- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநிறைவேறாத வேண்டுதலை நிறைவேற்றும் தெட்சனாய கடை கிருத்திகை

நிறைவேறாத வேண்டுதலை நிறைவேற்றும் தெட்சனாய கடை கிருத்திகை

- Advertisement -

மார்கழி மாதத்தில் வரக்கூடிய கிருத்திகையை நாம் தெட்சனாய கடை கிருத்திகை என்று கூறுவோம். மார்கழி மாதத்தோடு தெட்சனாய காலம் நிறைவடைவதால் அந்த மாதத்தில் வரக்கூடிய கிருத்திகையை தெட்சனாய கடை கிருத்திகை என்று கூறுவது உண்டு. இது இந்த வருடம் ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி 3:00 மணிக்கு மேல் தொடங்குகிறது. அந்த சமயத்தில் வைகுண்ட ஏகாதசியும் இருக்கிறது என்பதால் முருகப்பெருமானுக்கும் பெருமாளுக்கும் உகந்த வழிபாடாகவே இந்த வழிபாடு திகழ்கிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த கிருத்திகை நட்சத்திர நாளில் எந்த முறையில் வழிபாடு செய்தால் நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தெட்சனாய கடை கிருத்திகை

முருகப்பெருமானை எந்த வேண்டுதலுக்காக வேண்டுமானாலும் நாம் வழிபடலாம். அவரை முழு நம்பிக்கையுடன் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை அவர் ஏற்படுத்துவார். நமக்கு இருக்கக்கூடிய தடைகளை நீக்குவார். சிறந்த செல்வத்தையும் ஞானத்தையும் அருள்வார். அவ்வளவு சிறப்பு வாய்ந்த முருகப்பெருமானுக்கு உகந்த மார்கழி மாத கிருத்திகையில் முருகப்பெருமானை வழிபாடு செய்யும் முறையைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை தொடர்ச்சியாக 6 நாட்கள் செய்ய வேண்டும். நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருக்கக்கூடிய வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று முருகப்பெருமானை மனதார நினைத்துக் கொண்டு இந்த வழிபாட்டை தொடங்க வேண்டும். தினமும் மாலை 6 மணிக்கு இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். இதற்கு நம்முடைய வீட்டு பூஜை அறையில் ஒரு மனை பலகையை போட்டு அதற்கு மேல் முருகப் பெருமானின் படத்தை வைத்துக் கொள்ளுங்கள். அந்த மனைப் பலகையில் பச்சரிசி மாவினால் நட்சத்திர கோலத்தை போட்டுக் கொள்ளுங்கள்.

பிறகு முருகப்பெருமானுக்கு முன்பாக ஒரு அகல்விளக்கில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். அதேபோல் ஒரு சிறிய தாம்பாள தட்டை வைத்து அதில் ஒரு கைப்பிடி அளவு துவரம் பருப்பு, ஒரு ரூபாய் நாணயம், ஒரு சிறிய விரலி மஞ்சள், ஒரு ஏலக்காய் இவற்றை வைத்து விட வேண்டும். இதோடு முருகப் பெருமானுக்காக ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். இவ்வாறு வைத்து முடித்த பிறகு முருகப்பெருமானுக்கு உகந்த சஸ்திர பந்தம் என்னும் பாடலை 27 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

- Advertisement -

இப்படி பாராயணம் செய்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். இந்த தீபம் இரவு 9 மணி வரை எரிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக ஆறு நாட்கள் அதாவது ஜனவரி ஒன்பதாம் தேதி இந்த வழிபாட்டை ஆரம்பித்து ஜனவரி 14-ஆம் தேதி வரை தொடர்ச்சியாக ஆறு நாட்கள் செய்ய வேண்டும். ஆறு நாட்களும் மாலை ஆறு மணியிலிருந்து இரவு 9 மணி வரை அந்த தீபம் தெரிய வேண்டும். தீபம் தானாக குளிரக்கூடாது.

ஆறு நாட்கள் நிறைவடைந்த பிறகு நாம் தாம்பாளத்தில் வைத்த துவரம் பருப்போடு சிறிது அரிசியையும் சேர்த்து வேகவைத்து பறவைகளுக்கு தானமாக தந்துவிட வேண்டும். முக்கியமான குறிப்பு யார் காலும் படக்கூடாது. அந்த துவரம் பருப்பில் வைத்திருந்த நாணயம், விரலி மஞ்சள், ஏலக்காய் இவை மூன்றையும் ஒரு சிறிய மூட்டையாக கட்டி பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும்.

- Advertisement -

சஸ்திர பந்தம் பாடல் வரிகள்

“வாலவே தாந்தபா வாசம்போ கத்தன்பாமாலைபூ ணேமதிற மால்வலர்தே-சாலவமாபாசம் போக மதிதேசார் மாபூதம்வாபாதந் தாவேல வா.”

பாடலின் விளக்கம்

தூயவனே, வேதாந்த விலாசக் கடவுளே..பேரின்பமெனும் அனுபவத்திற்கு தலைவனாக இருப்பவனே, மாலைகளை அணியும் செம்பொன் போல் திகழ்பவனே, வன்மை சான்ற திருமாலுக்கும் வல்லவர்களுக்கும் கடவுளானவனே…என்னுடைய மனத்தில் நிறைந்திருக்கும் தேவையல்லவைகளையும், பெரிய ஆணவங்கள், பந்தங்கள் போன்றவை ஒழிய ஞானமும் புகழுமுள்ள பரமான்மாவே வந்தருள்க. உன்னுடைய திருவடிகளாகிய செல்வத்தை எனக்கு தந்தருள வேண்டும்.

இதையும் படிக்கலாமே:மார்கழி கிருத்திகை வழிபாடு

அதிசக்தி வாய்ந்த இந்த முருகனின் வழிபாட்டை முழுமனதோடு செய்பவர்களுக்கு அவர்களுடைய வேண்டுதல்கள் முருகனின் அருளால் விரைவிலேயே நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்