முழம் முழமா வருடம் முழுக்க நிக்காம பூக்கும் நித்திய மல்லி பூக்களை வீட்டில் அள்ளுவதற்கு கோடைகால டிப்ஸ் இதோ உங்களுக்காக!

nithya-malli
- Advertisement -

வருடம் முழுக்க பூக்களை கொடுத்துக் கொண்டே இருக்கக்கூடிய பூச்செடிகளில் நித்திய மல்லி செடியும் ஒன்று! பார்ப்பதற்கு முல்லை மற்றும் மல்லி இரண்டும் சேர்ந்தது போல இருக்க கூடிய இந்த நித்திய மல்லி வாசத்தில் ஆளை தூக்கும். தெருவே மணக்கக்கூடிய இந்த நித்திய மல்லி செடி உங்கள் வீட்டில் இருந்தால் கோடை காலத்தில் அதனை பராமரிப்பது எப்படி? கொத்து கொத்தாக பூக்களை அள்ளுவது எப்படி? என்பதை தான் இந்த தோட்டக்குறிப்பு ரகசியங்களின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

நித்திய மல்லி செடியை செடியாக வாங்கி வந்து வளர்ப்பவர்களை விட அதை பதியம் போட்டு வளர்ப்பவர்கள் தான் அதிகம். பக்கத்து வீட்டில் செடி இருந்தால் ஒரு கிளையை உடைத்து வந்து நட்டு வைத்தாலே மூன்றே மாதத்தில் கொத்துக்கொத்தாக பூக்களை கொடுத்து நம்மை அசத்தக்கூடிய தன்மை நித்திய மல்லிக்கு மட்டுமே உண்டு.

- Advertisement -

கொடி போல படர்ந்து விரிந்து வளரக்கூடிய இந்த நித்திய மல்லிக்கு பந்தல் போல போட்டு வைத்தால் சரம்சரமாக முழம் முழமாக நாம் பூக்களை அள்ளலாம். இந்த நித்திய மல்லி செடியில் இருக்கக்கூடிய பச்சை புழுக்களை ஒழிக்க நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டாம். புழுக்கள் இருக்கக்கூடிய இடங்களை கத்தரித்து தூக்கி எறிந்து விடுங்கள். அவ்வளவுதான், அது மீண்டும் வராது.

அப்படி அதிகமான பூச்சிகள் இலைகளை தின்று விட்டால் வேப்ப எண்ணெயை ஸ்பிரே செய்தால் போதும். புழுக்கள் வராது தடுக்கலாம். ஒரு இடத்தில் ஒரு கொத்து பூத்து முடித்தவுடன் அது பூத்த இடத்தை மட்டும் கத்தரித்து விட வேண்டும். இதை கவ்வாத்து செய்வது என்று கூறுவர். இப்படி செய்தால் தான் இன்னும் இன்னும் நிறைய பூக்களை கொடுக்கும்.

- Advertisement -

நித்திய மல்லி செடிகளுக்கு தினம்தோறும் தண்ணீரை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். சரியான சூரிய வெளிச்சமும், போதிய தண்ணீரும் இருந்தால் போதும், முழம் முழமாக எவ்வளவோ பூக்களை நமக்கு கொடுக்கும். சிலர் வீட்டில் எல்லாம் ஒரு செடியிலேயே மூன்று முழம், நான்கு முழம் கூட பூக்களை எடுப்பார்கள். இதற்கு நல்ல ஒரு ஊட்டச்சத்து உரமாக இருப்பது கடலை புண்ணாக்கு. இந்தக் கடலை புண்ணக்குடன், சிறிதளவு வேப்பம் புண்ணாக்கும் சேர்த்து கொடுத்தால் பூச்சிகள் வராமலும், ஊட்டச்சத்தும் கொடுக்க முடியும்.

இவற்றை வாங்க முடியாதவர்கள் ஒரு கைப்பிடி கடலையை ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதை காலையில் மிக்ஸியில் போட்டு சிறிதளவு வேப்ப இலைகளை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். இதை நன்கு தண்ணீரில் கரைத்து உரமாக கொடுங்கள். அவ்வளவுதான், செடிகள் செழித்து வளரும். நிறைய பூக்களை கொடுக்கும். மற்றபடி இதற்கு பெரிதாக உரம் கொடுக்க வேண்டாம்.

இதையும் படிக்கலாமே:
செடிகளுக்கு தண்ணீர் ஊற்றவில்லையே என்ற கவலை இனி இல்லை! இந்த ஐடியா மட்டும் தெரிந்தால் 10 நாளைக்கு வீட்டில் ஆள் இல்லை என்றாலும் உங்க செடி இனி வாடாது.

அரிசி கழுவிய தண்ணீர், காய்கறி கழிவுகள், பழ கழிவுகள் அவற்றின் தோல்கள் போன்றவற்றை ஊற வைத்து கொடுத்தால் போதும். புளித்த மோர், புளித்த இட்லி மாவு, புளித்த கஞ்சி தண்ணீர் போன்றவற்றையும் இதற்கு உரமாக கொடுக்கலாம். வீட்டில் தேவையில்லாத இந்த பொருட்களையே உரமாக கொடுத்து இதன் செழிப்பை இரட்டிப்பாக காண முடியும்.

- Advertisement -