காரிய தடைகள் நீங்கி, மங்களம் உண்டாகி, வீட்டில் எப்பொழுதும் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க, இந்த ஒரு செடி உங்கள் வீட்டில் இருந்தால் போதும்

nithya-kalyani-lakshmi
- Advertisement -

இயற்கை நமக்கு கொடுத்திருக்கும் அற்புதங்கள் பல உள்ளன. அவற்றில் அதிர்ஷ்டத்தை கொடுப்பதற்கும், உடலுக்கு ஆரோக்கியம் கொடுப்பதற்கும் என பல தாவர வகைகள் இருக்கின்றன. அதிலும் முக்கியமாக நித்தியகல்யாணி செடிக்கு இந்த இரு குணங்களும் சேர்ந்தே இருக்கின்றன. இவை பெரும்பாலும் சுடுகாட்டு பகுதியிலேயே அதிகம் வளருகின்றன. ஆனால் இவற்றிற்கு மிகவும் மங்களகரமான அற்புத சக்திகள் பல உள்ளன. அதனை பற்றி தான் இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

nithya-kalyani1

நித்தியகல்யாணி:
நித்யம் முயன்றால் தினம் தினம் என்று பொருள்படும். நித்திய கல்யாண பெருமாளுக்கு தினமும் திருமணம் நடைபெறும் எனவேதான் நித்ய கல்யாண பெருமாள் என பெயர் உள்ளது. அதேபோல் நித்தியமல்லி இந்தச் செடி தினமும் பூக்கள் பூக்ககூடிய தாவரமாகும். அதேபோல் நித்தியகல்யாணி செடியிலும் தினமும் மலர்கள் பூக்கின்றன. அதுமட்டுமல்லாமல் எப்பொழுதும் லட்சுமி கடாட்சம் நிறைந்ததாகவும் இருக்கும்.

- Advertisement -

இந்த நித்திய கல்யாணி செடியை வீட்டில் வளர்ப்பதா? வேண்டாமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. ஏனென்றால் பெரும்பாலும் இந்த செடி சுடுகாட்டு பகுதியிலேயே வளர்கிறது. இதற்குக் காரணம் சாம்பல் சத்து அதிகம் நிறைந்த இடத்திலேயே இதன் வளர்ச்சி அதிகமாக இருக்கும். இதனைத் தவிர வேறு எந்த எதிர்மறை காரணங்களும் கிடையாது. நமது வீடுகளில் எந்த செடி இருக்கின்றதோ, இல்லையோ முக்கியமாக இந்த நித்தியகல்யாணி செடி ஒன்று இருப்பது உங்கள் வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை அளிக்கக் கூடியதாக இருக்கும்.

nithya-kalyani2

நித்தியகல்யாணி செடி எங்கு இருக்கிறதோ அந்த இடத்தில் இறைவனது ஆசியும் இருக்கும். இந்த மலரை இறைவனுக்கு படைக்க வேண்டும் என்ற அவசியம் எதுவும் கிடைக்காது. இதன் வாசத்திற்கு இந்தச் செடி இருக்கும் இடத்திற்கே இறைவன் அதன் அருகில் வந்து விடுவார். இந்த செடியை வீட்டின் வெளிப்புறத்தில் வைத்து வளர்ப்பது என்பது மிகவும் நன்மையைத் தரும். ஏனெனில் தீய சக்திகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் அவற்றை வாசலிலேயே தடுத்து நிறுத்தி விடும்.

- Advertisement -

இந்த செடிக்கு லட்சுமி கடாட்சத்தை அள்ளித் தரக்கூடிய ஆற்றல் அதிகமாக இருக்கிறது. எப்பொழுதும் வீடு மங்களகரமாகவும், மகாலட்சுமியின் அருள் பெற்றும் இருக்கும். ஏதேனும் நல்ல காரியங்கள் தொடர்ந்து தடைப்பட்டு வந்திருந்தால் அதனை சரிசெய்ய நித்தியகல்யாணி செடியிலிருந்து சிறிதளவு மலர்களை பறித்து அவற்றை உங்கள் தலையணைக்கு அடியில் வைத்து உறங்கி வந்தால் தடைபட்ட காரியங்கள் நிச்சயம் நடைபெறும்.

nithya-kalyani

அதே போல் ஏதேனும் சொத்து சம்பந்தமான காரியங்கள் அல்லது வழக்கு சம்பந்தமான காரியங்கள் இவற்றுக்கு செல்லும் பொழுது சிறிதளவு நித்தியகல்யாணி மலர்களை பறித்து நீங்கள் செல்லும் வாகனம் அல்லது உங்கள் கைப்பைக்குள் வைத்துக் கொண்டால் நீங்கள் செல்லும் காரியம் நல்ல விதமாக முடியும்.

நித்திய மல்லிச் செடியின் வேர் பகுதியை எடுத்து அதனை பூஜை அறையில் வைத்து பூஜை செய்து விட்டு அதன் பின்னர் அதனை வீட்டு வாசலில் புதைத்துவிட வேண்டும். இவ்வாறு செய்வதனால் வீட்டிற்குள் எந்தவித தீய சக்திகளும் உள் நுழையாது.

nithya-malli

எனவே முடிந்தவரை உங்கள் வீட்டில் நித்தியகல்யாணி செடி வளர்ப்பது என்பது மிகவும் நன்மையை தரும். அவ்வாறு செடி வளர்ப்பதற்கு இடம் இல்லாதவர்கள் உங்கள் வீட்டு பால்கனியிலோ அல்லது மாடியிலோ சிறிய தொட்டியில் வைத்து வளர்த்து வருவது உங்கள் வீட்டிற்கு எப்பொழுதும் சிறப்பு வாய்ந்த பலன்களைக் கொடுக்கும்.

- Advertisement -