிறீர்கள் என்று நினைத்தால் மேற்கூறிய பரிகாரத்தை இப்போதே செய்து விடுங்கள். உங்கள் மனம் திருப்தி அடைந்து விடும் அதன் பிறகு எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்பதை நீங்கள் ஆழமாக நம்பும் படி இறைவன் செய்வார்.

- Advertisement -