செடிகளுக்கு தண்ணீர் ஊற்றவில்லையே என்ற கவலை இனி இல்லை! இந்த ஐடியா மட்டும் தெரிந்தால் 10 நாளைக்கு வீட்டில் ஆள் இல்லை என்றாலும் உங்க செடி இனி வாடாது.

rose
- Advertisement -

பெரிய பெரிய அளவில் நம்முடைய வீட்டில் தோட்டம் இல்லை என்றாலும், இப்போதெல்லாம் வீட்டில் இரண்டு தொட்டியிலாவது சின்ன சின்ன செடிகளை வைத்து வளர்த்து வருகின்றோம். சில பேர் ரோஜா செடி வைத்திருப்பார்கள். சில பேர் துளசி செடி வைத்திருப்பார்கள். இப்படி ஆசை ஆசையாக வளர்க்கக்கூடிய செடிகளை 10 நாள் வீட்டில் ஆள் இல்லாமல் விட்டு விட்டு சென்று விட்டால் போதும். அந்தச் செடி வாடி போய்விடும் சில பேர் வீட்டில் அந்த செடி செத்துப் போவதற்கு கூட வாய்ப்பு உள்ளது.

ஆசை ஆசையாக வளர்த்த செடிகள் வீட்டில் ஆள் இல்லை என்றாலும் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்வது. ஒரு சூப்பர் ஐடியா இருக்குங்க. பத்து நாள் நீங்க வீட்டில் இல்லை என்றாலும் உங்களுடைய செடிக்கு தண்ணீர் கிடைக்க இந்த ஐடியாவை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

தண்ணீர் ஊற்றவில்லை என்றாலும் செடிகள் வாடாமல் இருக்க சூப்பர் ஐடியா:
ஒரு சிறிய வாட்டர் கேன் எடுத்துக் கொள்ளுங்கள். அதன் உள்ளே தண்ணீர் நிரப்பி விடுங்கள். பிறகு ரிப்பன் போல நீளமாக ஒரு காட்டன் துணியை வெட்டிக் கொள்ளுங்கள். கட்டாயம் திக்காக இருக்கும் காட்டன் துணி தான் தேவை. முக்கால் பாகம் காட்டன் துணி வாட்டர் கேனுக்கு உள்ளே மூழ்கி இருக்க வேண்டும். மீதி துணி நனையாமல் வெளியே இருக்கட்டும்.

இப்போது இந்த துணியின் மேலேயே வாட்டர் கேன் மூடியை பாதி அளவு மூடி விட வேண்டும். டைட்டாவும் மூடக்கூடாது. ரொம்பவும் லூசாகவும் மூடக்கூடாது. இப்போது வாட்டர் கேனில் இருக்கக்கூடிய தண்ணீர், இந்த துணியின் வழியாக வெளிப்புறமாக வர தொடங்கும். கொஞ்சம் கொஞ்சமாக சொட்டு நீர் பாசனம் போல இந்த துணியின் மூலம் செடிகளுக்கு தண்ணீர் கிடைக்கும்.

- Advertisement -

சின்ன செடி என்றால் ஒரு வாட்டர் கேனில் இந்த சொட்டு நீர் பாசன குறிப்பை முயற்சி செய்து பார்க்கலாம். கொஞ்சம் பெரிய செடிகள் இருக்கிறது என்றால் கொஞ்சம் பெரிய பக்கெட்டில் தண்ணீர் வைத்து நீளமான காட்டன் துணியை கீழே தொங்க விட்டால், பெரிய செடிகளுக்கு தேவையான தண்ணீர் சொட்டு சொட்டாக அதிக அளவில் கிடைத்துக் கொண்டே இருக்கும். பத்து நாட்கள் நீங்கள் வீட்டில் இல்லை என்றால் கூட பரவாயில்லை. இப்படி ஒரு செட்டப் செய்து வைத்து விட்டு போங்க. உங்களுடைய செடி நீங்கள் திரும்பி வரும் வரை இந்த தண்ணீரை கொண்டு உயிர் வாழும்.

செடிகளுக்கு கொஞ்சம் உயரமான பக்கத்தில் இந்த வாட்டர் கேனை இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இந்த செட்டப்பை செய்துவிட்டு கொஞ்சம் பொறுமையாக இருங்கள் தானாக தண்ணீர் வெளியே வரும். துணியின் வழியாக தண்ணீர் வெளியே வருவதற்கு ஒரு அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை எடுக்கும்.

- Advertisement -

செட்டப்பை செய்து வைத்து விட்டு உடனே தண்ணீர் வெளியே வரவில்லை என்று கவலைப்படாதீங்க. பொறுமையா இதை அரை மணி நேரத்திற்கு ஒரு முறை பாருங்கள். உங்களுக்கே தெரியும். தண்ணீர் தானாக சொட்ட தொடங்கி விடும். நீங்கள் எத்தனை நாட்கள் வெளியூரில் இருப்பீர்கள் என்பதை கணக்கு பார்த்துக் கொண்டு அதற்கு தகுந்தபடி பக்கெட்டில் தண்ணீரை நிரப்பி விட்டு செல்லுங்கள்.

உதாரணத்திற்கு உங்களுக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை பார்த்தாலே நன்றாக புரியும். ஒரு பெரிய பக்கெட் வைத்து அதன் உள்ளே இரண்டு மூன்று துணிகளை போட்டு தொங்கவிட்டு பக்கத்து பக்கத்து செடிகளுக்கு கூட தண்ணீர் விடலாம். இந்த வெயில் காலத்திற்கு இந்த குறிப்பை நீங்கள் பற்றினால் உங்கள் வீட்டு செடி எப்போதும் ஜில்ஜிலுவென இந்த சொட்டு நீர் பாசன வசதியில் இருக்கும். சீக்கிரத்தில் வாடி போகாது.

சில பேர் வீட்டில் எல்லாம் பெண்கள் மட்டும் தான் இருப்பார்கள். மாதவிடாய் நாட்களில் துளசி செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற முடியாத சூழ்நிலை இருக்கும். அப்போது துளசி செடியை தொட மாட்டாங்க இல்லையா. மற்ற செடிகளை கூட மாதவிடாய் நாட்களில் தண்ணீர் ஊற்ற முடியாது.

இதையும் படிக்கலாமே: உங்க வீட்டில் மல்லி செடி, ரோஜா செடி மற்ற பூச்செடிகளுக்கு பூச்சி தொந்தரவு இருக்கா? செலவில்லாமல் இயற்கையாக இதை செஞ்சு பாருங்க ஒரு பூச்சி கூட பூச்செடியை நெருங்காது!

வீட்டில் இருக்கும் மற்றவர்களும் அந்த செடியை கவனிக்க மாட்டார்கள். அந்த சமயத்தில் கூட நீங்கள் இப்படி ஒரு பிளான் செய்து விட்டால் உங்கள் வீட்டுச் செடி வாடாமல் இருக்கும். மூன்றாவது நபரை கூப்பிட்டு செடிக்கு தண்ணீர் ஊற்ற சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இந்தப் பயனுள்ள வீட்டு தோட்டம் குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயம் ஒர்க் அவுட் ஆகும்.

- Advertisement -